தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani Vakra 2023: சனி வக்ர நிவர்த்தி.. இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

Sani Vakra 2023: சனி வக்ர நிவர்த்தி.. இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

Suriyakumar Jayabalan HT Tamil
Oct 06, 2023 10:35 AM IST

சனிபகவானால் அதிர்ஷ்டம் பெற போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்.

சனிபகவான்
சனிபகவான்

சனிபகவான் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய தொடங்கினால் இரண்டரை ஆண்டு காலம் நகர மாட்டார். தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வரும் சனி பகவான், வக்ர நிலையில் பின்னோக்கி பயணம் செய்து வருகிறார்.

சனி பகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசிக்குள் நுழைந்துள்ளார். வரும் நவம்பர் நான்காம் தேதி வரை இதே நிலையில் பயணம் செய்கிறார். இதனால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

மிதுன ராசி

 

சனிபகவானின் வக்கிர நிவர்த்திக்கு பிறகு உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போவதாக கூறப்படுகிறது. மன சிக்கல்களில் இருந்து விடுபடலாம். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்புள்ளது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். இதுவரை நிலுவையில் இருந்த வழக்குகள் அனைத்தும் நிறைவடையும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.

ரிஷப ராசி

 

வக்ர நிவர்த்தி அடைந்த சனி பகவானின் பார்வை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை பெற்று தரும். இதுவரை அதிகரித்து வந்த செலவுகள் அனைத்தும் குறையும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த சிக்கல்கள் விலகும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். பணவரவிற்கு இந்த குறையும் இருக்காது.

சிம்ம ராசி

 

சனி பகவானின் சிறப்பு அருள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்புள்ளது. தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் வெற்றியை தேடி தரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கு சாதகமான சூழ்நிலை அதிகரிக்கும்.

கன்னி ராசி

 

புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வர போகின்றது சனியின் வக்ர நிவர்த்தி உங்களுக்கு பண வரவை அதிகரிக்க போகின்றது. லட்சுமி தேவியின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கும். நவம்பர் மாதம் உங்களுக்கு சிறப்பாக அமைய உள்ளது. வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். முன்னேற்றம் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்