Mercury Vakra Nivarthi:வக்ர நிவர்த்தி அடையும் புதன் பகவான்.. கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!
Mercury: புதன் பகவானால் எந்தெந்த ராசிகள் கவனமாக இருக்கவேண்டும் என்பது குறித்துப் பார்க்கலாம்.

Mercury: மீன ராசியில் புதன் பகவான் வக்ரமான முறையில் சஞ்சரித்து வருகிறார். இன்னும் சில நாட்களில் வரக்கூடிய ஏப்ரல் 25ஆம் தேதி, சாயரட்சை நேரத்தில் 5:50 மணிக்கு புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைய இருக்கிறார்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 28, 2025 07:00 AMBad Luck Rasis: கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்.. அஸ்தமனத்தில் சிக்கிய ராசி.. சனி உச்சம்!
Mar 28, 2025 06:35 AMஇரட்டை ராஜ யோகம்.. மீன ராசியில் சூரியன்.. அதிர்ஷ்ட மழையில் நனைய போகும் மூன்று ராசிகள்.. நல்ல லாபம் கிட்டும்!
Mar 28, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : சவால்களை தைரியமா எதிர் கொள்ளுங்கள்.. வெற்றி தேடி வரும்.. இன்று உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Mar 27, 2025 05:16 PMGuru: 2025-ல் பணத்தை அள்ளிக் கொடுக்க வருகிறார் குரு.. இந்த ராசிகள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்க போகுதா?
Mar 27, 2025 05:09 PMகிரகண யோகம்: 2027 வரை சனி விடமாட்டார்.. இந்த ஆண்டு முதல் யோகம் பெறுகின்ற ராசிகள்.. யார் அந்த ராசி?
Mar 27, 2025 12:03 PMLove Horoscope : உங்கள் துணை இன்று அதிக பதட்டமாக உணரலாம்.. 12 ராசிக்கும் இன்று காதல் வாழ்க்கை எப்படி இருக்கு? இதோ
இந்த புதன் பகவானின் வக்ர நிலையினால் சில ராசியினருக்கு உடல் நலம் பாதிக்கப்படும். வீண் பகை அதிகரிக்கலாம். எனவே, இந்த காலகட்டத்தில் பிரச்னைகளில் இருந்து விடுபட, யானை முகத்தானுக்கு அருகம்புல் சாற்றி வழிபடுவதும், தோப்புக் கரணம் போடுவதும் பிரச்னைகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும். பச்சை நிற ஆடைகளை அணிவது பிரச்னைகளை வெகுவாகக் குறைக்கும். புதனின் வக்ர நிலையால் அதிகம் கெடுதலைச் சந்திக்கக் கூடிய ராசிகள் குறித்துக் காண்போம்.
மேஷம்: மீன ராசி, மேஷ ராசிக்கு விரய ஸ்தானத்தில் உள்ளது. அங்கு புதன் பகவான் வக்ர நிவர்த்தியாவது பிரச்னைகளை கூடுதல் ஆக்கலாம். பணியிடத்தில் உங்களது உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க செய்யாது. உங்களது உழைப்பினை வைத்து, சிலர் பெயர் வாங்கிக் கொண்டு சென்றுவிடுவார்கள். புதிய வேலை தேடினாலும் இன்டர்வியூ வரை சென்று தட்டிபோகும். மின்னியல் மற்றும் இயந்திரவியல் சார்ந்த தொழில் முனைவோருக்கு போட்டியாளர்கள் அதிகரிப்பார்கள். கடன் கொடுத்தவர்களிடம் முறைப்படி, கடனை வசூலிக்காமல் விட்டுவிட்டால் இக்காலத்தில் கொடுத்த பணம் திரும்பிவராது. பிறரிடம் கலந்துரையாடினால் சண்டையில் முடியலாம். எச்சரிக்கை தேவை.
சிம்மம்: சிம்ம ராசியினருக்கு, புதனின் வக்ர நிலை துர்பாக்கியத்தையே தருகிறது. வாகனங்களில் பயணிக்கும்போது எச்சரிக்கை தேவை. நாம் நினைத்துப் பார்க்காத படபடப்பு இந்த காலத்தில் உண்டாகும். பொறுப்பாக இல்லாவிட்டால், காசு மற்றும் பணத்தை இழப்பீர்கள். தொழில் செய்பவர்களுக்கு அமைதியான பிரச்னையில்லாத சூழல் நிலவும். காதலை சொல்லுங்கள் என நண்பர்கள் தூண்டிவிட்டு, இக்காலத்தில் புரோபோஸ் செய்தால் தோல்வியில் முடியும். கல்யாணத்திற்குப் பெண் பார்ப்பவர்கள், இந்த காலகட்டத்தில் பார்க்காமல் இருப்பது நல்லது. அதனால், அந்த வேலையைத் தள்ளிப்போடுங்கள்.
விருச்சிகம்: விருச்சிக ராசியினருக்கு, புதன் பகவானின் வக்ரமான சூழலால், பிரச்னை உண்டாகும். தேவையற்ற குழப்பத்தால் சிக்கித் தவிப்பீர்கள். சமூகத்தில் கெட்டபெயரே அதிகம் கிடைக்கும். பணியிடத்தில் மேல் அதிகாரிகள் தரும் பணி அழுத்தத்தைச் சமாளிக்க முடியாமல் தவிப்பீர்கள். இக்கரைக்கு அக்கரை பச்சை கதையாக, உங்களிடம் இருக்கும் வசதி வாய்ப்புகளைவிட்டுவிட்டு, அதைத் தவறவிட்டபின், அதனை தொலைத்துவிட்டோமே என வருத்தப்படுவீர்கள். பணியிடத்தில் உங்களது குறைகளை லென்ஸ் போட்டு கண்டுபிடித்து, அதனை பெரிதாக்கி, மேல் அதிகாரிகளிடம் போட்டுக் கொடுக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால், மனச்சோர்வு ஏற்படும். வீண் செலவுகள் கூடும்.
மீனம்: இந்த ராசியினருக்கு, புதன் பகவானின் வக்ர நிலையில் பிரச்னை அவ்வளவு கூடும். தொழில் செய்பவர்களுக்கு வியாபாரம் சுணக்கமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆவதில் இழுபறி இருக்கும். வாடிக்கையாளரிடமிருந்து பணத்தை எளிதாக வாங்க முடியாது. வீண் அலைக்கழித்தல் ஏற்படும். வீட்டில் தேவையற்ற மனக்கசப்புகள் வந்துபோகும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்