Vinayagar Chaturthi: விநாயகர் சதுர்த்தி அன்று நிலாவை பார்க்க பயப்படும் வட இந்தியர்கள்! ஏன் தெரியுமா?-the mystery behind north indians avoiding the moon on vinayagar chaturthi - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Vinayagar Chaturthi: விநாயகர் சதுர்த்தி அன்று நிலாவை பார்க்க பயப்படும் வட இந்தியர்கள்! ஏன் தெரியுமா?

Vinayagar Chaturthi: விநாயகர் சதுர்த்தி அன்று நிலாவை பார்க்க பயப்படும் வட இந்தியர்கள்! ஏன் தெரியுமா?

Kathiravan V HT Tamil
Sep 03, 2024 05:12 PM IST

Vinayagar Chaturthi: ஜோதிட சாஸ்திரப்படி சதுர்த்தி திதியில் சந்திரனை பார்க்க கூடாது என்பது வட இந்தியாவில் ஐதீகம் ஆக உள்ளது. த்ரிக் பஞ்சாங்கத்தின் படி, சதுர்த்தி திதியின் ஆரம்பம் மற்றும் முடிவின் அடிப்படையில் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு சந்திரனைப் பார்ப்பது கூடாது.

Vinayagar Chaturthi: விநாயகர் சதுர்த்தி அன்று நிலாவை பார்க்க பயப்படும் வட இந்தியர்கள்! ஏன் தெரியுமா?
Vinayagar Chaturthi: விநாயகர் சதுர்த்தி அன்று நிலாவை பார்க்க பயப்படும் வட இந்தியர்கள்! ஏன் தெரியுமா?

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் ஒன்று முதல் மூன்று நாட்களி வரையும், வட இந்தியாவில் பத்து நாட்கள் வரையிலும் இந்த விழா கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. 

ஜோதிட சாஸ்திரப்படி சதுர்த்தி திதியில் சந்திரனை பார்க்க கூடாது என்பது வட இந்தியாவில் ஐதீகம் ஆக உள்ளது. த்ரிக் பஞ்சாங்கத்தின் படி, சதுர்த்தி திதியின் ஆரம்பம் மற்றும் முடிவின் அடிப்படையில் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு சந்திரனைப் பார்ப்பது கூடாது. குறிப்பாக சம்பூர்ண சதுர்த்தி திதியில் சந்திரனை தரிசனம் செய்வது முற்றிலும் தடைசெய்யப்பட்டு உள்ளது.

விநாயக சதுர்த்தி அன்று சந்திர தரிசனம் தடை செய்யப்பட்டுள்ளது ஏன்?

விநாயகர் சதுர்த்தில் நாள் அன்று சந்திர பகவானை தரிசனம் செய்து தரிசனம் செய்யும் நபரின் மீது தவறான குற்றச்சாட்டுக்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது. இந்த நாளில் சந்திரனைப் பார்ப்பவர் திருட்டு உள்ளிட்ட தவறான குற்றச்சாட்டுக்களை சந்திக்க நேரிடும். 

பின்னணியில் உள்ள கதை 

புராணங்களின் படி, கிருஷ்ணர் சியமந்தக் என்ற விலையுயர்ந்த ரத்தினத்தை திருடியதாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டார். பொய்க் குற்றச்சாட்டில் சிக்கிய கிருஷ்ணரின் நிலையைக் கண்ட நாரத முனிவர், பத்ரபத சுக்ல சதுர்த்தி நாளில் கிருஷ்ணர் சந்திரனைக் கண்டதாகக் கூறினார், அதனால் அவர் பொய்யான குற்றச்சாட்டால் சபிக்கப்பட்டார்.

பாத்ரபத சுக்ல சதுர்த்தியின் போது சந்திரனைப் பார்ப்பவர் பொய்யான சாபத்திற்கு ஆளாக நேரிடும் என்றும், சமூகத்தில் பொய்யான திருட்டுக் குற்றச்சாட்டால் கறைபடுவார் என்றும் விநாயகப் பெருமான் சந்திர கடவுளை சபித்ததாக நாரத ரிஷி கிருஷ்ணரிடம் கூறினார். நாரத முனிவரின் ஆலோசனையின் பேரில், கிருஷ்ணர் தவறான தோஷங்களைப் போக்க விநாயக சதுர்த்தி விரதத்தைக் கடைப்பிடித்து, தவறான தோஷங்களில் இருந்து விடுபட்டார் என்பது நம்பிக்கை.

மித்ய தோஷ நிவாரண மந்திரம்

த்ரிக் பஞ்சாங்கத்தின் படி, விநாயக சதுர்த்தி நாளில் தவறுதலாக சந்திரன் தென்பட்டால், மித்ய தோஷத்தைத் தவிர்க்க, 'சிங் ப்ரஸேனாம்வாதித்ஸிங்கோ ஜாம்பவதா ஹதா'. ஸுகுமாராக் மரோதிஸ்தவா ஹ்யேஷ ஸ்யமந்த என்ற மந்திரம் ஜெபிக்க வேண்டும்.

விநாயக சதுர்த்தி அன்று இந்த நேரத்தில் சந்திரனை பார்க்க வேண்டாம் - பஞ்சாங்கத்தின் படி, 07 செப்டம்பர் 2024 அன்று காலை 09:29 முதல் இரவு 08:44 வரை சந்திரனைப் பார்ப்பதற்கு தடைசெய்யப்பட்ட நேரம். இந்த கால அளவு 11 மணி 15 நிமிடங்கள் ஆகும்.