தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: வெள்ளத்தில் மிதந்து வந்த பெட்டி.. பாதி உருவத்தில் காட்சி கொடுத்த காளி.. கோயிலில் இடம் கொடுத்த சுந்தரேஸ்வரர்

HT Yatra: வெள்ளத்தில் மிதந்து வந்த பெட்டி.. பாதி உருவத்தில் காட்சி கொடுத்த காளி.. கோயிலில் இடம் கொடுத்த சுந்தரேஸ்வரர்

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 01, 2024 06:00 AM IST

HT Yatra: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள கொரோநாட்டுக் கருப்பூர் அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலில் வீச்சு இருக்கக்கூடிய சிவபெருமான் சுந்தரேஸ்வரர் எனவும் தாயார் அபிராமி எனவும் அழைக்கப்பட்டு வருகின்றனர்.

வெள்ளத்தில் மிதந்து வந்த பெட்டி.. பாதி உருவத்தில் காட்சி கொடுத்த காளி.. கோயிலில் இடம் கொடுத்த சுந்தரேஸ்வரர்
வெள்ளத்தில் மிதந்து வந்த பெட்டி.. பாதி உருவத்தில் காட்சி கொடுத்த காளி.. கோயிலில் இடம் கொடுத்த சுந்தரேஸ்வரர்

மன்னர்கள் காலம் தொட்டு இன்று வரை சிவபெருமானுக்கு வழிபாடுகள் நடத்தப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. மிகப்பெரிய மன்னர்களாக இந்தியாவின் தெற்கு பகுதியை ஆண்டு வந்த பாண்டியர் மற்றும் சோழர்களுக்கு சிவபெருமான் குலதெய்வமாக விளங்கி வந்துள்ளார்.

மிகப்பெரிய சோழ மன்னன் ஆக விளங்கிய ராஜராஜசோழன் கட்டிய திருக்கோயில் தஞ்சை பெருவுடையார் கோயில் இன்று வரை அதற்கு சாட்சியாக திகழ்ந்து வருகிறது. இதுபோல எத்தனையோ மன்னர்கள் கட்டிய கோயில்கள் இன்று வரை காலத்தால் அழிக்க முடியாத அளவிற்கு கம்பீரமாக நின்று வருகின்றன.

அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள கொரோநாட்டுக் கருப்பூர் அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலில் வீச்சு இருக்கக்கூடிய சிவபெருமான் சுந்தரேஸ்வரர் எனவும் தாயார் அபிராமி எனவும் அழைக்கப்பட்டு வருகின்றனர். கோயிலில் இருக்கக்கூடிய தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.

தல சிறப்பு

இந்த கோயிலில் இடுப்புக்கு மேல் உள்ள உருவத்தை கொண்ட காளியை அனைவரும் தரிசிக்க முடியும். இந்த கோயில் சோழர்களால் கட்டப்பட்டது என கூறப்படுகிறது. மார்பு வரை இருக்கக்கூடிய காளியம்மன் உருவம் பெட்டியில் அடைக்கப்பட்டு விசேஷ நாட்களில் பூஜை செய்யப்படுகிறது குறிப்பாக வெள்ளிக்கிழமை ராகு கால நேரத்தில் பெட்டியில் இருக்கக்கூடிய காளிக்கு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

எமலிங்கம் ஒன்றை நிறுவி சிவபெருமானை பிரம்மதேவன் வழிபாடு செய்து கொண்டுள்ளார். அதற்குப் பிறகு வேண்டுதலை நிறைவேற்றும் படி சிவபெருமான் அவருக்கு ஞான உபதேசம் செய்துள்ளார். இந்திரன் உள்பட அனைத்து தேவர்களும் வழிபட்ட தலமாக இந்த தலம் விளங்கி வருகிறது.

தல வரலாறு

இந்த திருக்கோயிலில் இருக்கக்கூடிய பெட்டி காளியம்மன் தான் மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. ஒருமுறை காவிரி கரையில் ஊர் மக்கள் கூடி இருக்கும் நேரத்தில் வெள்ளத்தில் ஒரு பெட்டி மிதந்து வந்துள்ளது. அந்த பெட்டியை அனைவரும் திறந்து பார்க்கும் பொழுது அதில் மரத்தில் செய்யப்பட்ட காளியின் சிலை இருந்துள்ளது. முழு உருவமாக இல்லாமல் மார்பளவு மட்டுமே அந்த சிலை இருந்துள்ளது.

இதை என்ன செய்வது என்று தெரியாமல் பொதுமக்கள் யோசித்துள்ளனர். திடீரென ஒரு சிறுமிக்கு அருள் வந்து அந்த காளியின் சிறப்புகள் குறித்து எடுத்துக் கூறியதாக கூறப்படுகிறது. விக்ரமாதித்த மன்னன் பூஜை செய்து வழிபட்ட மகா காளிதான் இவர். அவரே இந்த சிலையை இரண்டாக பிரித்து ஒரு பகுதியை ஆற்றில் விட்டுவிட்டார். அனைத்து இடங்களிலும் சுற்றித் திரிந்து வெள்ளத்தின் காரணமாக கடைசியில் இந்த காவிரி கரைக்கு வந்துள்ளது. இதை நான் சொல்வது படி பூஜை செய்யுங்கள் என அனைத்தையும் அந்த சிறுமி கூறியுள்ளார்.

அதற்குப் பிறகு அந்த ஊரின் தெற்கு பகுதியில் ஒரு குடிசை போட்டு அதனுள் இந்த பெட்டியை வைத்து பொதுமக்கள் வழிபாடு செய்து கொண்டுள்ளனர். வெள்ளிக்கிழமை தோறும் அன்னபிரசாதங்களை பள்ளயம் செய்த பிறகு பெட்டியை திறந்து காளியம்மனுக்கு வழிபாடுகளை செய்துள்ளனர்.

ஒருநாள் திடீரென வந்து குடிசை தீப்பிடித்து எறிந்து விட்டது. உள்ளே இருந்த பெட்டியை ஊர் மக்கள் காப்பாற்றி வெளியே எடுத்து வந்து விட்டனர். இது குறித்து என்ன செய்வது என்பது தெரியாமல் அப்போது அங்கே வந்திருந்த காஞ்சி காமகோடி பீடாதிபதியை பொதுமக்கள் அணுகி கேட்டுள்ளனர்.

இப்போதும் அம்பிகை சிவபெருமானின் கோயிலில் தான் இருக்க வேண்டும் உங்கள் ஊரில் இருக்கக்கூடிய சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் மகாகாளிக்கு என தனி இடம் இருக்கும் சென்று பாருங்கள். அங்கே இந்த பெட்டியை வைத்து விட்டு பிரதிஷ்டை செய்து சுந்தர மகா காளி என ஆராதியுங்கள் என பீடாதிபதி கூறியுள்ளார்.

அம்பிகைக்கு செய்யப்படும் பூஜை முறையை மாற்ற வேண்டாம் என கூறியுள்ளார். அன்றைய காலகட்டத்தில் இந்த ஊர் திருப்பாடல் வனம் என அழைக்கப்பட்டுள்ளது அதற்குப் பிறகு காளி தரிசனம் கிடைத்ததால் காளியூர் என அழைக்கப்பட்டு பின்னர் கருப்பூர் என மாற்றப்பட்டுள்ளது. பாதி உருவத்துடன் காலில் வந்தடைந்த காரணத்தினால் இது கொரநாட்டுக் கருப்பூர் என அழைக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9