Swathi Natchathiram : நரசிம்ம பெருமாள் அவதரித்த சுவாதி நட்சத்திரத்தின் ரகசியம்.. குணநலன்கள் மற்றும் வழிபாடு இதோ!-swathi natchathiram here is the secret of swathi nakshatra incarnated by lord narasimha properties and remedy - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Swathi Natchathiram : நரசிம்ம பெருமாள் அவதரித்த சுவாதி நட்சத்திரத்தின் ரகசியம்.. குணநலன்கள் மற்றும் வழிபாடு இதோ!

Swathi Natchathiram : நரசிம்ம பெருமாள் அவதரித்த சுவாதி நட்சத்திரத்தின் ரகசியம்.. குணநலன்கள் மற்றும் வழிபாடு இதோ!

Pandeeswari Gurusamy HT Tamil
Sep 21, 2024 02:34 PM IST

Swathi Natchathiram :சுவாதி ராசிக்காரர்களில் செய்யும் நல்லதோ, கெட்டதோ யாராலும் கண்டுபிடிக்க முடியாது அவங்களாக மனம் வந்து சொன்னாதான் கண்டுபிடிக்க முடியும் என்பதுதான் உண்மை. சுவாதிக்கு ஒரே ஒரு மைனஸ் உள்ளது. தவறு செய்யறதுக்கு சந்தர்ப்பங்கள் அக்கேஷனலா அமைஞ்சிருச்சுன்னா தவறுக்குள்ள நுழைஞ்சிருவாங்க.

Swathi Natchathiram : நரசிம்ம பெருமாள் அவதரித்த சுவாதி நட்சத்திரத்தின் ரகசியம்.. குணநலன்கள் மற்றும் வழிபாடு இதோ!
Swathi Natchathiram : நரசிம்ம பெருமாள் அவதரித்த சுவாதி நட்சத்திரத்தின் ரகசியம்.. குணநலன்கள் மற்றும் வழிபாடு இதோ!

சுவாதி ராசிக்காரர்களில் செய்யும் நல்லதோ, கெட்டதோ யாராலும் கண்டுபிடிக்க முடியாது அவங்களாக மனம் வந்து சொன்னாதான் கண்டுபிடிக்க முடியும் என்பதுதான் உண்மை. சுவாதிக்கு ஒரே ஒரு மைனஸ் உள்ளது. தவறு செய்யறதுக்கு சந்தர்ப்பங்கள் அக்கேஷனலா அமைஞ்சிருச்சுன்னா தவறுக்குள்ள நுழைஞ்சிருவாங்க. அது இல்லாமல் பார்த்துகொண்டால் இவங்க வாழ்க்கைக்கு நல்லது.

நரசிம்மப் பெருமான் அவதரித்த நட்சத்திரம்

சுவாதிங்கிறது நரசிம்மப் பெருமான் அவதரித்த நட்சத்திரம். தேவகுணம். சில நேரங்களில் ரொம்ப பொறுமையாக இருப்பார்கள். சில நேரங்கள்ல அளவுக்கு அதிகமாக கோபம் கொள்வார்கள். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்க்ள எந்த நேரத்தில் எப்படி இருக்காங்கன்னு யாருக்குமே தெரியாது. கோபம் பிளிரும் பயங்கரமா வரும். கர்வம், கௌரவம் அதிகமான நட்சத்திரம் சுவாதி. இவங்களை ஒரு வார்த்தை சொன்னால் திரும்பி கூட பார்க்க மாட்டாங்கள். இவங்களை ஆராதிச்சீங்கன்னா இவங்கள மாதிரி உங்களுக்கு ஹெல்ப் பண்றதுக்கு உலகத்திலேயே ஆள் கிடையாது.

சுவாதி அருமையான நட்சத்திரம் சுவாதினாலே வால் என்று அர்த்தம். இவங்கள பார்த்து நடத்த வேண்டும். இல்லனா கத்தியை கையை கிழிக்கணுங்கிற மாதிரி. ஒண்ணுமே தெரியாத மாதிரி இருப்பாங்க எல்லா அறிவும் இருக்கும்.

சுவாதி மரம் - மரம்

மருதமலை மருதமரங்கள் நிறைந்த சுவாதி நட்சத்திரக்காரர்கள் மருத் மரங்கள் நிறைந்த மருதமலை , திருவிடை மருதூர் போன்ற ஆன்மீக தலங்களுக்கு அடிக்கடி போய் வருவது நல்லது. எங்கேயாவது ஸ்தல விருட்சமாக இருந்தால் சுவாதி நட்சத்திரக்காரர்கள் அங்கு சென்று வழிபடலாம்.

ஆண் எருமை

சோம்பேரித்தனம் இருக்கும். ஆனால் அடுத்தவங்களுக்கு வேலை செய்ய சொன்னால் பம்பரமாக சுழல்வார்கள். சுவாதி நட்சத்திரக்காரங்களுக்கு அப்பாவை மிகவும் பிடிக்கும்.

சுவாதி நட்சத்திரக்காரரோட தந்தையார் இடம் நிலம் பூர்வீக வீடு எல்லாம் பிரயோஜனம் இல்லாம இருக்கும். அந்த நட்சத்திரத்துல சூரியன் நீசம் ஆகுறார். குழந்தை பிறப்பு தள்ளி போகும். முதல் குழந்தையால மனவருத்தம் அடைவாங்க. குழந்தை இல்லாதவங்க அவங்க வம்சாவழியில யாராவது இருப்பார்கள். கொஞ்ச வயசுல இறந்தவங்க இருப்பார்கள். குழந்தை பிரிஞ்சு வாழ்றவங்க இருப்பார்கள். மனநிலை பாதிக்கப்பட்டவங்க இருப்பார்கள். அதேபோல அரசு பணியில் இருக்கிறவங்க இருப்பார்கள். அந்த பணியை தொடர்ந்து பண்ண முடியாதவங்க இருப்பார்கள். இதெல்லாம் சுவாதிக்க அப்படியே தத்துருவமா பொருந்தி வரும்.

தேனீ

தேனிதான் சுவாதி. அப்ப கூட்டு குடும்பமாக வாழ்ந்தவர்கள் கூட்டு குடும்பமாக இருக்க விருப்பப்படுபவர்கள். சுவாதி நட்சத்திரத்திரகாரர்கள் இருக்கும் இடத்துல கசகச கசகசன்னு கூட்டம் இருந்துகிட்டே இருக்கும். சுவாதி ராகுவோட நட்சத்திரம். எப்பவுமே பிரம்மாண்ட சிந்தனை தான். இவர்கள் செருப்பு பிரியர்கள். விதவிதமா இருக்கணும்னு ஆசைப்படுவாங்க. பெண்கள் தங்களை அழகாக வைத்து கொள்ள நினைப்பார்கள். ஆண்கள் சுவாதியில் இருந்தால் வாட்ச், மோதிரம் போடுவதில் கவனாக இருப்பார்கள்.

சுவாதி ராகுவோட நட்சத்திரம்

சுக்கிரனோட வீட்ல ராகு இருப்பதால் சிற்றின்ப பிரியர்கள்களாக இருப்பார்கள். ஒரு காலத்துல நொறுக்கு தீனியால ரொம்ப அவஸ்தப்படுவாங்க சுவாதி நட்சத்திரக்காரங்களுக்கு டீ, காபி விருப்பம் கம்மி பண்ணிக்கிறது நல்லது

சுவாதியில் இருக்காங்க நரசிம்மர் மாதிரிதான். ஆபத் பாண்டவர்கள். யாருக்காவது உதவினு கேட்டால் முதல் ஆளாக நிற்பார்கள். சுவாதியில் பிறந்தவர்கள் ராகு திசையிலேயே பிறக்கிறதுனால அவங்க பிறந்த உடனே அந்த குடும்பம் ஒரு படாத கஷ்டப்பட்டு தான் மேல ஏறும். முக்கியமான பாட்டி தாத்தா முக்கியமான உறவுகள் எல்லாம் இழக்க நேரிடும். சுவாதியில் பிறந்தவங்களுக்கு அதுக்கப்புறம் தான் வளர்ச்சி இருக்கும். ஊர் விட்டு ஊரு மாதிரி வந்தோம் இடம் மாறி வந்தோம் ஒரு இடம் வாங்கினோம் வித்துட்டோம் என்பது போன்ற காரியங்கள் நடக்கும்.

பிரம்மாண்டமா பேராசை படாம இருக்கணும். ஒரு ஸ்டேட்டஸ்ல இப்படி இருக்கணும், இப்படி வாழணும் மத்தவங்க முன்னாடி நம்ம இப்படி இருக்கணும் நம்மள மத்தவங்க எல்லாம் மதிக்கணும் நம்மள பார்க்கணும் அப்படிங்கிற எண்ணங்கள் உயர்வுகள் அதிகம் உடையவர்கள். சுவாதி பெண்ணா ஆண்களாக இருந்தால் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தால் உங்க மனைவி மேல அதீத பற்று உடையவர்களாக இருப்பீர்கள். மனசாட்சிக்கு பயந்தவர்கள். ஆனா இவங்களுக்கு பெண்களால தான் கர்மா அதிகமா சேரும் கவனமா இருக்கணும்.

சுவாதி ராகுவின் நட்சத்திரம் சனி உச்சமாகிற நட்சத்திரம். சூரியன் நீசமாகிற நட்சத்திரம் தந்தையாருக்கு கொஞ்சம் போராட்டம். இவங்க சித்தப்பாவுக்கு மூத்த சகோதரி இருந்தா போராட்டம். நிம்மதி இருக்காது ஒரு போராட்ட வாழ்க்கை இருக்கும். சில நேரம் குலதெய்வமே குழப்பமா இருக்கும். குலதெய்வத்துக்கே போக முடியலைங்கிற மாதிரி எல்லாம் இருக்கும். சுவாதி நட்சத்திர அன்பர்களுக்கு குழந்தைகளால் ஏதேனும் ஒரு விதத்தில் கசப்பு ஏற்படலாம். குழந்தையை நினைச்சு ஃபீல் பண்ண பண்ணாத சுவாதி இல்லை. சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவங்க நகம் வளர்த்துறதுக்கு ஆசைப்படுவார்கள்.

வழிபாடு

நீங்கள் வழிபட வேண்டிய தெய்வம் சுவாதி நட்சத்திரத்தன்று நரசிம்மர் வழிபாடு செய்வது விஷேசம். ஒரு வளர்ச்சியை நோக்கி போகலாம். நாமக்கல் நரசிம்மர் சிங்கரிகுடி, பூவரசங்குப்பம், பரிக்கள், அரக்கோணம் பக்கத்தில் இருக்கிற மலை மேல இருக்கிற சோலிங்கர் போன்ற நரசிம்மர் வழிபாடுகள் மிகுந்த பலன் தரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

ஆன்மீகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்