Swati Nakshatram: ‘இதமாக பேசி பதமாக கவருவதில் வல்லவர்கள்!’ சுவாதி நட்சத்திரத்தின் பலன்கள் இதோ!
“இதமாக பேசும் தன்மை கொண்ட இவர்களுக்கு சமையல் நன்றாக வரும். சுவையான உணவுகளை விரும்பி சாப்பிடுவதில் இவர்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும்”
சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு வரும் வாழ்கை துணை திடகாத்திரம், செல்வ செழிப்பு உடைவர்களாக இருப்பார்கள். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணத்திற்கு பிறகு உயர்ந்த இடங்களை அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.
சமூகத்தில் முக்கிய புள்ளியாக திகழ வாய்ப்பு உள்ள சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு தர்ம சிந்தனை, கடவுள் பயம் ஆகியவை அதிகம் இருக்கும்.
இதமாக பேசும் தன்மை கொண்ட இவர்களுக்கு சமையல் நன்றாக வரும். சுவையான உணவுகளை விரும்பி சாப்பிடுவதில் இவர்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும்.
கூடாநட்பு, முறையற்ற தொடர்புகள் ஆகியவை ஏற்பட இவர்களுக்கு அதிக வாய்ப்புகள் உண்டு என்பதால் இவர்கள் பழகுவதில் கவனமாக இருக்க வேண்டும்.
சுறுசுறுப்பாக இருக்கும் இவர்கள், பணி செய்வதில் ஆர்வம் அதிகம் காட்டுவார்கள். சுவாதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு அறிவு அதிகமாக இருக்கும். இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை நன்றாக கையாளும் கலையை நன்கு கற்று வைத்து இருப்பார்கள். சுவாதி மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மக்களை ஈர்க்க வேண்டும் என்ற எண்ணம் அதிகம் இருக்கும். சுவாதி நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பாக வேலை செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
தேவ கணம் பொருந்திய ஆண் நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தின் விளங்காக எருமைக் கிடா உள்ளது. இந்த நட்சத்திரத்தின் மரமாக மருத மரம் உள்ளது. இவர்களுக்கு வாசனை திரவியங்களை பயன்படுத்துவது பிடிக்கும். சுவாதி நட்சத்திரத்தில் பறவையாக தேனி உள்ளது.
மகிழ்ச்சி எங்கு நிறைந்து இருக்கிறதோ அங்கெல்லாம் சுவாதி நட்சத்திரக்காரர்கள் இருப்பார்கள் என்று சொல்லலாம்.
சென்னையை அடுத்த சித்துக்காடு எனும் ஊரில் உள்ள தாத்ரீஸ்வரர் கோயிலில் உள்ள சிவபெருமானை இவர்கள் வணங்கி வர இவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும். சுவாதி நட்சத்திரக்காரர்கள் வசிக்கும் இடத்தின் அருகில் உள்ள சிவாலயங்களில் வழிபாடு செய்வது நன்மைகளை பெற்றுத்தரும்.
வாயு பகவான், ஸ்ரீநரசிம்மர் ஆகியொர் சுவாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் என புராணங்கள் கூறுகின்றது.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் தசையாக ராகு மகாதிசையும், இரண்டாவதாக குரு மகாதிசையும் நடைபெறும்.
சுவாதி நட்சத்திரம் அஸ்த நட்சத்திரக்காரர்களை ஈர்ப்பார்கள். ஆனாலும் ரஜ்ஜு பொறுத்தம் இல்லாததால் இவர்களை திருமணம் செய்து கொள்ள முடியாது.
சுவாதி நட்சத்தித்தில் பிறந்தவர்களுக்கு அனுகூலமான தசாகாலங்களாக குரு தசை, குரு புத்தி, புதன் தசை, புதன் புத்தி, சுக்ர தசை, சுக்ர புத்தி, சந்திர மகா தசை, சந்திர புத்தி, செவ்வாய் தசை, செவ்வாய் புத்தி ஆகியவை உள்ளது.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.