’துலாம் ராசிக்கு லாட்டரி யோகம் அடிக்குது! செல்வம் பெருகுது!’ சுக்கிர பெயர்ச்சி பலன்கள்!
துலாம் ராசியின் அதிபதியான சுக்கிர பகவான் 2ஆம் இடத்தில் இருந்து சங்கடங்களை கொடுத்த நிலையில் 3ஆம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகி இருப்பது நன்மைகளை தரும். அஷ்டமத்து குருவால் இருந்த சிக்கல்கள் தீரும் காலம் இது.
நவகிரகங்களில் அசுர குரு எனப்படும் சுக்கிர பகவானுக்கு தனி இடம் உண்டு. பொருள் சேர்க்கை, திருமணம், மகிழ்ச்சி, கலை, திறமை, அழகு, காதல், காமம், ஆடைகள், அலங்காரம், ஆபரணங்கள் ஆகியவற்றின் காரகத்துவம் கொண்ட கிரகமாக சுக்கிரன் உள்ளார். ஜோதிடத்தில், கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கிரகங்களின் இயக்கம் மாறுவது அனைத்து ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது.
துலாம் ராசியும் சுக்கிரனும்
துலாம் ராசியின் அதிபதியான சுக்கிர பகவான் 2ஆம் இடத்தில் இருந்து சங்கடங்களை கொடுத்த நிலையில் 3ஆம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகி இருப்பது நன்மைகளை தரும். அஷ்டமத்து குருவால் இருந்த சிக்கல்கள் தீரும் காலம் இது.
இதுவரை வாழ்கை மற்றும் தொழிலில் இருந்து வந்த தடைகள் நீங்கும். வேலை மாற்றம், இடமாற்றம், வீடு மாற்றம் உண்டாகும். சுக்கிரன் பார்வையால் பாக்கிய ஸ்தானம் வலுப்படும். தந்தை, மாமனார் வழி உறவுகள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
வெளியூர், வெளிநாடு பயணங்கள் அனுகூலங்களை பெற்றுத் தரும். உங்கள் பேச்சில் வலிமை பெருகும். பங்குச்சந்தை முதலீடுகள் லாபத்தை கொடுக்கும். இளைய சகோதரர் மற்றும் சகோதரிகள் வழியில் அனுகூலங்கள் கிடைக்கும். வங்கி மற்றும் வங்கி சார்ந்த விஷயங்களில் இருந்த தடை தாமதங்கள் விலகும். சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் தீரும்.
புதிய தொழில்களை தொடங்க நல்ல காலம். வேலையாட்கள் மூலம் லாபம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் தொழில் சிறக்கும். அரசு வேலை தேடுபவர்களுக்கு வெற்றிகள் கிடைக்கும். அரசியல் மற்றும் அரசாங்கத் தொடர்புகள் மூலம் ஆதாயம் கிடைக்கும். உபத் தொழில்கள் மூலம் கிடைக்கும் வருமானம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். முருக வழிபாடு வாழ்கையில் வசந்தங்களை கொண்டு வந்து சேர்க்கும்.
பரிவர்தனை யோகம்
விருச்சிகம் ராசியில் இருந்த சுக்கிர பகவான் நவம்பர் 8ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 3 வரையிலான 26 தனுசு ராசியில் வாசம் செய்ய உள்ளார். சுக்கிரன் அதிபதியாக உள்ள ரிஷபம் ராசியில் குரு பகவானும், குரு பகவான் அதிபதியாக உள்ள தனுசு ராசியில் சுக்கிர பகவானும் அமர்ந்து பரிவர்தனை யோகத்தை உண்டாக்கி உள்ளனர். இந்த யோகம் ஆட்சிக்கு இணையான பலன்களை கொடுக்கும் என்பது ஜோதிட விதியாக உள்ளது.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.