2ஆம் இட சுக்கிரனால் மகாலட்சுமி யோகம் பெரும் விருச்சிகம் ராசி! சுக்கிர பெயர்ச்சி பலன்கள்!
விருச்சிகம் ராசிக்கு ராசிநாதன் ஆன செவ்வாய் பகவான் நீசம் பெற்று உள்ளார். ஆனால் சுக்கிர பெயர்ச்சி யோகம் உண்டாக்கும் காலம் ஆகும். திடீர் அதிர்ஷ்டம் மூலம் உங்கள் செல்வ நிலை உயரும். நீண்ட நாட்களாக வில்லங்கத்தில் இருந்த சொத்து சார்ந்த பிரச்னைகள் தீரும்.

நவகிரகங்களில் அசுர குரு எனப்படும் சுக்கிர பகவானுக்கு தனி இடம் உண்டு. பொருள் சேர்க்கை, திருமணம், மகிழ்ச்சி, கலை, திறமை, அழகு, காதல், காமம், ஆடைகள், அலங்காரம், ஆபரணங்கள் ஆகியவற்றின் காரகத்துவம் கொண்ட கிரகமாக சுக்கிரன் உள்ளார். ஜோதிடத்தில், கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கிரகங்களின் இயக்கம் மாறுவது அனைத்து ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது.
இது போன்ற போட்டோக்கள்
May 13, 2025 06:29 AM'வெற்றியில் மிதக்கும் யோகம் உங்களுக்கா.. கவனமாக இருக்க வேண்டியது யார்' மேஷம் முதல் மீனம் வரையான ராசியினரே இன்று சாதகமா!
May 12, 2025 12:18 PMபுத்த பூர்ணிமா நாளான இன்று உருவாகும் யோகம்.. எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும்?
May 12, 2025 05:00 AM"லாபத்தில் மிதக்கும் யோகம் யாருக்கு.. மகிழ்ச்சியில் சாத்தியமா" இன்று மே 12 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க
May 11, 2025 02:57 PMநவ பஞ்சம ராஜ யோகம்.. இந்த 3 ராசிகளும் அதிர்ஷ்டத்தின் முகவரி.. பண ஆதாயம், வாழ்க்கையில் வெற்றி
May 11, 2025 07:00 AMகுரு சுக்கிரன் பலன்கள்: பணமழை கஜலட்சுமி யோகம்.. குரு சுக்கிரன் கொட்டி தீர்க்கும் ராசிகள்..!
May 11, 2025 04:45 AM'மேஷம் முதல் மீனம் வரை.. மே 11ஆம் தேதி எப்படி இருக்கப்போகிறது..’: 12 ராசிகளுக்கான பலன்கள்!
பரிவர்தனை யோகம்
விருச்சிகம் ராசியில் இருந்த சுக்கிர பகவான் நவம்பர் 8ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 3 வரையிலான 26 தனுசு ராசியில் வாசம் செய்ய உள்ளார். சுக்கிரன் அதிபதியாக உள்ள ரிஷபம் ராசியில் குரு பகவானும், குரு பகவான் அதிபதியாக உள்ள தனுசு ராசியில் சுக்கிர பகவானும் அமர்ந்து பரிவர்தனை யோகத்தை உண்டாக்கி உள்ளனர். இந்த யோகம் ஆட்சிக்கு இணையான பலன்களை கொடுக்கும் என்பது ஜோதிட விதியாக உள்ளது.
விருச்சிகமும் சுக்கிரனும்
விருச்சிகம் ராசிக்கு ராசிநாதன் ஆன செவ்வாய் பகவான் நீசம் பெற்று உள்ளார். ஆனால் சுக்கிர பெயர்ச்சி யோகம் உண்டாக்கும் காலம் ஆகும். திடீர் அதிர்ஷ்டம் மூலம் உங்கள் செல்வ நிலை உயரும். நீண்ட நாட்களாக வில்லங்கத்தில் இருந்த சொத்து சார்ந்த பிரச்னைகள் தீரும்.
சுக்கிரன் 2ஆம் இடத்திற்கு வந்து உள்ளதால் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானங்கள் மூலம் ஆதாயமும் அனுகூலமும் உண்டாகும். குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும். புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். சனி பகவான் வக்ர நிவர்த்தி பெறுவது கூடுதல் நன்மைகளை ஏற்படுத்தி தரும்.
திருமணமும் மகாலட்சுமி யோகமும்!
வங்கி சார்ந்த விவகாரங்களில் இருந்த சிக்கல்கள் தீரும். நீண்டநாட்களாக தள்ளி போன திருமணம் கைக்கூடும். தொழிலில் இருந்து வந்த பிரச்னைகள் வெளியாட்கள் மூலம் தீரும். புதிய கூட்டாளிகள் உடன் இணைந்து தொழிலை விரிவு செய்வீர்கள். கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும். வெளியாட்கள் மற்றும் வெளியூர் பயணங்கள் மூலம் ஆதாயங்கள் உண்டாகும். புதிய மாற்றங்கள் உண்டாகும் நேரத்தை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இரண்டாம் இடத்தில் உள்ள சுக்கிரன் 8ஆம் இடத்தை பார்ப்பதால் கடன் சார்ந்த விஷயங்களில் இருந்த தொந்தரவுகள் விலகும். உடல்நிலை பாதிப்புகள் தீர்ந்து மகிழ்ச்சி உண்டாகும். பில்லி, சூனியம், செய்வீனைகள் அகன்று லட்சுமி கடாட்சம் பெருகும். காதல் உறவுகளில் இருந்த பிரச்னைகள் தீரும். காதல் திருமணம் கைக்கூடும். திருமணம் சார்ந்த முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
