தமிழ் செய்திகள்  /  Astrology  /  Signs To Watch Out For Due To Ketu - Moon Combination

Ketu - Moon combination: கேது - சந்திரன் சேர்க்கை: எச்சரிக்கையாக இருக்கவேண்டிய ராசிகள்

Marimuthu M HT Tamil
Mar 17, 2024 09:26 PM IST

ஹோலிக்குப் பிறகு, கேது மற்றும் சந்திரன் ஒன்றாக சேர்வதால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

Ketu - Moon combination: கேது - சந்திரன் சேர்க்கை: எச்சரிக்கையாக இருக்கவேண்டிய ராசிகள்
Ketu - Moon combination: கேது - சந்திரன் சேர்க்கை: எச்சரிக்கையாக இருக்கவேண்டிய ராசிகள்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில் செவ்வாயும் சனி பகவானும் கடந்த மார்ச் 15ஆம் தேதி ஒன்று சேர்ந்துள்ளன. இதில் சில ராசியினர் சிக்கல்களைச் சந்தித்துள்ளன. அதேபோல் ஹோலி பண்டிகை சமயத்தில், கேது மற்றும் சந்திரனின் சேர்க்கை உருவாகிறது.

கேது பகவான், கன்னிராசியில் சஞ்சரித்து வருகிறார். இதனோடு மார்ச் 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை, சந்திரன் அதிகாலை 3:41 மணிக்கு கன்னி ராசியில் சேர்கிறார். முன்பே கன்னிராசியில் கேது சஞ்சரித்துவருகிறார். இதனால் கேது மற்றும் சந்திரனின் சேர்க்கையால் சில ராசியினர் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இந்த சேர்க்கையினால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்துக் காண்போம்.

மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் கேது மற்றும் சந்திரனின் சேர்க்கையால், வரப்போகும் காலத்தில் உடல்நலப் பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். இதனால், கன்னி மற்றும் மிதுன ராசிக்காரர்களின் மகிழ்ச்சி குறையும். வரப்போகும் ஆண்டில், வீட்டில் சச்சரவுகள் ஏற்படலாம். மிதுன ராசிக்காரர்கள் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும்.

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு கேது மற்றும் சந்திரனின் சேர்க்கையால் டென்ஷன் அதிகரிக்கும். ஹோலிக்கு முன் சனி மற்றும் செவ்வாய் சேர்வதால், கன்னி ராசிக்காரர்களுக்கு பிரச்சினைகளும் அதிகரிக்கக்கூடும். அதே நேரத்தில், ஹோலிக்குப் பண்டிகைக்குப் பிறகு, கேது மற்றும் சந்திரனின் சேர்க்கை கன்னி ராசிக்காரர்களுக்கு தொந்தரவாக இருக்கும்.

சிம்மம்: இந்த ராசியினருக்கு கேது, சந்திரனின் சேர்க்கையால் கணவன் - மனைவி உறவில் சிக்கல்கள் வரலாம். கடினமாக உழைத்தாலும் உங்களது சிறுதவறால் அவமானத்தைச் சந்திப்பீர்கள். யாருக்கும் கடன் கொடுக்கவும் கூடாது;வாங்கவும் கூடாது. அவ்வாறு செய்தால் மன உளைச்சல் உண்டாகும். விரயச் செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற பிரச்னைகளில் தலையிடவேண்டாம். வீண் அலைக்கழிப்பு மற்றும் மன உளைச்சல் கூடும்.

துலாம்: இந்த ராசியினருக்கு கேது, சந்திரனின் சேர்க்கையால் கடினமாக உழைத்தும் பலன் கிடைக்காது. உடல்நலன் பாதிக்கப்படலாம். பணியழுத்தம் மற்றும் மன அழுத்தம் இரண்டும் உண்டாகலாம். கவனக்குறைவால் பொருள் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. வீண் அலைக்கழிப்புக்கு ஆளாவீர்கள். இந்த காலத்தில் முடிவுகளை எடுப்பதை சற்று தள்ளிப்போடுங்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel

டாபிக்ஸ்