Pregnant Women : கர்ப்பிணிப் பெண்கள் கவனத்திற்கு.. சந்திர கிரகணம் அன்று நீங்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் இதுதான்!-some things pregnant women should not forget on lunar eclipse day - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Pregnant Women : கர்ப்பிணிப் பெண்கள் கவனத்திற்கு.. சந்திர கிரகணம் அன்று நீங்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் இதுதான்!

Pregnant Women : கர்ப்பிணிப் பெண்கள் கவனத்திற்கு.. சந்திர கிரகணம் அன்று நீங்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் இதுதான்!

Divya Sekar HT Tamil
Dec 26, 2023 02:29 PM IST

சந்திர கிரகண நாளில் கர்ப்பிணிப் பெண்கள் மறந்தும் செய்யக் கூடாத சில விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.

 கர்ப்பிணிப் பெண்கள்
கர்ப்பிணிப் பெண்கள்

சந்திரனின் சுற்றுப்பாதை விமானம் பூமியின் சுற்றுப்பாதையின் விமானத்திற்கு மிக அருகில் இருக்கும் போது, ​​ஒரு கிரகண காலத்தில், தோராயமாக ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் முழு நிலவு கட்டத்தில் நிகழ்கிறது.

சூரியன் , பூமி மற்றும் சந்திரன் மற்ற இரண்டிற்கும் இடையில் பூமியுடன் சரியாகவோ அல்லது மிக நெருக்கமாகவோ சீரமைக்கப்படும் போது மட்டுமே இது நிகழும் இது ஒரு முழு நிலவின் இரவில் மட்டுமே நிகழும். எப்பொழுதும் சூரிய கிரகணத்தை தொடர்ந்து சந்திரகிரகணம் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் சந்திர கிரகணம் இன்று நிகழ இருப்பதால்,கோயில்களில் தரிசன நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. சந்திர கிரகணம் அக்.29 நள்ளிரவு 1:05 மணிக்கு தொடங்கி 2:24 மணிக்கு முடியும். பூமி, சந்திரன், சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்போது சந்திரகிரகணம் நிகழ்கிறது.சந்திர கிரகணத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல்வேறு கோயில்களின் நடை அடைக்கப்படுகிறது.

இந்நாளில் கர்ப்பிணிப் பெண்கள் மறந்தும் செய்யக் கூடாத சில விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.

சந்திர கிரகணத்தின் போது உறங்க கூடாது.

சந்திர கிரகணத்தின் கத்தரிக்கோல்கள் போன்ற கூர்மையான பொருட்களை பயன்படுத்தக் கூடாது.

பொதுவாக கிரகணம் என்றாலே கர்ப்பிணிப் பெண்கள் வீட்டுக்குள் தான் இருக்க வேண்டும். மறந்தும் கூட வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. 

சந்திர கிரகணம் இரவில் நடக்கும் என்பதால் மறுநாள் விடிந்ததும், வீட்டை சுத்தம் செய்ய வேண்டும்.

கர்ப்பிணிகள் குளித்து சுத்தமாக வேண்டும். 

நீங்கள் குளிக்கும் நீரில் சிறிது மஞ்சள், கல் உப்பு, போட்டு குளிப்பது நல்லது.

தீங்கு விளைவிக்கும் கதிர்கள் வளரும் கருவிற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதால் இதனை கூறுவார்கள்.

கர்ப்பிணிப் பெண்கள் எதையும் சாப்பிடக்கூடாது. மருந்துகளை சாப்பிடலாம்.

 கர்ப்பிணிப் பெண்கள் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்கள் கையில், கழுத்தில் வளையல் போன்ற எந்தவொரு உலோகப் பொருட்களையும் அணியக்கூடாது.

சந்திர கிரகணத்தின் பொழுது கர்ப்பிணிப் எந்தவொரு வேலையையும் செய்யக் கூடாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.