SEPTEMBER MESHAM RASIPALAN: தொட்ட தெல்லாம் வெற்றிதா.. குரு கொட்டி கொடுக்க காத்திருக்கார் மேஷ ராசியினரே.. செப்டம்பர் பலன்-september mesham rasipalan everything you touch is success guru is waiting to give you aries - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  September Mesham Rasipalan: தொட்ட தெல்லாம் வெற்றிதா.. குரு கொட்டி கொடுக்க காத்திருக்கார் மேஷ ராசியினரே.. செப்டம்பர் பலன்

SEPTEMBER MESHAM RASIPALAN: தொட்ட தெல்லாம் வெற்றிதா.. குரு கொட்டி கொடுக்க காத்திருக்கார் மேஷ ராசியினரே.. செப்டம்பர் பலன்

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 23, 2024 02:20 PM IST

September Mesham Rasipalan : வக்கிர நிலையில் இருக்கும் சனியும் உங்களுக்கு நன்மைதான் தரும். மீண்டும் மீண்டும் வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கும். ஏற்கனவே வியாபாரத்தில் இருப்பவர்கள் உங்கள் தொழிலை விருத்தி செய்யவும் முதலீடு செய்யவும் சரியான நேரம்.

SEPTEMBER MESHAM RASIPALAN: தொட்ட தெல்லாம் வெற்றிதா.. குரு கொட்டி கொடுக்க காத்திருக்கார் மேஷ ராசியினரே.. செப்டம்பர் பலன்
SEPTEMBER MESHAM RASIPALAN: தொட்ட தெல்லாம் வெற்றிதா.. குரு கொட்டி கொடுக்க காத்திருக்கார் மேஷ ராசியினரே.. செப்டம்பர் பலன்

September Mesham Rasipalan : செப்டம்பர் மாதம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நாள், வாரம் என்கிற வகையில் மாதாந்திர ராசி பலனும் இன்று கவனம் பெற்று வருகிறது. அந்த வகையில், வரும் செப்டம்பர் மாதத்தில் மேஷ ராசியினருக்கு எந்த மாதிரியான பலன்கள் இருக்கும் என்பதை காணலாம்.

கொட்டி கொடுக்க காத்திருக்கும் குரு.

மேஷ ராசியினரே சனி பகவான் வக்கிர நிலையில் உள்ளார். செவ்வாய் 3ம் இடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தில் குரு உள்ளார்.

புதிதாக வேலை தேடும் மேஷ ராசியினருக்கு வாய்ப்புகள் அடுத்தடுத்து வரும். ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு புதிது புதிதாக வாய்ப்புகளை கொடுத்துக்கொண்டே இருக்கும். சிலர் செப்டம்பர் மாதத்தில் வேலையை விட்டு விட்டு புதிதாக தொழில் தொடங்க விரும்புவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு செப்டம்பர் மாதம் மிகவும் உரியதாக இருக்கும். வக்கிர நிலையில் இருக்கும் சனியும் உங்களுக்கு நன்மைதான் தரும். மீண்டும் மீண்டும் வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கும். ஏற்கனவே வியாபாரத்தில் இருப்பவர்கள் உங்கள் தொழிலை விருத்தி செய்யவும் முதலீடு செய்யவும் சரியான நேரம்.

மேஷ ராசியினருக்கு குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கு

செப்டம்பர் மாதத்தில் குரு 2ம் வீட்டில் உள்ளார். மேஷத்திற்கு 6 ஆவது இடத்தில் சுக்கிரன் நீச்சம் அடைந்துள்ளார். சுக்கிரன் கேதுவுடன் இணைந்துள்ளார். இதனால் உறவில் உள்ளவர்களுக்கும் ஒரு சில வருத்தங்கள் ஏற்படலாம். திருமண வாழ்வில் இருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக சில சிக்கல்களை உண்டாக்கலாம். இதையெல்லாம் தவிர்ப்பது நல்லது. நகை வாங்குவது, கார் வாங்குவது, திருமணம், பணம் போன்ற விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.

மாணவர்களே சூப்பர் தான்...

மேஷ ராசியில் பிறந்த மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும். குரு பலமாக இருப்பதால் நீங்க நல்ல அறிவாற்றலை பெற இயலும். மாணவர்களுக்கு மென்மேலும் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளது.

செப்டம்பர் மாதம் 16ம் தேதியில் சூரியன் கேதுவுடன் இணைகிறார். 23ம் தேதி புதனும் கன்னி வீட்டில் சூரியன் கேதுவுடன் சேர்கிறார். இதனால் நீங்கள் கல்வி ரீதியாக ஒன்று முதல் 16ம் தேதிக்குள் முடிவுகளை எடுப்பது உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

மேஷ ராசி பெண்களே...

மேஷ ராசியில் பிறந்த பெண்களுக்கு செப்டம்பர் மாதம் சில பிரச்சனைகள் ஏற்படலாம். அடிவயிற்றுப்பகுதியில் சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்படலாம். குடும்ப வாழ்க்கையில் தேவையற்ற சின்ன சின்ன மன உளைச்சல் இருக்கலாம். இது சுக்கிரன் 18 தேதி மூல திரிகோணத்திற்கு சென்ற வின் பிரச்சனைகள் தீரும். அதன் பின் கொஞ்சம் ரிலாஸ் ஆக இருக்கலாம். இதனால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்ப்பது நல்லது.

ஆரோக்கியம்

மேஷ ராசியினருக்கு சனி, குரு, செவ்வாய் நல்ல நிலையில் இருப்பதால் பெரிதாக உடல் ரீதியான பிரச்சனைகள் இருக்காது. முதல் பாதியில் சுக்கிரனால் சின்ன சின்ன தொற்று தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். இரண்டாம் பகுதியில் சூரியன் கேதுவுடன் இணைந்து வருவதால் ஆற்றல் கொஞ்சம் குறைந்தது போல் தோன்றும். கடவுளை மனமுருகி வழிபட்டால் அமைதி கிடைக்கும்

மூத்த குடிமக்களுக்கு செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்.

மூத்த குடி மக்களுக்கு செப்டம்பர் மிகவும் நன்றாக இருக்கும். ஆபரணம் வாங்குதல், வீடு, வாகனம் சொத்து வாங்குவதை செப்டம்பர் 18ம் தேதி வரை தவிர்ப்பது நல்லது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

ஜோதிடம் தொடர்பான சுவாரஸ்யமான செய்திகளை படிக்க இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்!

தொடர்புடையை செய்திகள்