September Mithunam Rasipalan : மிதுன ராசிக்கு செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்.. மாளவிய யோகம் அதிர்ஷ்டம் அள்ளி தருமா!-september mithunam rasipalan how will the month of september be for libra will malaviya yoga bring wealth - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  September Mithunam Rasipalan : மிதுன ராசிக்கு செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்.. மாளவிய யோகம் அதிர்ஷ்டம் அள்ளி தருமா!

September Mithunam Rasipalan : மிதுன ராசிக்கு செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்.. மாளவிய யோகம் அதிர்ஷ்டம் அள்ளி தருமா!

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 21, 2024 06:00 AM IST

September Mithunam Rasipalan : நீங்கள் நல்ல வேலையில் இருந்தால் செப்டம்பர் மாதத்தில் அப்படியே இருந்து விடுங்கள். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் மிக நன்றாகத் தான் இருக்கும். நீங்கள் தொழிலில் முதலீடு செய்ய இருந்தால் அதை கொஞ்சம் குறைத்துக்கொள்ளலாம். இல்லை என்றால் யோசித்து முடிவெடுங்கள்.

September Mithunam Rasipalan : மிதுன ராசிக்கு செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்.. மாளவிய யோகம் அதிர்ஷ்டம் அள்ளி தருமா!
September Mithunam Rasipalan : மிதுன ராசிக்கு செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்.. மாளவிய யோகம் அதிர்ஷ்டம் அள்ளி தருமா!

பணியில் பதற்றம் வேண்டாம் மிதுன ராசியினரே!

மிதுன ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் 10ம் வீட்டில் ராகு இருக்கிறார். ராகு எப்போதும் ஒரு விஷயத்தை மட்டும் நம்பி இருப்பவர் இல்லை. ராகு பன்முக தன்மை கொண்டது. இதனால் மிதுன ராசிக்காரர்களின் மனநிலை குழப்பமாகவே இருக்கும்.

பணி வாழ்க்கையை பொறுத்த மட்டில் முதலில் வரும் வேலையை உடனே எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் தவற விட, தவறவிட அடுத்தடுத்த வேலைகள் தட்டி விட்ட படியே இருக்கும். நீங்கள் நல்ல வேலையில் இருந்தால் செப்டம்பர் மாதத்தில் அப்படியே இருந்து விடுங்கள். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் மிக நன்றாகத் தான் இருக்கும். நீங்கள் தொழிலில் முதலீடு செய்ய இருந்தால் அதை கொஞ்சம் குறைத்துக்கொள்ளலாம். இல்லை என்றால் யோசித்து முடிவெடுங்கள். சுக்கிரன் கேதுவுடன் இணைவதால் பெரிய பிரச்சனைகள் இல்லை. செப்டம்பர் 23ம் தேதி புதன் கேதுவோடு சேரும் போதும் அந்த ராசி அல்லது லக்னத்தை சேர்ந்தவர்கள் முடிவுகளை எடுக்கும் முன் யாரிடமாவது கலந்துரையாடுவது நல்லது.

குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்

செவ்வாய் முதல் வீட்டில் இருக்கிறார். சாந்தமான கிரகம் இல்லாத செவ்வாய் முதல் வீட்டில் இருப்பதால் எப்போதும் பரபரப்பான சின்ன சின்ன கோபங்கள் வரலாம். குரு 12ம் வீட்டில் இருப்பதால் குடும்பத்தில் சில செலவுகள் விரயம் ஏற்படலாம். செப்டம்பர் மாதம் யார் மீதும் ஆர்வமற்றவர்களாக இருப்பார்கள். கோபத்தை குறைக்க முயற்சியுங்கள். இதனால் பிராணாயாமம் செய்வதும் நல்லது. சில விஷயங்களை கண்டு கொள்ளாமல் கடந்து செல்ல முயற்சியுங்கள்.

மாணவர்களே ஜாலிதான்!

செப்டம்பர் மாதத்தில் புதன் நல்ல நிலையில் இருப்பார். இதனால் மாணவர்களுக்கு மிகவும் நல்லதாக இருக்கும். செப்டம்பர் 23ம் தேதிக்கு பின் புதன் கேதுவுடன் சேருவதால் கொஞ்சம் சிக்கல் ஏற்படலாம். இதனால் பெற்றோர்களிடமோ, அல்லது வழிகாட்டியிடமோ ஆலோசித்து முடிவெடுங்கள்.

பெண்களுக்கு செப்டம்பர் மாதம் பலமாகுமா?

மிதுன ராசியில் பிறந்த பெண்கள் பொதுவாகவே மிகவும் உணர்வு பூர்வமாக இருப்பார்கள். மிதுன ராசி பெண்களுக்கு இந்த மாதம் கணவர்கள் கூட எரிச்சலூட்டும் வகையில் பேசுவார்கள்.இதனால் அதிகமாக உணர்ச்சி வசப்படாமல் இருப்பது மிகவும் நல்லது.

ஆரோக்கியம்

மிதுன ராசிகாரர்களுக்கு 4 ஆவது வீட்டில் கேது இருக்கிறார்.கேது சுக்கிரன் 18ம் தேதி வரை இணைந்து இருக்கிறார். அதன் பிறகு சூரியன் இணைகிறார். செவ்வாயின் பார்வையும் 4ல் பதியும். ஆனால் சனி பெரிய பிரச்சனைகளை உருவாக்காது. உங்கள் பேச்சை யாரும் கேட்க மாட்டார்கள். இதனால் விரக்தியான மன நிலை உருவாகும்.

எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தால் இந்த மாதம் சந்தோசமாக இருக்கும்.

முத்த குடிமக்களே எச்சரிக்கை

மூத்த குடி மக்களை பொறுத்தவரை இந்த மாதம் குழந்தைகளை பற்றி அதிகமாக யோசிக்காதீர்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்