SEPTEMBER KADAGAM RASIPALAN : எச்சரிக்கை மணி அடிக்குது கடக ராசியினரே.. சூதானமா இருங்க செப்டம்பர் மாத ராசிபலன் இதோ!-september kadagam rasipalan the warning bell is sounding stay tuned here is the september rasipalan - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  September Kadagam Rasipalan : எச்சரிக்கை மணி அடிக்குது கடக ராசியினரே.. சூதானமா இருங்க செப்டம்பர் மாத ராசிபலன் இதோ!

SEPTEMBER KADAGAM RASIPALAN : எச்சரிக்கை மணி அடிக்குது கடக ராசியினரே.. சூதானமா இருங்க செப்டம்பர் மாத ராசிபலன் இதோ!

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 24, 2024 11:15 AM IST

SEPTEMBER KADAGAM RASIPALAN : அஷ்டம சனி இன்னும் முடிவடையவில்லை. இதனால் வியாபாரத்தில் பெரிதாக ரிஸ்க் எடுக்காமல் இருப்பது நல்லது. அதிக பணத்தை வியாபாரத்தில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். இதனால் வேலை, வியாபாரத்தில் செப்டம்பர் மாதம் அதிக நெருக்கடிகள் ஏற்படலாம்.தேவையற்ற கடன்களை தவிர்ப்பது நல்லது.

SEPTEMBER KADAGAM RASIPALAN : எச்சரிக்கை மணி அடிக்குது கடக ராசியினரே.. சூதானமா இருங்க செப்டம்பர் மாத ராசிபலன் இதோ!
SEPTEMBER KADAGAM RASIPALAN : எச்சரிக்கை மணி அடிக்குது கடக ராசியினரே.. சூதானமா இருங்க செப்டம்பர் மாத ராசிபலன் இதோ!

தொழில் துளிர்க்குமா.

கடக ராசிக்கு குரு 11ம் வீட்டில் இருக்கிறார். சுக்கிரன் நீச்சம் அடைகிறார். கேதுவுடன் இணைகிறது. 12ம் வீட்டில் செவ்வாய். 8ல் சனி இதனால் கடக ராசியினருக்கு இந்த மாதம் மிகவும் சுமாராக இருக்கும்.

இந்த மாதம் கடகம் ராசியினர் இருக்கும் பணியில் அப்படியே இருப்பது நல்லது. செப்டம்பர் மாதம் புதிய வாய்ப்பு, புதிய வேலை, என எதுவும் வெற்றிகரமாக அமைய வாய்ப்பு இல்லை. கடக ராசியினருக்கு அஷ்டம சனி இன்னும் முடிவடையவில்லை. இதனால் வியாபாரத்தில் பெரிதாக ரிஸ்க் எடுக்காமல் இருப்பது நல்லது. அதிக பணத்தை வியாபாரத்தில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். இதனால் வேலை, வியாபாரத்தில் செப்டம்பர் மாதம் அதிக நெருக்கடிகள் ஏற்படலாம்.தேவையற்ற கடன்களை தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் அமைதியை தேடுங்கள்

கடக ராசிக்கு குரு 11ல் இருக்கிறார். சனி 8ல் தடங்கல்களை ஏற்படுத்துகிறார். சுக்கிரன் நீச்சமடைகிறார். இதனால் இந்த மாதம் திருமண வரன் தேடுவதற்கு நல்ல மாதம் இல்லை. குடும்பத்தில் அவ்வப்போது சின்ன சின்ன பிரச்சனைகள் இருக்கலாம். குடும்ப வாழ்க்கையில் சின்னச்சின்ன சிக்கல்கள் இருக்கலாம். முடிந்த வரை செப்டம்பர் மாதம் கடக ராசிக்காரர்கள் அமைதியாக இருப்பது நல்லது.

மாணவர்களே உங்களுக்கு சூப்பரா இருக்கு

கடக ராசியில் பிறந்த மாணவர்களுக்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. புதன் அறிவு ஆற்றலை தருகிறார். சூரியன் உங்களுக்கு கை கொடுப்பார். குரு பார்வை உங்களுக்கு மிகவும் சாதகமாக உள்ளது. ஆனால் குடும்ப உறுப்பினர்கள் முழுமையாக உங்களை ஆதரிப்பார்கள் என்பது உறுதி இல்லை.

பெண்களே சகிப்பு தன்மையோட இருங்க

கடக ராசியில் பிறந்த பெண்களுக்கு குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு அஷ்டமச்சனியால் மன உளைச்சல் இருந்து கொண்டிருக்கிறது. பணிச்சுமை அதிகமாக இருக்கும்.

இந்த மாதம் பெண்களுக்கு மிகவும் கடினமானதாகவே இருக்கும். சகிப்புத்தன்மையுடன் செப்டம்பர் மாதத்தை கடப்பது நல்லது.

ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை

கடக ராசிக்கார்கள் செப்டம்பர் மாதம் அதிகமாக வாகனங்கள் ஓட்டுவதை குறைப்பது நல்லது. வாகனங்களுக்கு அதிபதியாக இருக்கக்கூடியது செவ்வாய் மற்றும் சுக்கிரன். இதனால் அந்த செப்டம்பர் மாதத்தில் பயணத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது.

மூத்த குடி மக்களே

செப்டம்பர் மாதத்தில் புதிதாக யோசிப்பது நல்லதுதான் என்றாலும் முடிந்தவரை அமைதியாக இருங்கள். மனதார இறைவனை வணங்குவது உங்களை சாந்தமாக இருக்க உதவும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்ச்சியாக ஜோதிடம் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்.