September Thulam Rasipalan : துலாம் ராசியினரே துள்ளி குதிப்பீர்களா.. செப்டம்பர் அதிர்ஷ்டமா.. மாளவிய யோகம் மாற்றம் தருமா!-september thulam rasipalan will you jump up and down september is lucky will malaviya yogam bring change - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  September Thulam Rasipalan : துலாம் ராசியினரே துள்ளி குதிப்பீர்களா.. செப்டம்பர் அதிர்ஷ்டமா.. மாளவிய யோகம் மாற்றம் தருமா!

September Thulam Rasipalan : துலாம் ராசியினரே துள்ளி குதிப்பீர்களா.. செப்டம்பர் அதிர்ஷ்டமா.. மாளவிய யோகம் மாற்றம் தருமா!

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 21, 2024 04:55 PM IST

September Thulam Rasipalan : செப்டம்பர் மாதத்தில் 8ல் குரு இருக்கிறார். அவரது பார்வை 2ம் இடத்தில் உள்ளது. 18ம் தேதிக்கு பின் மாளவிய யோகம் ஆரம்பிப்பதால் உங்களுக்கு வரன் பார்ப்பதில் இருக்கும் பிரச்சனைகள் தீரும்.

September Thulam Rasipalan : துலாம் ராசியினரே துள்ளி குதிப்பீர்களா.. செப்டம்பர் அதிர்ஷ்டமா.. மாளவிய யோகம் மாற்றம் தருமா!
September Thulam Rasipalan : துலாம் ராசியினரே துள்ளி குதிப்பீர்களா.. செப்டம்பர் அதிர்ஷ்டமா.. மாளவிய யோகம் மாற்றம் தருமா!

துலாம் ராசிக்கு சுக்கிரன் ராசி நாதனாக இருப்பார். வேலை விஷயத்தில் பெரிய பிரச்சனைகள் எதுவும் இல்லை. இந்த மாதம் ராகு கேதுவின் பிரச்சனைகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சனி வக்கிரம் அடைந்தாலும் நல்ல நிலையில் உள்ளார். 9ம் வீட்டில் செவ்வாய் உள்ளது. 10 ஆவது இடத்தில் புதன் இடையில் புதன் 11ம் இடத்திற்கு மாறுகிறார். சூரியன் ஏற்கனவே 11ல் இருக்கிறது.

துலாம் ராசியினருக்கு சுக்கிரன் 12ம் இடத்தில் கேதுவுடன் இருப்பதால் வேலையில் லேசான சுணக்கம் ஏற்படும் மன நிலை ஏற்படலாம். வேலை தேடுபவர்கள் முழு ஈடுபாட்டோடு இருந்தால் மாதத்தின் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. செப்டம்பர் 18 வரை தொழிலில் அதிக பணத்தை முதலீடு செய்வதை தவிர்க்கலாம். செப்டம்பர் 18க்கு பிறகு சுக்கிரன் முதல் இடத்திற்கு மாறும். 18ம் தேதிக்கு பின் மாளவிய யோகம் தொடங்குவதால் பொருளாதார ரீதியாக மிகவும் நன்றாக இருக்கும். வேலையில் ஆர்வம் அதிகரிக்கும்.

குடும்பம் குஷியில் மிதக்குமா

செப்டம்பர் மாதத்தில் 8ல் குரு இருக்கிறார். அவரது பார்வை 2ம் இடத்தில் உள்ளது. 18ம் தேதிக்கு பின் மாளவிய யோகம் ஆரம்பிப்பதால் உங்களுக்கு வரன் பார்ப்பதில் இருக்கும் பிரச்சனைகள் தீரும். முதல் இரண்டு வாரத்தில் சுக்கிரன் கேதுவுடன் இருப்பதால் கணவன் மனைவி இடையே சின்னசின்ன மனவருத்தம் ஏற்படலாம். ஆனால் 18ம் தேதிக்கு பின் பிரச்சனைகள் குறைய தொடங்கும்.

மாணவர்களுக்கு செப்டம்பர் எப்படி இருக்கு பாருங்க

துலாம் ராசி மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் மிகவும் நன்றாக இருக்கும். சூரியனும், புதனும் சேர்ந்து இருப்பதால் மிகவும் நல்ல யோகம் இருக்கிறது. கல்வி முயற்சியில் தடைகள் பெரிதாக இல்லை. சிந்தனையை மட்டும் ஒரே விஷயத்தில் கூர்மையாக்குங்கள்.

பெண்களே கவனமா இருங்க

துலாம் ராசி பெண்களுக்கு இந்த செப்டம்பரில் வீட்டில் உள்ள எல்லோரின் அதரவும் கிடைக்காது. முதல் இரண்டு வாரம் கொஞ்சம் சிரமமாக இருக்கும். மாளவிய யோகம் செப்டம்பர் 18ம் தேதிக்கு பின் தொடங்குவதால் உங்களை நீங்களே நம்ப தொடங்குவீர்கள். நீங்கள் கடந்த சிரமங்கள், வேலை அலைச்சல் போன்றவை உங்களுக்கு சாதகமாக மாறும். மன நிறைவு ஏற்படும். உற்சாகம் உங்களை தேடி வரும். உங்களுக்கு பொருளாதாரம் நிறைவாகும். பாசிட்டீவ் வாக இருக்கும்.

ஆரோக்கியம்

துலாம் ராசிக்காரர்களுக்கு செப்டம்பரில் லேசான உடல் நல பிரச்சனைகள் வரலாம். தோல் சம்பந்தபட்ட பிரச்சனைகள் வரலாம். சூரியன் கேதுவுடன் சஞ்சரிப்பதால் ஓரிரு நாட்கள் சின்ன சின்ன உடல் உபாதைகளை சந்திக்க வாய்ப்பு உள்ளது.

மூத்த குடிமக்களே உஷார்

மூத்த குடி மக்கள் செப்டம்பர் மாதத்தில் பணம் கொடுக்கல் வாங்கலை தவிர்க்கலாம். புதிய வீடு வாங்குதல் பொருள் வாங்குதலை தவிர்ப்பதும் நல்லது. மற்றபடி செப்டம்பர் மாதம் மிகவும் மனச மட்டும் பத்திரமாக பார்த்துககோங்க ஓவரா யோசிக்காதீங்க. அலட்டிக்கொள்ளாமல் அலட்சியமாகவும் இருக்காமல் செப்டம்பர் மாதத்தை கடந்து செல்லுங்கள்.

தொடர்புடையை செய்திகள்