வாழ்கையை நிலை குலைய வைக்கும் கண்திருஷ்டி அண்டாமல் தடுக்க என்ன செய்யலாம் பாருங்க.. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  வாழ்கையை நிலை குலைய வைக்கும் கண்திருஷ்டி அண்டாமல் தடுக்க என்ன செய்யலாம் பாருங்க.. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை

வாழ்கையை நிலை குலைய வைக்கும் கண்திருஷ்டி அண்டாமல் தடுக்க என்ன செய்யலாம் பாருங்க.. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை

Pandeeswari Gurusamy HT Tamil
Nov 07, 2024 02:13 PM IST

மங்கள பொருட்களாக பார்க்கப்படும், சந்தனம், குங்குமம், திருமண் அணிவதால் கண் திருஷ்டி நீங்கும் என்பது நம்பிக்கை. அதுமட்டும் அல்ல கழுத்துல ருத்ராட்சம், ஸ்படிகம் இதுபோன்ற நல்ல உயர்ந்த இறை சிந்தனையை இறை நம்பிக்கையை இறை ஆற்றலை அதிகரிக்கும் பொருட்கள் நம் உடலோடு இருக்கின்ற போதும் நமக்கு கண் திருஷ்டி ஏற்படாது

வாழ்கையை நிலை குலைய வைக்கும் கண்திருஷ்டி அண்டாமல் தடுக்க என்ன செய்யலாம் பாருங்க.. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை
வாழ்கையை நிலை குலைய வைக்கும் கண்திருஷ்டி அண்டாமல் தடுக்க என்ன செய்யலாம் பாருங்க.. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை

கருப்பு கயிறு

சிலர் காலில் கருப்பு கயிறு கட்டுவார்கள். கைகளில் கருப்பு கயிறு, சிகப்பு கயிறு அல்லது தலைமுடிய கயிறு மாதிரி பின்னி காலில் போடுவாடுவார்கள். கையிலயும் போட்டு கொள்வார்கள். இதுவும் வந்து கண் திருஷ்டியை நீக்கி நல்ல பலனை பெற்று தரும்.

குழந்தைகளில் இருந்து பெரியோர் வரை கண் திருஷ்டி ஏற்படாமல் இருப்பதற்கு என்ன பண்ணலாம். பிறந்த குழந்தைகளுக்கு கருப்பு பொட்டு வைக்கலாம். நல்ல சுத்தமான கரிசலாங்கண்ணியினுடைய சாறிலிருந்து தயாரிக்கப்படக்கூடிய கண்மையை நெற்றியில், கன்னத்தில், உள்ளங்கையில கால்களில் குழந்தைகளுக்கு வைக்கலாம். குழந்தைகளை பார்த்து பெற்றவர்களே கண் வைக்க கூடும். அதன் அழகில் சிரிப்பில் நாம் மகிழ்வதும் கண் திருஷ்டியாக மாறும்.

கண்மை வைத்து விட்டால் அந்த திருஷ்டியும் வராது. குழந்தைகளை குளிக்க வைக்கும் போது அந்த குழந்தைக்கு வந்து திருஷ்டி சுத்தி குளிக்க வைக்கும் பழக்கம் கிராமங்களில் உண்டு. அதேபோல் ஒவ்வொரு நாளும் இரவில் ஆரத்தி கரைச்சி அதுல வந்து சூடமோ அல்லது வேற எதுவுமோ ஏற்றவேண்டாம். அதுல ரெண்டு வரமிளகாய், ஒரே ஒரு வெற்றிலை அதை மட்டும் கிள்ளி போட்டு குழந்தைக்கு ராத்திரி தூங்கும்போது ஆரத்தி எடுத்துட்டு அந்த குழந்தையை தூங்க வைக்கலாம்.

உப்பு போதும்

5 வயதிற்கு மேல உள்ள குழந்தைகளுக்கு உப்பு சுத்தி போடலாம் அதுவே குழந்தைகளுக்கு நல்ல திருஷ்டியை வந்து கழிக்கக் கூடிய ஒரு பொருளாக அமையும். பெரியவங்களுக்கு கூட இதை செய்யலாம். வாரத்துக்கு ஒரு நாள் பெண்களாக இருந்தால் வெள்ளிக்கிழமைகளிலும், ஆண்களா இருந்தால் சனிக்கிழமைகளிலும் கையிலயும் உப்பு வச்சுட்டு மற்ற வரை சுற்ற சொல்லலாம். இல்லையென்றால் நாமே கூட நமக்கு சுற்றிக்கொள்ளலாம். 

நாம வலப்புறமாகவும், இடது புறமாகவும் அந்த உப்பை உள்ளங்கையில வச்சு சுத்திட்டு நம்ம தலையில் இருந்து கால் வரைக்கும், மேல இருந்து கீழ அந்த உப்பை ஏற்றி இறக்கிட்டு நாம் குளிக்க வைத்திருக்கிற பக்கெட்ல இருக்குற தண்ணியில வந்து அந்த உப்பு போட்டவேண்டும். 

உப்பு கரைந்த பிறகு அதை கொண்டு வெளியில் நாம ஊற்றி விடலாம். அல்லது மூணு கைப்பிடி அளவு உப்பை எடுத்து நாம் குளிக்க வைத்திருக்கும் தண்ணீரில் கரைக்க வேண்டும். அந்த தண்ணீரை நாம ஊற்றி குளிச்சுக்கலாம். இப்படி செய்வதாலும் நமக்கு கண்திருஷ்டி நீங்கும். இது பெரியவங்களும் செய்யலாம். அஞ்சு வயசுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் இந்த முறையில் திருஷ்டி கழிக்கலாம்

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்