Sathayam Nakshatram: ’காம ஆசையால் செம அடி வாங்குமா சதயம் நட்சத்திரம்?’ உண்மை என்ன? சதயம் நட்சத்திரத்தின் குணநலன்கள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sathayam Nakshatram: ’காம ஆசையால் செம அடி வாங்குமா சதயம் நட்சத்திரம்?’ உண்மை என்ன? சதயம் நட்சத்திரத்தின் குணநலன்கள்!

Sathayam Nakshatram: ’காம ஆசையால் செம அடி வாங்குமா சதயம் நட்சத்திரம்?’ உண்மை என்ன? சதயம் நட்சத்திரத்தின் குணநலன்கள்!

Kathiravan V HT Tamil
Aug 31, 2024 05:55 PM IST

ராகு பகவனின் இன்னொரு அடிப்படை குணமாக காமம் உள்ளது. காமத் திரிகோண வரிசையில் கும்பம் வருவதால் இவர்கள் தீய தொடர்புகளால் கெடுபலனை அனுபவிக்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கும்.

Sathayam Nakshatram: ’காம ஆசையால் செம அடி வாங்குமா சதயம் நட்சத்திரம்?’ உண்மை என்ன? சதயம் நட்சத்திரத்தின் குணநலன்கள்!
Sathayam Nakshatram: ’காம ஆசையால் செம அடி வாங்குமா சதயம் நட்சத்திரம்?’ உண்மை என்ன? சதயம் நட்சத்திரத்தின் குணநலன்கள்! (Pixabay)

ராகு பகவானின் இயல்பான குணாதிசையங்களை சனி பகவான் மிகைப்படுத்தி வெளிப்படுத்துவார். எல்லாம் தனக்கே சொந்தம் என நினைத்தல், போராடுதல், விதண்டாவாதம் செய்வது ஆகியவை இதன் முக்கிய கிரகம் ஆகும். சனி பகவானின் குணத்தை கொண்ட ஒத்த அமைப்பு கொண்ட கிரகமாக ராகு பகவான் உள்ளார்.  

ராகு பகவனின் இன்னொரு அடிப்படை குணமாக காமம் உள்ளது. காமத் திரிகோண வரிசையில் கும்பம் வருவதால் இவர்கள் தீய தொடர்புகளால் கெடுபலனை அனுபவிக்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கும்.

சதயம் நட்சத்திரத்தின் பலம் ஆனது போராட்டம் ஆகும். எதற்கும் போராடி வெற்றி கொள்ளும் தன்மை இவர்களுக்கு உண்டு. இவர்களின் போராட்டம் சுயநலம் சாராமல், பொதுநலம் சார்ந்ததாக இருக்கும். துணிச்சலை அதிகமாக வெளிப்படுத்தும் தன்மை கொண்ட சதயம் நட்சத்திரக்கார்கள் செய் அல்லது செத்து மடி என்ற இயல்பிற்கு உதாரணமாக இருப்பார்கள். இதனால் இவர்கள் பகையை சந்திக்கவும் நேரிடலாம். 

இவர்களின் பேச்சு சூடாக இருக்கும், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகப்பெரிய பேச்சாளர்களாக இருப்பார்கள். வாதம் செய்து எதையும் வெல்லும் திறன் இவர்களுக்கு உண்டு. எதிர்வாதம் செய்து பிறரை வெல்வது இவர்களுக்கு கைவந்த கலை. ராட்ச கணம் கொண்ட நட்சத்திரம் என்பதால் இவர்கள் எதிலும் அடங்கி போக மாட்டார்கள். 

தனது ஒவ்வொரு ஆசையும் நிறைவேற்றிக் கொள்ள போராடி வெற்றி பெற வேண்டிய நிலை இவர்களுக்கு இருக்கும். 

ராஜராஜ சோழன் பிறந்த நட்சத்திரமாக சதயம் நட்சத்திரம் உள்ளது. சதயம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் உயர்கல்வி மூலம் வாழ்கையில் மேன்மைகளை அடைவார்கள். 

சதயம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு கற்பனை சக்தி அதிகம் இருக்கும். பொறுமை உடன் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவார்கள். பயண பிரியர்களான இவர்களுக்கு மெக்கானிக்கல் சார்ந்த துறைகளில் அதிக ஆர்வம் இருக்கும்.  

சதயம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் கடும் உழைப்பை வெளிப்படுத்துவர்கள் ஆவார். போராடி வெற்றி பெறும் நிலை இவர்களுக்கு இருக்கும். இவர்களுக்கு ராணுவம், காவல்துறை, தீயணைப்புத்துறை போன்ற வேலைகளில் ஆர்வம் இருக்கும். கடைநிலை பணிகளை இவர்கள் விரும்பி செய்வார்கள். 

சதயம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் வெளிநாட்டு பயணங்களில் ஆர்வம் கொண்டவர்கள். வித்தைகளை கற்க வெளிநாடு செல்லும் நிலை இவர்களுக்கு உண்டாகும். கைதேர்ந்த திறமைசாலிகளாக விளங்குவார்கள். மருத்துவத்துறை சார்ந்த படிப்புகள் இவர்களுக்கு கைக்கொடுக்கும். பங்குச்சந்தை உள்ளிட்ட ஊக வணிகத்தில் இவர்கள் லாபங்கள் ஈட்டுவார்கள். 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள் தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும். ஆன்மீகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!

Whats_app_banner