Guru peyarchi 2024 Sadhyam: எதிர்பாராத பொருள் வரவு உண்டு!பேச்சில் கவனம் தேவை - சதயம் நட்சத்தினர் குரு பெயர்ச்சி பலன்கள்
சதயம் நட்சத்திரம் நான்கு பாதங்களும் கும்பம் ராசியில் இடம்பிடித்துள்ளது. இந்த குரு பெயர்ச்சியால் எதிர்பாராத பொருள் வரவு, வாழ்வில் நல்ல ஏற்றம், முன்னேற்றம் இருக்கும். பேச்சில் கவனமுடன் இருக்க வேண்டும் என ஜோதிடத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவான் ஐந்தாம் பார்வையாக கன்னி, ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியையும், ஒன்பதாம் பார்வையாக மகரத்தையும் பார்வையிடுகிறார். அக்டோபர் முதல் பிப்ரவரி வரை நான்கு மாத காலங்களில் குரு வக்கிர நிவர்த்தி அடைகிறார். மே 1ஆம் தேதி குரு பெயர்ச்சி தொடங்கியுள்ளது
சதயம் நட்சத்தினர் கும்பம் ஆகிய இரண்டு நட்சத்திரத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். இந்த நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும் கும்பம் ராசியில் உள்ளது.
குரு பெயர்ச்சியால் சதயம் நட்சத்தினருக்கான பொதுப்பலன்கள்
சதயம் நட்சத்தினர் ராகுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாக இருப்பீர்கள். நீண்ட நாள்களாக வீடு, இடம் வாங்க வேண்டும் என்ற நினைத்தவர்களுக்கான வாய்ப்பு இந்த குரு பெயர்ச்சியில் உருவாகலாம். மேல்படிப்பு படிக்க விரும்புவோரின் எண்ணம் நிறைவேறும். பொருளாதார ரீதியாக பெரிய பாதிப்புகள் எதுவும் இருக்காது.
எதிர்பாராத பொருள் வரவு உண்டு. பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். தெரிந்தவராக இருந்தாலும் கடன் கொடுப்பதை தவிருங்கள். குடும்ப ரீதியாக சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வீர்கள்.
தேவையில்லாத முதலீடுகளை தவிருங்கள். வேலையில் இருப்பவர்களுக்கு நன்மையை பெறுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு தகராறு அல்லது நிச்சயமற்ற தன்மை ஏற்படலாம். ஆனாலும் பாதிப்புகள் இருக்காது. எனவே போதிய வருமானமும் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டு.
திருமண வயதில் இருப்பவர்களுக்கு, திருமணம் தள்ளி போனவர்களுக்கு வரன் அமையும். பேச்சில் கவனம் தேவை. புதிய முயற்சிகள் சாதகமாக இருக்கும். தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டும். வாழ்வில் நல்ல ஏற்றம், முன்னேற்றம் அமையும்.
தசாபுத்தி பலன்கள்
குரு திசையில் இருப்பவர்கள் (26 வயது வரை) படிப்பில் இருந்து வந்த குழப்பங்கள், மன அழுத்தம் விலகும். வேலை தேடுவோருக்கு தடை, நெருக்கடிகள் ஏற்படலாம். முயற்சி செய்தால் வெற்றியை பெறுவீர்கள். திருமண வயதில் இருப்பவர்களுக்கு தடைகள் ஏற்பட்டாலும் வரன்கள் அமையும்.
சனி திசையில் இருப்பவர்கள் (45 வயது வரை) பண பிரச்னை, குடும்ப ஒற்றுமை இன்மையால் அவதிப்பட நேரிடலாம். எனவே கவனமாக இருங்கள். எதிர்பார்ப்புகள் குறைத்து கொள்ளுங்கள். கொஞ்சம் கடினமான காலகட்டமாகவே இருக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படலாம். வாகன சேர்க்கை உண்டு. தொழிலில் மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள்.
புதன் திசையில் இருப்பவர்கள் (62 வயது வரை) நல்ல பலன்கள் பெறுவீர்கள். பிள்ளைகளின் வளர்ச்சியால் நிம்மதி அடைவீர்கள். வீடு கட்டும் யோகம் உண்டு. பொருளாதார வளர்ச்சி உண்டாகும். தொழிலில் முதலீடுக்கு ஏற்ப வருமானத்தை பெறுவீர்கள்.
கேது திசையில் இருப்பவர்களுக்கு (69 வயது வரை) கடன் பிரச்னைகள் தீரும். நல்ல நேரமாக அமையும். சொத்து சேர்க்கை உண்டு. சுக்கிர திசையில் இருப்பவர்கள் (82 வயது வரை) பல்வேறு விதமான ஆதாயங்களை பெறுவீர்கள். பொருளாதார முன்னேற்றத்தை காண்பீர்கள். சுப விரயங்கள் ஏற்படும்.
பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்