தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani Bhagwan: சனி பகவானால் பலன்களை பெறப்போகும் ராசிகள்

Sani Bhagwan: சனி பகவானால் பலன்களை பெறப்போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 13, 2023 11:00 AM IST

சனி பகவானின் செல்லப் பிள்ளையாக மாறப்போகும் ராசிகள் பற்றி பார்க்கலாம்.

சனி
சனி

ஒரு சில கிரகத்தின் இடமாற்றமானது மிகவும் பெரிதாக பார்க்கப்படுகிறது. இடமாற்றத்தின் போது சில ராசிகளுக்கு, அசுப பலன்களும் சில ராசிகளுக்கு சுப பலன்களும் கிடைக்கும். ராகு கேது, சனி, சூரியன், சுக்கிரன், குருபகவான் செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களின் இடப்பெயர்ச்சியானது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

சனி பகவான் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்தால் இரண்டரை ஆண்டு காலம் பயணம் செய்வார். தீமைகளை திருப்பிக் கொடுக்க ஆரம்பித்தால் மிகவும் கொடூரமாக தருவார். அதேபோல நன்மைகளையும் இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். எனவே அவரைக் கண்டு அச்சப்பட தேவையில்லை.

சனி பகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். வக்ர நிலையில் பயணம் செய்யும் சனி பகவான் நவம்பர் நான்காம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார். சனிபகவானால் பலன்களைப் பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

ரிஷப ராசி

பொருளாதார நிலையில் முன்னேற்றம் இருக்கும். புதிய வேலை வாய்ப்புகள் அமையும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

மிதுன ராசி

பண வரவில் எந்த குறையும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல உயர்வு கிடைக்கும்.

துலாம் ராசி

வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். திடீரென பண வரவு உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு கிடைக்காத வாய்ப்புள்ளது.

கும்ப ராசி

பண வரவில் எந்த குறையும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்