’ராகு கேது பெயர்ச்சியால் பண மழையில் நனையும் 3 ராசிகள்!’ ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025
Rahu Kethu Peyarchi 2025: மாய சிந்தனையை உருவாக்கும் நிலையை ராகு பகவானும், ஞான சிந்தனையை உருவாக்கும் நிலையை கேது பகவானும் அளிக்கின்றனர். இந்த இரண்டு கிரகங்களும் இருக்கும் வீட்டின் உடைய அதிபதியின் பலன்களை தரும் தன்மைகளை பெற்று உள்ளன.
Rahu Kethu Peyarchi 2025: 18 மாதங்களுக்கு ஒரு முறை பெயர்ச்சி ஆகும் கிரகங்களாக சாயா கிரகங்கள் எனப்படும் ராகு - கேது ஆகிய கிரகங்கள் உள்ளன. வரும் மே மாதம் 18ஆம் தேதி அன்று பெயர்ச்சி ஆக உள்ளனர். ராகு பகவான் மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கும். கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்.
மாய சிந்தனையை உருவாக்கும் நிலையை ராகு பகவானும், ஞான சிந்தனையை உருவாக்கும் நிலையை கேது பகவானும் அளிக்கின்றனர். இந்த இரண்டு கிரகங்களும் இருக்கும் வீட்டின் உடைய அதிபதியின் பலன்களை தரும் தன்மைகளை பெற்று உள்ளன.
ராகு-கேது பெயர்ச்சியால் நன்மைகள் கிடைக்கும் ராசிகள்
மிதுனம்
ராகு-கேது பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும். வரப்போகும் ஆண்டில் உங்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு உண்டாகும். வேலையில் வருமானம் பெருகும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவீர்கள்.
தனுசு
ராகு-கேது பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு அதிக நன்மைகளை கொடுக்கும். உங்கள் வருமானம் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் உள்ளன. பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள். பொருளாதார ரீதியாக, உங்கள் நிலைமை சிறப்பாக இருக்கும். செல்வம் சேர்ப்பதிலும் வெற்றி காண்பீர்கள்.
மகரம்
ராகு-கேது பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். மகர ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத இடங்களில் இருந்து பணவரவு உண்டாகும். ஆன்மீக காரியங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு, வருமானம் அதிகரிக்கும். ஆரோக்கியம் முன்பை விட சிறப்பாக இருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.