Pamara Yogam: பாமர யோகம் உங்க ஜாதகத்துல இருக்கான்னு கண்டறிவது எப்படி.. யாருக்கு அந்த யோகம் கிடையாது?-pamara yoga is in your horoscope who doesnt have pamara yoga - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Pamara Yogam: பாமர யோகம் உங்க ஜாதகத்துல இருக்கான்னு கண்டறிவது எப்படி.. யாருக்கு அந்த யோகம் கிடையாது?

Pamara Yogam: பாமர யோகம் உங்க ஜாதகத்துல இருக்கான்னு கண்டறிவது எப்படி.. யாருக்கு அந்த யோகம் கிடையாது?

Manigandan K T HT Tamil
Sep 23, 2024 11:37 AM IST

Yogam: ஒன்பதாம் அதிபதி கெட்டுப்போறதுங்கிறது ஒன்பதாம் அதிபதி நீச்சம் அடைவது ஒன்பதாம் அதிபதி கிரகணம் அடைவது ஒன்பதாம் அதிபதி அஸ்தமனம் அடைவது ஒன்பதாம் அதிபதி மறைந்து போவது இது ஒரு நிலை இன்னொரு நிலை.

Pamara Yogam: பாமர யோகம் உங்க ஜாதகத்துல இருக்கான்னு கண்டறிவது எப்படி.. யாருக்கு அந்த யோகம் கிடையாது?
Pamara Yogam: பாமர யோகம் உங்க ஜாதகத்துல இருக்கான்னு கண்டறிவது எப்படி.. யாருக்கு அந்த யோகம் கிடையாது?

இந்த ஒன்பதாம் அதிபதிதான் உங்களுடைய நல் அதிர்ஷ்டத்தை குறிப்பிடுற கிரகம். இந்த நல் அதிர்ஷ்டத்தை குறிப்பிடுற ஒன்பதாம் அதிபதி ஒரு ஜாதகத்துல கெட்டுப்போனாள்னாலும் சரி அல்லது ஒன்பதாம் இடத்துல அதிகப்படியான பாவக்கோள்கள் அமர்ந்தாலும் சரி ஒன்பதாம் அதிபதி போயி ஆறு எட்டு 12ல் மறைந்த நிலையில் வலுவடையாமல் இருந்தார்னாலும் சரி உங்க ஜாதகத்தில் பாமர யோகம் வந்துரும்.

ஒன்பதாம் அதிபதி

ஒன்பதாம் அதிபதி கெட்டுப்போறதுங்கிறது ஒன்பதாம் அதிபதி நீச்சம் அடைவது ஒன்பதாம் அதிபதி கிரகணம் அடைவது ஒன்பதாம் அதிபதி அஸ்தமனம் அடைவது ஒன்பதாம் அதிபதி மறைந்து போவது இது ஒரு நிலை இன்னொரு நிலை.

ஒன்பதாம் இடத்துல பாவக்கோள்கள் அமர்ந்துறது நிறைய பாவக்கோள்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பாவிகள் போய் ஒன்பதாம் இடத்தை பிடித்துக் கொள்வது.

இதெல்லாமே உங்களுக்கு பாமர யோகத்தை கொடுக்கும். பாமர யோகம் என்ன செய்யும். நீங்க நிறைய பேரை பேசி பார்த்திருப்பீங்க. நாங்க எல்லாம் வெறும் அதிர்ஷ்டமில்லாதவர்கள். எங்களுக்கு எதுவுமே நடக்காது, ஒரு நல்லது கூட நடந்து என் வாழ்க்கையில நான் பார்த்ததே இல்லை என கூறுவார்கள்.

பாமர யோகம்

பாமர யோகம் முயற்சிகளில் தடை முதல் பாயிண்ட். வீடு கட்ட ஆரம்பிச்சீங்கனாலும் சரி படிக்க ஆரம்பிச்சீங்கனாலும் சரி கல்யாணம் பண்ண ஆரம்பிச்சீங்கனாலும் சரி சொத்து சேர்க்க ஆரம்பிச்சீங்கனாலும் சரி எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் உங்களுடைய முயற்சிகளில் தடை ஏற்படும். இதுதான் பாமர யோகம்.

பாக்கிய யோகம் என்று சொல்லக்கூடிய பாக்கியாதிபதி பலகீனப்பட்டு இருக்கும். ஒரு ஜாதகத்தில் பாமர யோகம் தலை தூக்கும். ஒன்பதாம் அதிபதி கெட்டு போயிட்டார்.

மீன லக்ன ஜாதகம் இவருக்கு ஒன்பதாம் அதிபதி யாரு செவ்வாய். இவர் நீச்சமா இருக்கார். கடகத்தில் இவருக்கு எந்த விதத்திலும் நீச்சபங்கம் கிடைக்கவில்லை. கடகத்தில் இருக்கிற செவ்வாய்க்கு பத்தாவது. இந்த பக்கம் சனி ஒரு மூணு டிகிரில இந்த பக்கம் கேது அவர் ஒரு நாலு டிகிரில முடிஞ்சு போச்சு இதுதான் முழுமையான பாமர யோக ஜாதகம்.

பாக்கியாதிபதி தனாதிபதி பாக்கியாதிபதி செவ்வா டோட்டலி அவுட் இவருக்கு கடுமையான பாவிகளின் தொடர்பு வேற ஒரு வீட்டுக்கு முன்னும் பின்னும் பாவிகள் இருப்பது பாவ கர்த்தாரி. ஒரு கிரகத்திற்கு முன்னும் பின்னும் பாவிகள் இருந்தாலும் அதுவும் பாவகத்தாரி யோகம் தான்.இந்த வீட்டுக்கு முன்னும் பின்னும் இருக்கிற பாவிகள் கூட கொஞ்சம் கருணை காட்டுவாங்க ஆனா கிரகத்துக்கு முன்னும் பின்னும் இருக்கிற பாவிகள் துளி கூட கருணையே காட்ட மாட்டாங்க.

எப்ப பார்த்தாலும் வாழ்க்கையில ஒரு பற்றாக்குறையும் ஒரு ஒரு லோபித்தனம் இருக்கும். அதாவது எதையுமே ஒரு தாராளமா செய்ய முடியாத நிலையிலயும் எடுக்கிற முயற்சிகள்ல பூரா சிக்கலும் இருக்கும். அதுக்கு இந்த பாமர யோகம் தான் மெயின் கான்செப்ட்டா இருக்கும்.

மகர லக்ன ஜாதகம் எடுத்துக் கொண்டால், இவருக்கு ஒன்பதாம் அதிபதி ஆறாம் அதிபதி ரெண்டு பேரும் ஒன்னுதான் புதன். ஒன்பதுக்குடைய பாக்கியாதிபதியே ஆறுக்குடையவரா ஆகுறார். இவர் போய் ஆறாம்

இடத்துல ஆட்சியா அமர்கிறார். புதன் கூடவே சூரியன் மூணு டிகிரிக்குள்ள இருக்கார். அட்டமாதிபதியும் கூட்டு சேர்த்துக்கிறார். கூடவே லக்னாதிபதி சனியும் அமர்கிறார்.

புதன் நடுவில் சிக்கிக் கொள்கிறார். இங்க லக்னாதிபதி ஆறாம் இடத்துக்கு போயி பாக்கியாதிபதி ஆறாம் இடத்துக்கு போயி எட்டாம் அதிபதி ஆறாம் இடத்துக்கு போகும்போது இந்த ஜாதகரும் லக்னமும் கெட்டு லக்னாதிபதியும் கெட்டு ஆறாம் அதிபதி வழுத்து ஜாதகருக்கு பாக்கியம் என்றால் என்ன என்னவென்றே தெரியாது என்கின்ற நிலையில் அட்டமாதிபதியினாலும் பாதிக்கப்படும்போதுதான் அந்த பாமர யோகம் வருகிறது. பாக்கியாதிபதி அல்லது பாக்கியாதிபதி வீடு பழுதுபடாமல் இருந்தால் உங்களுக்கு பாமர யோகம் இல்லை என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.

அப்படி ஒருவேளை பாமர யோகம் இருந்துச்சுன்னா கிடைத்த வாழ்க்கையை வாழ பழகிக்கொள்ள வேண்டியது அவசியம். தேவையற்ற விஷயங்கள்ல முயற்சி பண்ணி

பார்த்துட்டு அதிகமா பலகீனப்பட வேண்டியது இருக்க வேண்டிய அவசியம் இருக்காது.

Whats_app_banner

டாபிக்ஸ்