Sarabeswarar Worship: பில்லி, சூனியம், கடன், நோய், எதிரிகளை ஓட விடும் சரபேஸ்வரர் வழிபாடு பற்றி தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sarabeswarar Worship: பில்லி, சூனியம், கடன், நோய், எதிரிகளை ஓட விடும் சரபேஸ்வரர் வழிபாடு பற்றி தெரியுமா?

Sarabeswarar Worship: பில்லி, சூனியம், கடன், நோய், எதிரிகளை ஓட விடும் சரபேஸ்வரர் வழிபாடு பற்றி தெரியுமா?

Kathiravan V HT Tamil
Sep 23, 2024 07:51 PM IST

Sarabeswarar Worship: சரபம் என்ற பறவையின் இரண்டு இறக்கைகள், யாளியின் வடிவத்துடன் கூடிய மனித உடலோடு கலந்த ரூபமாக சரபேஸ்வரர் தோன்றினார்.

Sarabeswarar Worship: பில்லி, சூனியம், கடன், நோய், எதிரிகளை ஓட விடும் சரபேஸ்வரர் வழிபாடு பற்றி தெரியுமா?
Sarabeswarar Worship: பில்லி, சூனியம், கடன், நோய், எதிரிகளை ஓட விடும் சரபேஸ்வரர் வழிபாடு பற்றி தெரியுமா?

நரசிம்ம அவதாரமும் சரபேஸ்வரரும்!

இது குறித்த் ஆன்மீக பேச்சாளர் தேச மங்கயர்கரசி கூறுகையில், திருமால் பக்தர் ஆன பிரகலாதரின் பக்தி ஆனது உலகம் அறிந்தது. அவரது தந்தையான இரண்யனின் பிடிவாதம், கர்வம் ஆகியவை பரகலாதரின் பக்திக்கு முன் தூசாக போனது. 

”இறைவன் எங்கும் நிறைந்து இருக்கிறார் என்று சொல்கிறாயே எங்கே இருக்கிறார் காட்டு?” என இரண்யன் பரகலாதரிடம் கேட்ட போது ’தூணில் இருக்கிறான்’ என்று சொல்லி அந்த தூணை பிளந்து கொண்டு உக்கிரமாக இறைவன் நரசிம்மமூர்த்தியாக வெளிப்பட்ட கதை பலரும் அறிந்தது ஆகும். 

அப்படி வெளிப்பட்டு இரண்ய வதம் செய்து பிரகலாதருக்கு வரமளித்த பிறகும். நரசிம்மர் கோபம் என்பது தனியாமல் இருந்தது. இதற்காக உக்கிரத்தை தனிய வைக்க முயன்ற முப்பத்து முக்கோடி தேவர்கள் முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை. 

நரசிம்மமூர்த்தியின் கோபத்தை தனிய வைக்க வேண்டும் என்று தேவர்கள் எல்லோரும் சென்று சிவபெருமானிடத்திலே முறையிட எப்படி அவர் மனிதனாகவும் தேவமாகவும் மிருகமாகவும் மூன்றையும் இணைத்து ஒரு கூட்டணியாக நரசி சிம்மமாக வழிபட்டாரோ அதேபோல பறவையாகவும் மனிதமாகவும் விலங்காகவும் மூன்றையும் ஒன்றிணைத்து நரசிம்மம் எனும் அவருடைய உக்கிரத்தை தணிக்க சரபம் அப்படிங்கிற ஒரு ரூபத்தை சிவபெருமான் எடுத்தார். 

சரபம் என்ற பறவையின் இரண்டு இறக்கைகள், யாளியின் வடிவத்துடன் கூடிய மனித உடலோடு கலந்த ரூபமாக சரபேஸ்வரர் தோன்றினார். 

நரசிம்மமூர்த்தியின் முன்பு சரபேஸ்வரர் முன்பு சென்று நிற்கும் போது இரண்டு இறக்கைகளினாலும் நரசிம்ம மூர்த்தியை அப்படியே ஆலிங்கனம் செய்து கொள்ளும் போது நரசிம்ம மூர்த்தியின் கோபம் தனிந்தது. 

கோபம் தணிந்து நரசிம்ம மூர்த்தி காட்சி தருவதற்கு காரணமான சிவ பெருமானினுடைய ரூபத்தை சரபேஸ்வர ரூபமாக வழிபாடு செய்கிறோம். 

சரபேஸ்வரரின் கோயில்கள்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்புவனம் திருத்தளத்தில் சரேஸ்வரருக்கு என்று தனி சன்னதி அமைந்திருக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் உள்ள தூணில் சரபேஸ்வரரின் உடைய வழிபாடு நடைபெறுகின்றது. சென்னை குறுங்காளீஸ்வரர் ஆலயத்தின் முன்பே இருக்கக்கூடிய மண்டபத்தில ஒரு தூணில் சரபேஸ்வரர் ஆலிங்கன சரபேஸ்வரராக காட்சி தருகிறார்.

சங்கடம் போக்கும் சரபேஸ்வரர் வழிபாடு 

சரபேஸ்வரரை பிரதோஷ காலத்தில் வழிபடுவது மிக மிக சிறப்பானது. ஞாயிற்றுக்கிழமை 4:30-6:00 மணி வரையிலான ராகு காலத்தில் இவரை வழிபட வேண்டும். 

கூடவே அம்பிகையினுடைய சொரூபமாக விளங்கக்கூடிய சூலினி, பிரத்யங்கிரா என்கின்ற இரண்டு தேவிமார்களின் உடைய வழிபாடும் இதில் முக்கியமானது ஆகும். 

வீரபத்ர சொரூபமாக இறைவன் வந்து கோபம் கொண்டு வருகிறபோது, அம்பாளினுடைய ரூபம் காளி ரூபமாக இருக்கும். 

அதே போல் சிவபெருமான் சரபேஸ்வரராக வரும் போது அம்பிகை ஆனவர் சூலினி, பிரத்யங்கிரா என்ற தெய்வங்களாக அருள் புரிகின்றனர். 

சரபேஸ்வர மூர்த்தியை வழிபட்டால் வாழ்க்கையில் வெற்றி உண்டாகும். வாழ்வில் நமக்கு ஏற்படக்கூடிய எல்லாவிதமான பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். 

பில்லி, சூனியம், ஏவல், செய்வினை, கண்ணேறு உள்ளிட்ட பிரச்சனைகளில் உள்ளவர்களுக்கு சரபேஸ்வரரின் வழிபாடு துன்பங்களில் இருந்து விடுதலை கிடைக்கும். மேலும் உடலில் நாள்பட்ட நோய், திருமண தடை உள்ளிட்ட பிரச்னைகள் தீரும் என கூறி உள்ளார். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்