October Rasi Palan : விருச்சிக ராசிக்குள் நுழையும் சுக்கிரன்.. முருகனுக்கு நெய் தீபம் போடுங்க.. அக்டோபரில் அதிர்ஷ்டம்தா!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  October Rasi Palan : விருச்சிக ராசிக்குள் நுழையும் சுக்கிரன்.. முருகனுக்கு நெய் தீபம் போடுங்க.. அக்டோபரில் அதிர்ஷ்டம்தா!

October Rasi Palan : விருச்சிக ராசிக்குள் நுழையும் சுக்கிரன்.. முருகனுக்கு நெய் தீபம் போடுங்க.. அக்டோபரில் அதிர்ஷ்டம்தா!

Pandeeswari Gurusamy HT Tamil
Sep 23, 2024 02:25 PM IST

October Rasi Palan : உங்கள் வாழ்க்கை சிறப்புற அமைய செவ்வாய்க்கிழமை தோறும் அருகில் இருக்கும். முருகன் கோவிலுக்குச் சென்று நெய்தீபம் ஏற்றுங்கள். நல்லதே நடைபெறும்.

October Rasi Palan : விருச்சிக ராசிக்குள் நுழையும் சுக்கிரன்.. முருகனுக்கு நெய் தீபம் போடுங்க.. அக்டோபரில் அதிர்ஷ்டம்தா!
October Rasi Palan : விருச்சிக ராசிக்குள் நுழையும் சுக்கிரன்.. முருகனுக்கு நெய் தீபம் போடுங்க.. அக்டோபரில் அதிர்ஷ்டம்தா!

கிரகப் பெயர்ச்சி

அக்டோபரில் புதன் பகவான் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகின்றார். சுக்கிர பகவான் அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி அன்று விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகின்றார். அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி இரவு 7 மணி 40 நிமிடத்திற்கு சூரிய பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகின்றார் செவ்வாய் பகவான் அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி அன்று மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகின்றார். நீச்ச ஸ்தானத்திற்கு செல்லும் செவ்வாய் பகவானால் மிகப்பெரிய மாற்றம் உண்டாகும். இம்மாத கடைசியில் அக்டோபர் 29 ஆம் தேதி புதன் பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.

அக்டோபரின் விசேஷ நாட்கள்

விசேஷ நாட்கள் என எடுத்துக்கொண்டால் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி மகாளய அமாவாசை வருகின்றது. வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய இந்த அமாவாசையில் பித்துருக்கள் மேலோகத்தில் இருந்து பூமிக்கு வந்து நம்மை ஆசீர்வதிக்கக்கூடிய விசேஷமான நாளாகும். அக்டோபர் மூன்றாம் தேதி நவராத்திரி விழா ஆரம்பம். அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி ஆயுத பூஜை என்று சொல்லக்கூடிய சரஸ்வதி பூஜை வருகிறது. அக்டோபர் 12 ஆம் தேதி விஜயதசமி, அக்டோபர் 31 ஆம் தேதி தீப ஒளி திருநாள்.

பலன்கள்

எடுத்த வேலையை கொடுத்த நேரத்தில் செய்து பெயர் எடுக்கும் விருச்சிக ராசி அன்பர்களே நீங்கள் நிதானமாக செயல்படுவதன் மூலம் பல காரியங்களை சாதிக்க முடியும். இந்த மாதம் அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம். தனாதிபதி குருபகவான் ஏழாம் ஸ்தானத்தில் இருப்பதால் தைரியம் அதிகரிக்கும். சகோதரர்கள் வகையில் மிக நல்ல பலனை எதிர்பார்க்கலாம். நினைத்த வசதிகள் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும் மனதில் தெம்பு உண்டாகும். வீடு வாகனம் வாங்கும் எண்ணம் கைகூடும். வாக்கு வன்மையால் காரியம் கைகூடும் ஆன்மீக எண்ணம் உண்டாகும். தொழில் வியாபாரம் நல்ல நிலைக்கு உயரும். போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தேவையான நிதி உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள். முன்னேற்றம் காண்பார்கள் நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும்.

நிர்வாகத் திறமை வெளிப்படும். மேலிடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். உறவினர்கள் மூலம் மூலம் உங்களின் செயல்பாடுகளுக்கு ஆதரவு அதிகரிக்கும். பெண்களைப் பொறுத்தவரை மனோதைரியம் கூடும் சாமர்த்தியமான பேச்சால் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். கலைத்துறையினரை பொறுத்தவரை நன்மை தீமை பற்றி கவலைப்படாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வீர்கள்.

போட்டிகள் மறையும். ஒப்பந்தங்கள் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களது வார்த்தைக்கு மதிப்புகள் கூடும். அரசியல் துறையினருக்கு கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும் பணவரத்து கூடும். மனக்குழப்பம் நீங்கும். திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள். சின்ன விஷயத்துக்கு கூட கோபம் வரலாம். நிதானமாக இருப்பது நன்மை தரும். ராகுவின் சஞ்சாரம் பணவரவைத் தரும் வேற்றுமொழி பேசும் நபரால் நன்மைகள் உண்டாகும். மாணவர்களைப் பொறுத்தவரை கல்வி நிலை உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

நட்சத்திர பலன்கள்

விசாகம் நான்காம் பாதம்

குடும்பத்தில் குதுகலம் அதிகரிக்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். கடந்த காலமாக தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். அதுவும் நல்ல வரனாக அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறுவர்.

அனுஷம் நட்சத்திரம்

விருந்து விழா என சென்று பெறுவீர்கள். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக மறையும். தம்பதிகளிடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பிரிந்திருக்கும் குடும்பம் ஒன்று சேரும். உத்தியோகம் பார்ப்பவர்கள் பின்தங்கிய நிலை மாறி முன்னேற்றம் காண்பர்.

கேட்டை நட்சத்திரம்

மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் திறமை மேம்படும். கோரிக்கைகள் நிறைவேறும். பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு முக்கிய பொறுப்புகள் வந்து சேரும். வேலையின்றி தவிக்கும் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். உங்கள் வாழ்க்கை சிறப்புற அமைய செவ்வாய்க்கிழமை தோறும் அருகில் இருக்கும். முருகன் கோவிலுக்குச் சென்று நெய்தீபம் ஏற்றுங்கள். நல்லதே நடைபெறும்.

சிறப்பு பரிகாரம்

சொந்த வீடு அமைவதற்கு ஆன்மீக பரிகாரம் சொந்த வீடு கனவு நிறைவேற வீட்டிலேயே இந்த எளிய பரிகாரத்தை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். எளிமையான இந்த இரண்டு பரிகாரங்களை செய்து வந்தால் விரைவில் சொந்த வீடு யோகம் அமையும். ஒரு சிறிய அகல் விளக்கில் விளக்கெண்ணை ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான வாமனரை மனதில் நினைத்து சொந்த வீடு அமைய வேண்டும். என்று பிரார்த்தனை செய்து கொண்டு மாதம்தோறும் வரும் திருவோண நட்சத்திரத்தன்று வீட்டின் அக்னி மூளையான தென்மேற்கு மூலையில் இந்த விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். வாமனனை நினைத்து பால் பாயாசம் நிவேதானமாக படைத்து வழிபட்டு வந்தால் விரைவில் சொந்த வீடு யோகம் அமையும்.

மற்றொரு பரிகாரமாக வீட்டில் பயன்படுத்தும் காமாட்சி விளக்கு அல்லது கஜலட்சுமி விளக்கு அல்லது வழக்கமாக பயன்படுத்தும் ஏதாவது ஒரு விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். விளக்கை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்து வாசனை மிகுந்த வெள்ளை நிற பூக்களை சாற்றுங்கள். பிறகு 5 ரூபாய் நாணயத்தை விளக்கிற்குள் போட்டு நெய் அல்லது எண்ணெய் ஊற்றுங்கள். ஒரு சிறிய தட்டின் மத்தியில் மஞ்சள் குங்குமப் பொட்டு வைத்து அதன் மீது 5 ரூபாய் நாணயத்தை வைத்து நாம் ஏற்கனவே தயார் செய்த விளக்கை இதில் வைத்து விளக்கினை ஏற்ற வேண்டும். தினமும் காலையில் 6:00 மணி முதல் 7:00 மணிக்குள் இந்த விளக்கை ஏற்றி வந்தால் விரைவில் வீடு கட்டுவீர்கள்.

காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையிலான நேரம் என்பது ஞாயிற்றுக்கிழமையில் சூரியன் திங்கள் கிழமையில் சந்திரன் செவ்வாய்க்கிழமையில் செவ்வாய் புதன்கிழமையில் புதன் வியாழக்கிழமையில் குரு வெள்ளிக்கிழமையில் சுக்கிரன் சனிக்கிழமையில் சனி என நவகிரகங்களில் பாவ கிரகங்களான ராகு கேதுவைத் தவிர்த்து மற்ற ஏழு கிரகங்களையும் குறிக்கும் கோரை நேரமாகும். இந்த நேரத்தில் விளக்கு ஏற்றுவதால் நவகிரகங்களின் அருள் கிடைத்து பூமி யோகம் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

ஆன்மீகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்