’காதலில் கலக்கம்! அரசியலில் உயர்பதவி! பணத்தில் குவியல்!’ 1ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கான 2025ஆம் ஆண்டு நியூமராலஜி பலன்கள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ’காதலில் கலக்கம்! அரசியலில் உயர்பதவி! பணத்தில் குவியல்!’ 1ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கான 2025ஆம் ஆண்டு நியூமராலஜி பலன்கள்

’காதலில் கலக்கம்! அரசியலில் உயர்பதவி! பணத்தில் குவியல்!’ 1ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கான 2025ஆம் ஆண்டு நியூமராலஜி பலன்கள்

Kathiravan V HT Tamil
Nov 28, 2024 10:14 PM IST

1, 10, 19 அல்லது 28 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால், உங்கள் மூல எண் அல்லது ரேடிக்ஸ் எண் 1 ஆக நியூமராலஜியில் வகைப்படுத்தப்படுகின்றது. ஒன்றாம் எண் என்பது சூரிய பகவானுக்கு உரியது. இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு சுயமரியாதை உணர்வு மிகுந்து இருக்கும்.

’காதலில் கலக்கம்! அரசியலில் உயர்பதவி! பணத்தில் குவியல்!’ 1ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கான 2025ஆம் ஆண்டு நியூமராலஜி பலன்கள்
’காதலில் கலக்கம்! அரசியலில் உயர்பதவி! பணத்தில் குவியல்!’ 1ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கான 2025ஆம் ஆண்டு நியூமராலஜி பலன்கள்

நியூமராலஜி கணிப்பின் படி, ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு வரும் 2025ஆம் ஆண்டில் வேலை, தொழில், நிதி, உறவு, ஆரோக்கியம் ஆகியவற்றில் உண்டாகும் பலன்களை தற்போது பார்க்கலாம். 

ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களுக்கான பலன்கள்

1, 10, 19 அல்லது 28 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால், உங்கள் மூல எண் அல்லது ரேடிக்ஸ் எண் 1 ஆக நியூமராலஜியில் வகைப்படுத்தப்படுகின்றது. ஒன்றாம் எண் என்பது சூரிய பகவானுக்கு உரியது. இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு சுயமரியாதை உணர்வு மிகுந்து இருக்கும். இந்த உணர்வு சில நேரங்களில் கர்வமாகவும் மாறக்கூடும் என்பதால் எச்சரிக்கையும், கவனமும் தேவை. 

உங்களுக்கு குடும்பத்திலும், சமூகத்திலும் மரியாதை கிடைக்கும். உங்கள் தலைமை பண்புகள் பிறரை கவரும். தேவையற்ற கோபத்தை தவிர்ப்பது நன்மைகளை கொண்டுவரும். அறிவு, முயற்சி, திறமையை பயன்படுத்தினால் சிறந்த தலைவராக மாறுவீர்கள். உங்கள் கனவுகளை அடைய கடினமாக உழைக்கும் காலம் இது. நண்பர்களுடன் தொலைதூர பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

காதலை வெளிப்படுத்த தயக்கம்

இந்த ஆண்டில் உங்கள் காதலை வெளிப்படுத்துவதில் சற்று தயக்கம் இருக்கும். காதலுக்காக தியாகம் செய்ய தயாராக இருப்பீர்கள். காதல் மீதான சுய ஒழுக்கம் உங்களுக்கு வெற்றியை கொண்டு வந்து கொடுக்கும். 

சமூகத்தில் கௌரவம் உண்டாகும்

வரும் புத்தாண்டு முதல் உங்களுக்கு குடும்பத்திலும், சமூகத்திலும் செல்வாக்கும், மரியாதையும் கூடும். சிலர் சொந்தமாக தொழில் தொடங்கி சமூகத்தில் மற்றவர்களின் மரியாதையைப் பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு உயர் பொறுப்புகள் தேடி வரும். சகோதர வழியில் நன்மைகள் கிடைக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். திருமணம் மற்றும் கூட்டு வணிகம் ஆகியவை நன்மைகளை பெற்றுத் தரும். கோபத்தை கட்டுப்படுத்தி நிதானமாக செயல்படுங்கள். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்