புத்தாண்டில் மாறும் 4 கிரகங்கள்! 2025ஆம் ஆண்டு செம அடி வாங்க போகும் 3 ராசிகள்! உடம்ப இரும்பு ஆக்கிக்கோங்க!
New Year Rasipalan 2025: வரும் 2025ஆம் ஆண்டில் பொருளாதாரம், வேலை, தொழில், உடல்நலம், திருமண உறவுகள், குடும்ப உறவுகளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து தற்போது பார்க்கலாம்
New Year Rasipalan 2025: சனி பகவான் வரும் 2025ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் தேதி கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். குரு பகவான் வரும் மே மாதம் 14ஆம் தேதி அன்று ரிஷபம் ராசியில் இருந்து மிதுனம் ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். ராகு கேது கிரகங்கள் வரும் மே மாதம் 18ஆம் தேதி அன்று பெயர்ச்சி ஆக உள்ளனர். ராகு பகவான் மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கும். கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்.
வரும் 2025ஆம் ஆண்டில் பொருளாதாரம், வேலை, தொழில், உடல்நலம், திருமண உறவுகள், குடும்ப உறவுகளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து தற்போது பார்க்கலாம்.
மேஷம்
மேஷம் ராசிக்கு வருடக் கோள்களில் 3 கோள்களின் சஞ்சாரம் சரி இல்லை. சனி பகவானின் சஞ்சாரம் வரும் 2025ஆம் ஆண்டு மார்ச்சில் விரைய சனியாக வருகின்றது. இதனால் விரையங்கள் அதிகரிக்கும். உடல்நிலையில் மிக கவனமாக இருக்க வேண்டும். குரு பகவான் 3ஆம் இடத்தில் மறைகிறார். பாக்கிய ஸ்தானத்திற்கு கேது வருகிறார். 11ஆம் இட ராகு பகவானால் மட்டுமே நன்மைகள் கிடைக்கும். 11ஆம் இட ராகு பொருளாதார பிரச்னைகளை சரி செய்வார். இந்த காலத்தில் மேஷம் ராசிக்காரர்கள் ரிஸ்க் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பணியில் இருப்பவர்கள் திட்டமிடாமல் வேலையை ராஜினாமா செய்யக் கூடாது. பொருளாதாரத்தில் சில இழுபறிகள் உண்டாகும். இதனை முடிந்த அளவு சுப விரையங்களாக மாற்றிக் கொள்வது நல்லது. ஏழைகளுக்கு தானம் செய்வதன் மூலம் சனி பகவான் தரும் கெடுதல்கள் குறையும். கடன், நோய், எதிரிகள் வழியில் சில பிரச்னைகள் வரலாம் என்பதால் எச்சரிக்கை தேவை.
சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்கள் அஷ்டம சனி பாதிப்புக்குள்ளாக போகிறார்கள். பிற ராசிகளை ஒப்பிடும் போதும் சிம்ம ராசிக்கு நேரடி பகை கிரகமாக சிம்ம ராசி உள்ளது. உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலகட்டத்தில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குரு பெயர்ச்சிக்கு பிறகு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். சொந்த ஜாதகத்தில் சனி, ராகு, செவ்வாய் திசைகள் நடக்கும் சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தங்கள் நட்சத்திர நாட்களில் திருவண்ணமலை செல்வது பிரச்னைகளை தீர்க்கும்.
கும்பம்
கும்பம் ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி முடிந்தாலும், ராகு பகவானின் சஞ்சாரம் சிக்கல்களை தரும். ராகுவின் வருகை மன அழுத்தத்தை தரும். இருப்பினும் ஜென்ம சனி விலகியதால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தடைப்பட்ட பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். தொழிலில் இருந்த மந்த நிலை விலகி லாபம் கிடைக்கும். ராகு பகவான் ராசிக்குள் வந்து உள்ளதால் இனம்புரியாத கவலை உண்டாகும். பிரச்னையே இல்லாமல் இருந்தாலும் மனதில் பயம் இருந்து கொண்டே இருக்கும். கும்பம் ராசிக்காரர்கள் இதுவரை சந்தித்து வந்த பிரச்னைகள் தீர்ந்தாலும், இனம்புரியாத பயம் மனதில் இருக்கும்.
பரிகாரம்
மேற்கண்ட மூன்று ராசிக்காரர்களும் தங்கள் நட்சத்திர நாட்களில் குலதெய்வ வழிபாடு செய்வது நன்மைகளை பெற்றுத் தரும்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.