Sun Transit: கேதுவுடன் இணைந்து கன்னி ராசியில் சூரியன் சஞ்சாரம்..எதிலும் வெற்றி, வாழ்வில் மகிழ்ச்சி பெறப்போகும் ராசிகள்-sun will be with ketu in september which zodiac signs will get special benefits - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sun Transit: கேதுவுடன் இணைந்து கன்னி ராசியில் சூரியன் சஞ்சாரம்..எதிலும் வெற்றி, வாழ்வில் மகிழ்ச்சி பெறப்போகும் ராசிகள்

Sun Transit: கேதுவுடன் இணைந்து கன்னி ராசியில் சூரியன் சஞ்சாரம்..எதிலும் வெற்றி, வாழ்வில் மகிழ்ச்சி பெறப்போகும் ராசிகள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 31, 2024 05:51 PM IST

Horoscope Sun Transit Virgo: சிம்மத்தில் இருந்து வரும் சூரியன் கன்னி ராசியில் சஞ்சாரிக்க இருக்கிறார். கேதுவுடன் இணைந்து சஞ்சாரம் செய்வதன் இதன் விளைவாக எட்டு ராசிகள் எடுத்த காரியத்தில் வெற்றி, வாழ்வில் மகிழ்ச்சி பெற இருக்கிறார்கள்.

Sun Transit: கேதுவுடன் இணைந்து கன்னி ராசியில் சூரியன் சஞ்சாரம்..எதிலும் வெற்றி, வாழ்விலை மகிழ்ச்சி பெறப்போகும் ராசிகள்
Sun Transit: கேதுவுடன் இணைந்து கன்னி ராசியில் சூரியன் சஞ்சாரம்..எதிலும் வெற்றி, வாழ்விலை மகிழ்ச்சி பெறப்போகும் ராசிகள் (Pixabay)

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகிறார். இவர் நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக திகழ்கிறார்.

சூரிய பகவான் மாதத்துக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். ஒவ்வொரு முறையும் இவர் இடம் மாறும் பொழுது தமிழ் மாதம் பிறக்கிறது. சூரிய பகவான் சிம்ம ராசி பலன் அதிபதியாக திகழ்ந்து வருகிறார். வாழ்க்கையில் மிகப்பெரிய யோகங்களை பெற வேண்டும் என்றால் சூரிய பகவானின் ஆசிர்வாதம் கட்டாயம் இருக்க வேண்டும்.

கன்னியில் சூரியன் சஞ்சாரம்

செப்டம்பரில் சூரியன் தனது ராசியை மாற்றுகிறார். சூரியன் தற்போது சிம்ம ராசியில் இருக்கிறார். செப்டம்பர் மாதம் சூரியன் கன்னி ராசிக்கு செல்கிறார்.

கேது ஏற்கனவே கன்னி ராசியில் இருக்கிறார். 2025 வரை கன்னி ராசியில் கேது இருப்பார். பித்ருபக்‌ஷத்தில் சூரியன் கன்னி ராசிக்கு வருகிறார். கன்னி ராசியின் அதிபதி புதன். கன்னி ராசியில் சூரியனின் வருகையை கன்னி சங்கராந்தி என்று சொல்வார்கள்.

உங்கள் ஜாதகத்தில் கேதுவின் நிலையைப் பார்த்தாலே கேது உங்களுக்கு நல்லவரா, கெட்டவரா என்பது புரியும். கேது கெடுதல் பலனை கொடுத்தால், ஒரு நபர் எடுக்கும் எந்த முடிவும் தோல்வியடைகிறது என்று கூறப்படுகிறது. இப்போது சூரியனும் உடன் வருகிறார்.

செப்டம்பர் 17ஆம் தேதி காலை 11.17 மணிக்கு பாத்ரபத சுக்ல பக்‌ஷ சதுர்தசி திதியில் சூரியனின் பெயர்ச்சி கன்னி ராசியில் நடைபெறும். சூரியனின் இந்த சஞ்சாரத்தால் பல ராசிக்காரர்கள் பலன் அடைவார்கள். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு விசேஷ பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்

சூரிய பகவான் சஞ்சாரம் செய்கின்ற காரணத்தினால் சுப மற்றும் அசுப பலன்கள் 12 ராசிகளுக்கும் கிடைக்கும். அந்த வகையில் சூரிய பெயர்ச்சியால் ராஜயோகத்தை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சூரியன் சஞ்சாரத்தால் பலன் பெறு ராசிகள்

சூரியனின் இந்த ராசி மாற்றத்தால் 8 ராசிக்காரர்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.

மேஷம், ரிஷபம் ராசிக்காரர்கள் சமூகத்தில் மரியாதை பெறுவார்கள். இவர்களுக்கு நேரம் நன்றாக அமையக்கூடும். இந்த ராசிக்காரர்களுக்கு சில வேலைகளை வழிநடத்தும் வாய்ப்பு கிடைக்கும்.

சிம்மம், மிதுனம், கடகம் ராசிக்காரர்கள் தடைகளை கடந்து தங்கள் இலக்குகளை வெற்றிகரமாக முடிப்பார்கள். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்

மறுபுறம், விருச்சிகம், தனுசு மற்றும் மகரம் ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் நம்பிக்கையைப் பெறுவார்கள், அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. அவற்றைத் முழுமையாக நம்புவதற்கு முன், கண்டிப்பாக சம்பந்தப்பட்ட துறையில் நிபுணரிடம் ஆலோசனை பெறவும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

 

 

டாபிக்ஸ்