Numerology Horoscope 1 September 2024: ’செப்டம்பர் 1ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?’ நியுமராலஜி பலன்-numerology horoscope 1 september 2024 discover who will be lucky or unlucky on 1st september 2024 - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Numerology Horoscope 1 September 2024: ’செப்டம்பர் 1ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?’ நியுமராலஜி பலன்

Numerology Horoscope 1 September 2024: ’செப்டம்பர் 1ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?’ நியுமராலஜி பலன்

Kathiravan V HT Tamil
Aug 31, 2024 02:55 PM IST

Numerology Horoscope 1 September 2024: நியுமராலஜி எனப்படும் எண் கணிதம் மூலம் ஒருவரின் பிறந்த தேதி எண்ணை கொண்டு பலன்களை கணிக்க முடியும். எண் கணிதத்தை பொறுத்தவரை ஒவ்வொரு எண்ணும் ஏதாவது ஒரு கிரகத்துடன் தொடர்புடையது. இது ஒரு நபரின் வாழ்க்கையில் நன்மை மற்றும் தீமைகளை ஏற்படுத்தும் தன்மைகளை கொண்டு உள்ளது.

Numerology Horoscope 1 September 2024:  ’செப்டம்பர் 1ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?’ நியுமராலஜி பலன்
Numerology Horoscope 1 September 2024: ’செப்டம்பர் 1ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?’ நியுமராலஜி பலன்

எண் 1

1ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு உள்ளவர்களுக்கு நேர்மறை ஆற்றல் நிறைந்த நாளாக இருக்கப் போகிறது. உங்களின் சுறுசுறுப்பான செயல்களால் அலுவலக பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உங்கள் மன ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். வெளி உணவுகளை தவிர்க்கவும். இந்த நாளின் அதிர்ஷ்ட எண் 8, அதிர்ஷ்ட நிறம் நீலம் ஆகும். 

எண் 2

2ஆம் எண்ணில் பிறந்தவரக்ளுக்கு இந்த நாள் பணிச்சுமைகள் நிறைந்ததாக இருக்கலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்கைக்கும் மற்றும் தொழில் வாழ்க்கைக்கு இடையில் சமநிலையை ஏற்படுத்த முயற்சிக்கவும். உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்திற்காகவும் சிறிது நேரம் ஒதுக்குங்கள். இன்றைய அதிர்ஷ்ட எண் 6, அதிர்ஷ்ட நிறம் சிவப்பு ஆகும். 

எண் 3

3ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு தங்களின் வேலைகளில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். பணம் சம்பாதிக்க புதிய வழிகளை முயற்சி செய்யலாம். இந்த நாளின் அதிர்ஷ்டம் தரும் எண் 5, அதிர்ஷ்ட நிறம் பச்சை. 

எண் 4

4ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் காதல் நிறைந்த நாளாக இருக்கும். காதல் துணை உடன் இன்று சிலர் நல்ல நேரத்தை செலவிடலாம். சிலர் டேட்டிங் செல்லவும் திட்டமிடலாம். உங்கள் செலவுகளில் ஒரு கண் வைத்திருங்கள். இன்றைய அதிர்ஷ்ட எண் 7, அதிர்ஷ்டம் தரும் நிறம் இளஞ்சிவப்பு.

எண் 5

5ஆம் எண்ணில் பிறந்தவர்கள் இந்த நாளில் கவனமுடன் செயல்பட வேண்டியது அவசியம். பாடல், நடனம், சமையல் அல்லது நடைபயிற்சி என எதுவாக இருந்தாலும், இன்று உங்களுக்கு பிடித்த செயலுக்கு சிறிது நேரம் ஒதுக்குங்கள். இப்படி செய்வதால் மன உளைச்சலும் குறையும். இன்றைய அதிர்ஷ்டம் தரும் எண் 1, அதிர்ஷ்டம் தரும் நிறம் வெள்ளை.

எண் 6 

6ஆம் எண்ணில் பிறந்தவர்கள் பணம் சார்ந்த விஷயங்களில் சற்று கவனம் உடன் இருப்பது அவசியம். பணம் சார்ந்து முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். தேவைப்பட்டால் ஒரு நிபுணரை அணுகவும். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். தாயுடன் சேர்ந்து உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். இன்றைய நாளின் அதிர்ஷ்டம் தரும் எண் 3, அதிர்ஷ்டம் தரும் நிறம் ஆரஞ்சு. 

எண் 7

7ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். நீங்கள் அலுவலக அரசியலில் இருந்து விலகி இருப்பது நல்லது. உங்கள் அனைத்து வேலைகளையும் இன்று காலக்கெடுவில் முடிக்கவும். காதல் வாழ்க்கையில் உங்கள் துணையுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். இன்றைய அதிர்ஷ்டம் தரும் எண் 9, அதிர்ஷ்டம் தரும் நிறம் மஞ்சள். 

எண் 8 

8ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். உங்கள் நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இன்றைய நாளின் அதிர்ஷ்டம் தரும் எண்  4,  அதிர்ஷ்டம் தரும் நிறம் பழுப்பு.

எண் 9

9ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கொஞ்சம் பிஸியாக இருக்கும். சிலருக்கு வேலை நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். அவ்வப்போது இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள். பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். இன்றைய அதிர்ஷ்டம் தரும் எண் 2, அதிர்ஷ்டம் தரும் நிறம் பொன் நிறம். 

 

டாபிக்ஸ்