Numerology Horoscope: செப்டம்பர் 25ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? நாளைய நியூமராலஜி பலன்கள் இதோ!-numerology horoscope 25 september 2024 discover who will be lucky or unlucky on 3st september 2024 - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Numerology Horoscope: செப்டம்பர் 25ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? நாளைய நியூமராலஜி பலன்கள் இதோ!

Numerology Horoscope: செப்டம்பர் 25ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? நாளைய நியூமராலஜி பலன்கள் இதோ!

Kathiravan V HT Tamil
Sep 24, 2024 02:46 PM IST

நியுமராலஜி எனப்படும் எண் கணிதம் மூலம் ஒருவரின் பிறந்த தேதி எண்ணை கொண்டு பலன்களை கணிக்க முடியும். எண் கணிதத்தை பொறுத்தவரை ஒவ்வொரு எண்ணும் ஏதாவது ஒரு கிரகத்துடன் தொடர்புடையது. இது ஒரு நபரின் வாழ்க்கையில் நன்மை மற்றும் தீமைகளை ஏற்படுத்தும் தன்மைகளை கொண்டு உள்ளது.

Numerology Horoscope: செப்டம்பர் 25ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? நாளைய நியூமராலஜி பலன்கள் இதோ!
Numerology Horoscope: செப்டம்பர் 25ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? நாளைய நியூமராலஜி பலன்கள் இதோ!

எண் 1

ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக இருக்கும். வியாபாரத்தில் சில சலசலப்புகள் இருந்தாலும் வருமானம் சிறப்பாக இருக்கும். உங்கள் பேச்சில் இனிமை இருக்கும். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். வருமானம் அதிகரிக்கும். நிதி ஆதாயத்திற்கான அறிகுறிகள் உள்ளன. உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.

எண் 2

இரண்டாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்ற இறக்கம் நிறைந்து இருக்கும். சில விஷயங்களில் மனம் கலங்கலாம். பொறுமையை கடைப்பிடியுங்கள். வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் உயர்வு இருக்கும். அதிக உழைப்பு இருக்கும்.

எண் 3

மூன்றாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். சிலருக்கு மேலும் சில புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். நிதி ஆதாயத்திற்கான அறிகுறிகள் உள்ளன. வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். உங்கள் குடும்பத்தினர் உங்களை முழுமையாக ஆதரிப்பார்கள். சரியான நேரத்தில் உங்களுக்கு ஆலோசனை வழங்குவார்கள்.

எண் 4

நான்காம் எண்ணில் பிறந்தவர்களுக்கு ஆரோக்கியம் சிறந்து விளங்கும். வியாபாரிகள் எளிதாக பணம் ஈட்டுவர். வரவு செலவு விவகாரங்களை சிறப்பாக கையாள்வீர்கள். இதன் காரணமாக உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தில் உயர்வு இருக்கும். பயணம் செய்பவர்கள் நன்மை அடையலாம். இன்று சிலர் அலுவலக அரசியலுக்கு பலியாகலாம்.

எண் 5

ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் பணரீதியாக சவால்களை சந்திக்க நேரிடலாம். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இன்று அலுவலகத்தில் முக்கியமான காரியங்களில் வெற்றி கிடைக்கும். சிலர் சமூக செயல்களில் ஈடுபடுவீர்கள். 

எண் 6 

ஆறாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பணவரவு சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்னைகள் தீரும். பணம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். 

எண் 7 

ஏழாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு நெருக்கமான ஒருவரால் ஆச்சரியத்தில் மூழ்குவீர்கள். தொலைதூரப் பயணங்களுக்கு ஏற்ற நாள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மன உளைச்சல் நீங்கும். மொத்தத்தில் நாளைய தினம் உங்களுக்கு ஒரு நல்ல நாளாக இருக்கும்.

எண் 8

எட்டாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். சிலருக்கு முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரிகள் சிறந்த பணவரவுகளை பெறுவீர்கள். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருங்கள். இன்று சிலருக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கலாம். நெருங்கிய நபரின் உடல்நிலை விரைவாக மேம்படும். சிலருக்கு வேலையில் இருந்த தடைகள் நீங்கும்.

எண் 9 

ஒன்பதால் எண்ணில் பிறந்தவர்களுக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். பெரியவர்களின் ஆலோசனை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். புதிய வேலைகளை தொடங்க நல்ல நாள். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்