Numerology Horoscope: செப்டம்பர் 24ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? நாளைய நியூமராலஜி பலன்கள் இதோ!-numerology horoscope 24 september 2024 discover who will be lucky or unlucky on 3st september 2024 - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Numerology Horoscope: செப்டம்பர் 24ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? நாளைய நியூமராலஜி பலன்கள் இதோ!

Numerology Horoscope: செப்டம்பர் 24ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? நாளைய நியூமராலஜி பலன்கள் இதோ!

Kathiravan V HT Tamil
Sep 23, 2024 04:29 PM IST

எண் கணிதம் 24 செப்டம்பர் 2024: ஜோதிடம் போலவே, எண் கணிதமும் நபரின் எதிர்காலம், இயல்பு மற்றும் ஆளுமை ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு பெயருக்கு ஏற்ப ஒரு ராசி இருப்பதைப் போலவே, எண் கணிதத்திலும் ஒவ்வொரு எண்ணுக்கு ஏற்ப எண்கள் உள்ளன.

Numerology Horoscope: செப்டம்பர் 24ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?
Numerology Horoscope: செப்டம்பர் 24ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

எண் 1

ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சீரானதாக இருக்கும். குடும்பத்திலும், சமூகத்திலும் உங்களின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வணிகம் சிறக்கும். கொடுக்கல் வாங்கல்களில் கவனம் வேண்டும். சிலர் பழைய நண்பரை சந்திக்கலாம். செலவுகளை குறைப்பது அவசியம். எதிர்மறை எண்ணங்களை கைவிடுங்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும், வியாபாரத்தில் புதிய யோசனைகளை செயல்படுத்துவீர்கள். 

எண் 2

இரண்டாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு பெரிய மாற்றங்களை தரும் நாளாக இருக்கும். பணப்பற்றாக்குறை நிலவும். வருமானம் இயல்பானதாக இருக்கும் என்பதால் செலவுகளில் கவனம் தேவை. சிலர் குடும்பத்துடன் புனித யாத்திரை செல்லலாம். மாணவராக இருந்தால் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் நிலுவையில் உள்ள பணம் கிடைக்கும். பழைய விஷயங்கள் பிரச்னையை தரலாம் என்பதால் வீண் விவாதங்களை தவிர்க்கவும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தம் தரும். 

எண் 3

மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் பிரச்சனைகள் வர வாய்ப்பு உண்டு. உங்கள் பிரச்சினைகளுக்கு மற்றவர்களை காரணம் என்று கருதுவதைத் தவிர்க்கவும், கவனமின்மை குறையும். ரத்த சம்பந்தமான நோய்கள் வர வாய்ப்புகள் உண்டு. அலுவலகத்தில் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். மொத்தத்தில், மிகவும் கவனமாக வேலை செய்ய வேண்டிய நாள் இது. வஞ்சகர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது முக்கியம். 

எண் 4

நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் உள்ள முதியவருக்கு உடல்நலக் குறைபாடுகளும் இருக்கலாம். எந்தவொரு முக்கிய முடிவையும் எடுப்பதற்கு முன்னும் குடும்பத்தினரின் ஆலோசனைகளை பெறுங்கள். சிலர் குடும்பத்துடன் வெள்யூர் பயணம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மரியாதை கூடும். இன்று வியாபாரத்தில் ரிஸ்க் எடுப்பதை தவிர்க்கவும்.

எண் 5

ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நாளாக இருக்கும். நிதி ஆதாயம் சீராக கிடைக்கும். சிலர் பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அமையும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் வெற்றிகளை குவிப்பார்கள். பண வரவு சீராக இருக்கும். குடும்பத்துடன் பாசம் அதிகரிக்கும். கோபத்தை கட்டுப்படுத்துவது மேலும் இந்த நாளை அழகாக்கும். 

எண் 6

ஆறாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். வணிகத்தில் இருந்த பண பிரச்னைகள் நீங்கும். முதலீடுகளை யோசித்து செய்வது நல்லது. சிலர் மூட்டு வலியால் அவதிப்பட வேண்டியிருக்கும். முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்னர் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆலோசனை பெறுங்கள். அறிமுகமில்லாத பெண்களுடன் பழக வேண்டாம். 

எண் 7 

ஏழாம் எண்ணில் பிறந்தவர்கள் இந்த நாளில் யாருக்கும் கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும், கடன் வாங்காமல் இருப்பது நல்லது. உடல்நிலை சீராக இருக்கும். இந்த நாளில் நீங்கள் சோம்பல் நிறைந்து காணப்படலாம். உங்களின் கலைத்திறன் அதிகரிக்கும். பழைய நண்பரை சந்திப்பீர்கள், உங்கள் முடிவுகள் சரியாக இருக்கும். வாழ்க்கைத்துணையின் உடல் நலனில் அக்கறை இருக்கும்.

எண் 8

எட்டாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு நிதி நிலை சிறப்பாக இருக்கும். ரியல் எஸ்டேட் வியாபாரிகளுக்கு இந்த நாள் ஆனந்தம் தருவதாக இருக்கும். தொழில் மற்றும் பணியிடத்தில் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். இந்த நாளில் பெரிய முதலீடுகளை தவிர்க்கவும். வாழ்கை துணை உடனான உறவு சிறப்பாக இருக்கும். 

எண் 9

ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூல் ஆகி ஆனந்தம் தரும். பண வரவு சீராக இருக்கும், உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள், உங்களின் கடும் உழைப்பு நன்மைகளை கொடுந்து வந்து சேர்க்கும். பணியிடத்தில் எதிர்பார்த்ததை விட அதிக வெற்றியைப் பெறுவீர்கள். கலை ஆர்வம் அதிகரிக்கும். உடல்நல கோளாறுகள் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருங்கள். பணியிடத்தில் மரியாதை கூடும். 

Whats_app_banner

டாபிக்ஸ்