HBD Adam Smith: ’காலனி ஆதிக்கம் வேண்டாம்! தடையற்ற வணிகம் வேண்டும்!’ ஆடம் ஸ்மித் பிறந்தநாள் இன்று!
இங்கிலாந்து தனது உற்பத்தியை வியாபாரம் செய்ய காலனி நாடுகளைக் கொண்ட பெரிய பேரரசை அமைத்து அதற்கு செலவு செய்து கிடைக்கும் லாபத்தை விட, வியாபாரத்தின் மூலம் பெறப்படும் லாபம் அதிகம், என்று கூறி காலனி ஆதிக்கம் வேண்டாம், தடையற்ற பன்னாட்டு வியாபாரம் வேண்டும் என கூறியவர் ஆடம் ஸ்மித்

நவீன பொருளாதாரத்தின் தந்தை என்று போற்றப்படும் ஆடம் ஸ்மித், 1723ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி பிறந்த ஒரு ஸ்காட்டிஷ் தத்துவஞானி மற்றும் பொருளாதார நிபுணர் ஆவார்.
1776 இல் வெளியிடப்பட்ட அவரது முதன்மைப் படைப்பான "The Wealth of Nations", பாரம்பரிய பொருளாதாரத்திற்கான அடித்தளத்தை அமைத்தது மற்றும் பொருளாதார சிந்தனை மற்றும் கொள்கைகளை ஆழமாக பாதித்தது. .
தொடக்க கால வாழ்கை
சிறுவயதிலேயே தந்தையை இழந்த ஸ்மித், தனது அன்னை மார்க்ரெட் டக்ளஸ் அரவணைப்பில் வளர்ந்தார். இளம் வயதிலேயே கணிதம், வரலாறு ஆகிய பாடங்களை கற்ற அவர் தனது 11ஆவது வயதில் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பிரான்சிஸ் ஹட்சன் கீழ் அறநெறி தத்துவத்தை பயின்ற பின்னர் ஆக்ஸ்போர்டு பாலிஹால் கல்லூரியில் முதுகலை படிப்புகளை படித்தார். வரலாறு, அரசியல், தத்துவம், பொருளாதாரம், மதம் ஆகிய தலைப்புகளில் ஸ்மித் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.