Numerology Horoscope: செப்டம்பர் 16ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?-numerology horoscope 16 september 2024 discover who will be lucky or unlucky on 3st september 2024 - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Numerology Horoscope: செப்டம்பர் 16ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

Numerology Horoscope: செப்டம்பர் 16ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

Kathiravan V HT Tamil
Sep 15, 2024 03:16 PM IST

ஜோதிடத்தைப் போலவே, எண் கணிதமும் ஒரு நபரின் எதிர்காலம், இயல்பு மற்றும் ஆளுமை ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு பெயருக்கு ஏற்ப ஒரு ராசி இருப்பதைப் போலவே, எண் கணிதத்திலும் ஒவ்வொரு எண்ணுக்கு ஏற்ப எண்கள் உள்ளன.

Numerology Horoscope: செப்டம்பர் 16ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?
Numerology Horoscope: செப்டம்பர் 16ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

எண் 1

ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மங்களகரமானதாக இருக்கும். இன்று உங்கள் வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. உங்கள் துணையுடன் தரமான நேரத்தை செலவிடுவது மகிழ்ச்சியை தரும். இரவில் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள்.  

எண் 2

இரண்டாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இன்று நல்ல செய்திகள் கிடைக்கும். காதல் மற்றும் குடும்ப உறவுகளில் இருப்பவர்களுக்கு சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். உடற்பயிற்சி மேற்கொள்வது மகிழ்ச்சியை தரும். 

எண் 3 

மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் கோபப்படுவதை தவிர்க்க வேண்டும். நீங்கள் நினைத்தது போல் பணிகள் முடியாது. கவனம் உடன் திட்டமிட்டு எல்லா வேலைகளையும் முடிக்க வேண்டும். பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை சேர்க்கவும். 

எண் 4 

நான்காம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஆனது நேர்மறை ஆற்றல் நிறைந்த நாளாக இருக்கும். காதல் வாழ்க்கையில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாக நீங்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்துடன் சிறிது நேரம் செலவிடுவது நல்லது.

எண் 5 

ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஆனது காதல் நிறைந்த நாளாக இருக்கும். திருமணமான தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். உரையாடல் மூலம் காதலர்களுக்குள் இருக்கும். தவறான புரிதல்களை குறைக்கலாம். உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்துவது முக்கியம்.

எண் 6
ஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். காதல் உறவில் இருப்பவர்கள் வெளியிடத்திற்கு சென்று நேரம் செலவிடுவீர்கள். எண்ணெய் உணவுகளை உட்கொள்வதை குறைக்கவும். பழைய நண்பரை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் வேலையில் அலட்சியமாக இருக்காதீர்கள்.

எண் 7

ஏழாம் எண்ணில் பிறந்தவர்கள் பணத்தை எச்சரிக்கையுடன் கையாள்வது அவசியம். காதல் வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். அலுவலக அரசியலில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. உங்கள் மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

எண் 8 

எட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் குடும்பத்துடன் சிறிது நேரம் செலவிட வேண்டும். காதல் வாழ்கையில் திருமணத்தைத் திட்டமிடும் சிலர் பெற்றோரின் ஆதரவைப் பெறலாம். பண விவகாரங்களில் கவனம் உடன் செயல்படுவது முக்கியம். உணவில் கவனம் செலுத்துங்கள். மாணவர்கள் கவனம் செலுத்துவதில் சில சிரமங்களை சந்திக்க நேரிடலாம். 

எண் 9 

ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் முக்கியமான பணிகளை செய்யலாம். பணி சுமைகளுக்கு இடையே முறையாக ஓய்வு எடுப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. தாயின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். சிலருக்கு செலவுகள் கூடும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்