Numerology Horoscope: செப்டம்பர் 15ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?-numerology horoscope 15 september 2024 discover who will be lucky or unlucky on 3st september 2024 - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Numerology Horoscope: செப்டம்பர் 15ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

Numerology Horoscope: செப்டம்பர் 15ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

Kathiravan V HT Tamil
Sep 14, 2024 03:47 PM IST

Numerology Horoscope: எண் கணிதம் மூலம் ஒருவரின் பிறந்த தேதி எண்ணை கொண்டு பலன்களை கணிக்க முடியும். எண் கணிதத்தை பொறுத்தவரை ஒவ்வொரு எண்ணும் ஏதாவது ஒரு கிரகத்துடன் தொடர்புடையது.

Numerology Horoscope: செப்டம்பர் 15ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?
Numerology Horoscope: செப்டம்பர் 15ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

இது ஒரு நபரின் வாழ்க்கையில் நன்மை மற்றும் தீமைகளை ஏற்படுத்தும் தன்மைகளை கொண்டு உள்ளது. உங்களின் பிறந்த தேதியின் கூட்டுத் தொகையே நியுமராலஜி எண்ணாக கணக்கில் கொள்ளப்படுகின்றது. உதாரணமாக, 3, 12, 21 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு நியுமராலஜி எண்ணாக 03 (3 + 0 = 1, 1 + 2 = 3) இருக்கும்.

எண் 1

ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்றுவீர்கள். வாழ்க்கைத் துணை மூலம் மனம் மகிழ்ச்சி அடையும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். பணவரவு சீராக இருக்கும். 

எண் 2 

இரண்டாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொருளாதார ரீதியாக வளம் நிறைந்ததாக இருக்கும். உங்கள் நெருங்கியவர்களுடன் நல்ல நேரத்தை செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுற்றியுள்ள நேர்மறையான சூழ்நிலை உங்கள் மனதை நன்றாக வைத்திருக்கும். தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கைக்கு இடையில் சமநிலையை பராமரிக்கவும்.

எண் 3

மூன்றாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். இந்த நாளில் உங்கள் செயல்பாடுகள் உங்களுக்கு வெற்றியை தரும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பொருளாதார ரீதியாக நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள்.

எண் 4

நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் இன்று உங்கள் இலக்குகளில் வெற்றிகளை அடைவீர்கள். செலவுகளை செய்ய நிதி ரீதியாக கவனமாகவும் இருக்க வேண்டும். பண விஷயத்தில் கவனமாக இருங்கள். நேர்மறை சிந்தனை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். 

எண் 5 

ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் இன்றைய நாளில் பலதுறைகளில் சிறப்பாக செயல்படுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மற்றும் சீனியர்கள் இடையே ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். இன்று உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

எண் 6 

ஆறாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இன்று நீங்கள் பணம் தொடர்பான விஷயங்களில் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். எந்த ஒரு செயலிலும் வெற்றி பெறுவீர்கள். அலுவலக வதந்திகளைத் தவிர்க்கவும், இல்லையெனில் நீங்கள் அலுவலக அரசியலுக்கு இரையாக வேண்டியிருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

எண் 7 

ஏழாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்லநாளாக இருக்கும். இந்த நாளில் சிலரிடம் இருந்து நீங்கள் நல்ல செய்திகளைப் பெறலாம். இந்த நேரத்தில் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். உங்கள் வேலையை புத்திசாலித்தனமாக கையாள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.

எண் 8

எட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் இந்த நாளில் கண்மூடித்தனமாக யாரையும் நம்பக்கூடாது. இன்று நீங்கள் தொழில் ரீதியாக சில பணிகளில் வெற்றியை அடைவீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்கள், சீனியர்களின் ஆதரவு இருக்கும். 

எண் 9: 

ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். அலுவலக மீட்டிங்கில் உங்களின் செயல்பாடுகள் உயர் அதிகாரிகளை கவரும். நண்பர்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள். சிலர் புதிய பயண வாய்ப்புகளுக்கு திட்டமிடுவீர்கள். நீதிமன்ற வழக்குகளில் இருப்பவர்களுக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்