Mesham Rasipalan: சுக்கிரனால் மேஷம் ராசிக்கு அடிக்கும் நீசபங்க ராஜயோகம்! குரு, செவ்வாய் பார்வையால் அதிர்ஷ்டம் உறுதி!-neesabhanga rajayoga and its impact on rishabam rasi due to sukran in kanni rasi - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Mesham Rasipalan: சுக்கிரனால் மேஷம் ராசிக்கு அடிக்கும் நீசபங்க ராஜயோகம்! குரு, செவ்வாய் பார்வையால் அதிர்ஷ்டம் உறுதி!

Mesham Rasipalan: சுக்கிரனால் மேஷம் ராசிக்கு அடிக்கும் நீசபங்க ராஜயோகம்! குரு, செவ்வாய் பார்வையால் அதிர்ஷ்டம் உறுதி!

Kathiravan V HT Tamil
Sep 03, 2024 03:15 PM IST

Mesham Rasipalan: உங்கள் ராசி நாதன் ஆன செவ்வாய் பகவான் 4ஆம் பார்வையாக சுக்கிரனை பார்க்கிறார். இதனால் வீடு, வாகனம் உள்ளிட்ட சொத்து சேர்க்கைகள் உண்டாகும்.

Mesham Rasipalan: சுக்கிரனால் மேஷம் ராசிக்கு அடிக்கும் நீசபங்க ராஜயோகம்! குரு, செவ்வாய் பார்வையால் அதிர்ஷ்டம் உறுதி!
Mesham Rasipalan: சுக்கிரனால் மேஷம் ராசிக்கு அடிக்கும் நீசபங்க ராஜயோகம்! குரு, செவ்வாய் பார்வையால் அதிர்ஷ்டம் உறுதி!

ஒருவருடைய ஜாதகத்தில் களத்திரகாரகன் எனப்படும் சுக்கிரன் பலமாக இருக்கும் போது மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். குரு பகவானுக்கு இணையான கிரகமாக சுக்கிர பகவான் உள்ளார். வரும் செப்டம்பர் 18ஆம் தேதி வரை கன்னி ராசியில் சுக்கிரன் இருப்பார்.

களத்திரகாரகனான சுக்கிரன் ரிஷபம் ராசிக்கும், துலாம் ராசிக்கும் அதிபதி ஆவார். களத்திரம் என்பதற்கு நேர் எதிர் என்று பொருள். ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால்தான் நல்ல மனைவி, நல்ல இல்வாழ்கை, வீடு, வாகன வசதி ஆகியவை கிடைக்கும். அசுர குரு என்று அழைக்கப்படும் சுக்கிரன், குரு பகவானுக்கு அடுத்த நிலையில் உள்ள சுபராக உள்ளார்.

சுக்கிரன் ஒருவரின் தோற்றம், ஆழகு, கலை ரசனை ஆகியவற்றை குறிப்பதாக உள்ளது. ஒருவரின் காதல் வாழ்க்கை, திருமணம் ஆகியவற்றை அடைய சுக்கிரனின் அருள் முக்கியமானது. வாகனங்கள், வீடு, கலை, இசை ஆகியவற்றின் காரகத்துவத்தை சுக்கிரன் கொண்டு உள்ளார்.

மேஷம்

மேஷம் ராசிக்கு தனம், வாக்கு, குடும்பம் ஆகியவற்றை குறிக்கும் 2ஆம் இடத்திற்கும், திருமணத்தை குறிக்கும் 7ஆம் இடத்திற்கும் உரிய கிரகம் ஆக சுக்கிர பகவான் உள்ளார். தற்போது மேஷம் ராசிக்கு 6ஆம் இடமான கன்னி ராசியில் சுக்கிரன் நீசம் பெற்று உள்ளார். 

இதனால் திருமண வாழ்கையில் சில பிரச்னைகள், கணவன், மனைவி இடையே மனவேதனைகள், திருமணம் தள்ளிபோதல் உள்ளிட்ட சிக்கல்கள் இருந்து இருக்கும். மேலும் வரவேண்டிய  பணம் வராமல் தள்ளிப்போகும் என்ற நிலை உள்ளது. ஆனால் கன்னி ராசியில் இருக்கும் சுக்கிரனை, ரிஷபம் ராசியில் உள்ள குரு பகவான் 5ஆம் பார்வையாக பார்க்கின்றார். இது நீசபங்க ராஜ யோகத்தை உண்டாக்கும். 

இதன் காரணமாக குடும்ப வாழ்கையில் மகிழ்ச்சி, நிம்மதி, திருப்தி உண்டாகும். இதுவரை இருந்துவந்த சோதனைகள் தீரும். கணவன், மனைவி  இடையே இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். விவாகரத்து வரை சென்ற திருமண உறவுகள் சரியாகி பழைய நிலைக்கு திரும்பும். திருமண வரன் தேடுபவர்களுக்கு நல்ல திருமண வாழ்கை அமையும். வெளிநாடு செல்ல முயன்றவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கைக்கூடும்.

உங்கள் ராசி நாதன் ஆன செவ்வாய் பகவான் 4ஆம் பார்வையாக சுக்கிரனை பார்க்கிறார். இதனால் வீடு, வாகனம் உள்ளிட்ட சொத்து சேர்க்கைகள் உண்டாகும்.  

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.