Kapaleeswarar Temple: இரட்டை விநாயக பெருமான்.. வரம் கொடுத்த சிவபெருமான்.. அருள்தரும் காளீஸ்வரர்
HT Yatra: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்று தான் நாகப்பட்டினம் மாவட்டம் வெள்ளியநல்லூர் அருள்மிகு காளீஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய மூலவர் காளீஸ்வரர் எனவும் தாயார் சிவகாமசுந்தரி எனவும் திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர். தீர்த்தம் ஹோம குளம் தலவிருட்சம் வில்வ மரமாகும்.
HT Yatra: ஆதிகாலம் தொட்டு இன்று வரை ஆகச் சிறந்த தலைவனாக கடவுள்களுக்கெல்லாம் கடவுளாக சிவபெருமான் திகழ்ந்து வருகின்றார். உயிரினங்கள் தொடங்கிய காலத்திலிருந்து இடைப்பட்ட மன்னர் காலம் வரை அனைவருக்கும் குலதெய்வமாக சிவபெருமான் வழங்கி வந்துள்ளார்.
தற்போது இந்தியாவில் சிவபெருமானுக்கு திரும்பும் திசையெல்லாம் கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. சிவபெருமானின் பல ரூபங்களையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ரூபத்திற்கும் ஒவ்வொரு தனிப்பட்ட பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது.
லிங்க ரூபமாக காட்சி கொடுக்கக் கூடிய சிவபெருமான் காலடி எடுத்து வைக்கும் அனைத்து இடங்களிலும் சிவபெருமானுக்கு தமிழ்நாட்டில் கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மண்ணுக்காக போரிட்டு பல நிலங்களை கைப்பற்றிய மன்னர்கள் தங்களது பக்திக்காகவும் போராடி உள்ளனர். சிவபெருமானை குல தெய்வமாக வணங்கிய அனைத்து மன்னர்களும் போட்டி போட்டுக் கொண்டு பல கம்பீரமான கோயில்களை கட்டிச் சென்றுள்ளன.
பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை அந்த கோயில்கள் கம்பீரமாக நின்று வருகின்றன. தனக்கென உருவம் இல்லாமல் அனைத்து கோயில்களிலும் பாரபட்சமில்லாமல் லிங்க சொரூபமாக சிவபெருமான் காட்சி கொடுத்து வருகிறார்.
அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்று தான் நாகப்பட்டினம் மாவட்டம் வெள்ளியநல்லூர் அருள்மிகு காளீஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய மூலவர் காளீஸ்வரர் எனவும் தாயார் சிவகாமசுந்தரி எனவும் திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர். தீர்த்தம் ஹேமா குளம் தலவிருட்சம் வில்வ மரமாகும்.
தல சிறப்பு
சிவபெருமானுக்காக இந்த கோயில் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்தாலும் இந்த கோயிலின் நாயகனாக விநாயகப் பெருமான் விளங்கி வருகின்றார்.
புனித நீருக்காக இந்த கோயிலில் இருக்கக்கூடிய தீர்த்தத்தை விநாயகர் பெருமான் உருவாக்கியுள்ளார் அதனால் இது ஹோம குளம் என அழைக்கப்படுகிறது. சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்ற போது அதனை தடுப்பதற்காக அசுர சக்திகள் வந்தனர்.
இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த பார்வதி தேவி காளிதேவியாக விஸ்வரூபம் எடுத்து அனைத்து தீய சக்திகளையும் வதம் செய்தார். கோபம் குறையாமல் காளிதேவி திரிந்து கொண்டிருந்தார். அப்போது சிவபெருமான் மையலோடு தனது மனைவியை பார்த்தார்.
இதனால் நானும் கொண்டு காளிதேவி அம்பிகையாக சிறிய உருவத்திற்கு மாறினார். அதன் பின்னர் தனது கணவனோடு இணைந்தார். சிவபெருமானுக்கு உரியவராக மாறிய காரணத்தினால் இந்த கோயிலில் இருக்கக்கூடிய தாயார் சிவகாமசுந்தரி என அழைக்கப்படுகிறார்.
தல வரலாறு
தெய்வ அவதாரங்கள் ஒவ்வொரு யுகத்திலும் வெவ்வேறு மாதிரி இருக்கும். அப்படி ஒரு யுகத்தில் விநாயகப் பெருமானாக உருவெடுக்கும் முன்பே அவர் அவதரித்து விட்டார். பார்வதி தேவியார் கேட்ட வரத்தின் காரணமாகவே அதன்பின்னர் மூத்த மகனாக விநாயகப் பெருமான் அவதரித்தார்.
சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி கல்யாணத்தை நிகழ்த்தி வைக்கும் வேதியராக விநாயக பெருமான் முதல் யுகத்தில் அவதரித்துள்ளார். அவர்களின் திருமணத்தை நடத்தி வைப்பதற்காக தற்போது திருக்கோவில் இருக்கும் இடத்தில் தங்கி நீராடி தினசரி சிவபெருமானுக்கு பூஜை செய்து வழிபாடு செய்து வந்துள்ளார்.
இந்த கோயிலில் இருக்கக்கூடிய விநாயக பெருமான் இரட்டை வடிவத்தில் இருப்பார். இரட்டை விநாயக பெருமான் காட்சி கொடுப்பது மிகவும் விசேஷமாகும். இங்கே விநாயகர் பெருமான் ஒரு வடிவத்தில் சிவபூஜை நடத்திய அதே தருணம் மற்றொரு வடிவில் சிவபெருமானுக்கும் பார்வதி தேவயாருக்கும் திருமணஞ்சேரியில் வேதியராக திருமணத்தை நடத்தி வைத்துள்ளார் அதனை குறிக்கும் வகையில் இங்கு இரட்டை உருவத்தில் விநாயக பெருமான் காட்சி கொடுத்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9