HT Yatra: உடும்பு ரூபத்தில் மறைந்த சிவபெருமான்.. சாபம் பெற்ற ரிஷிகள்.. தவமிருந்த பார்வதி தேவி
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: உடும்பு ரூபத்தில் மறைந்த சிவபெருமான்.. சாபம் பெற்ற ரிஷிகள்.. தவமிருந்த பார்வதி தேவி

HT Yatra: உடும்பு ரூபத்தில் மறைந்த சிவபெருமான்.. சாபம் பெற்ற ரிஷிகள்.. தவமிருந்த பார்வதி தேவி

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 10, 2024 06:27 AM IST

HT Yatra: இது போன்ற சிறப்பு மிகுந்த கோவில்களில் ஒன்றாக விளங்கி வருகிறது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருள்மிகு சந்திர சூடேஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் இருக்கக்கூடிய சிவபெருமான் சந்திர சூடேஸ்வரர் எனவும் தாயார் மரகதாம்பிகை எனவும் திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றன.

உடும்பு ரூபத்தில் மறைந்த சிவபெருமான்.. சாபம் பெற்ற ரிஷிகள்.. தவமிருந்த பார்வதி தேவி
உடும்பு ரூபத்தில் மறைந்த சிவபெருமான்.. சாபம் பெற்ற ரிஷிகள்.. தவமிருந்த பார்வதி தேவி

மன்னர்கள் காலம் தொட்டு இன்று வரை சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே போட்டி போட்டுக்கொண்டு கோயில்களை கட்டி சென்றுள்ளனர்.

பல வரலாறுகளை கடந்தும் பல இயற்கை சீற்றங்களை கடந்தும் இன்று வரை இந்த கோயில்கள் கம்பீரமாக நின்று வருகின்றன. சோழ சாம்ராஜ்யத்தின் மிகப்பெரிய மன்னனாக திகழ்ந்து வந்த ராஜராஜ சோழன் கட்டி வைத்துள்ள தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் அதற்கு மிகப்பெரிய சான்றாக விளங்கி வருகின்றது.

அதேபோல மதுரையில் இருக்கக்கூடிய மீனாட்சியம்மன் திருக்கோயில் இன்று வரை கலை அம்சத்தின் பிறப்பிடமாக விளங்கி வருகிறது. எத்தனையோ திருக்கோயில்கள் இது போல தமிழ்நாட்டில் ஆங்காங்கே பல காலங்கள் கடந்து கம்பீரமாக நின்று வருகின்றன.

இது போன்ற சிறப்பு மிகுந்த கோவில்களில் ஒன்றாக விளங்கி வருகிறது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருள்மிகு சந்திர சூடேஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் இருக்கக்கூடிய சிவபெருமான் சந்திர சூடேஸ்வரர் எனவும் தாயார் மரகதாம்பிகை எனவும் திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றன.

தல சிறப்பு

இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சந்திர சூடேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக காட்சி கொடுத்து வருகிறார். பிரகாரத்தில் இருக்கக்கூடிய ஜலகண்டேஸ்வரர் லிங்கம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது தண்ணீர் தொட்டிக்கு நடுவில் இந்த லிங்கம் இருப்பது மிகவும் விசேஷமாகும்.

மழையில்லாத காலகட்டத்தில் இந்த லிங்கத்திற்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. லிங்கம் இருக்கக்கூடிய தண்ணீர் தொட்டியில் தண்ணீரை ஊற்றி மக்கள் 16 நாட்கள் தங்களது வேண்டுதல்களை வைத்து அந்த தெப்பக்குளத்தை நிரப்புகின்றனர்.

அடுத்த சில மணி நேரங்களில் அந்த குளத்தில் இருக்கக்கூடிய தண்ணீர் வற்றி விட்டால் மழை வராது என்று அர்த்தமாம் தண்ணீர் வடியாமல் அப்படியே குளம் போல தண்ணீர் நின்று கொண்டிருந்தால் சில நாட்களில் மழை வரும் என பக்தர்கள் கூறுகின்றன. இந்த சம்பவத்தை நிரூபிக்கும் வகையில் சில வருடங்களுக்கு முன்பு இதுபோன்ற நடந்துள்ளதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

தல வரலாறு

கைலாயத்தில் இருக்கக்கூடிய சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி இருவரும் வரும்பொழுது சிவபெருமான் உடும்புரூபம் கொண்டு வந்துள்ளார். அப்போது சிவபெருமானை பிடிப்பதற்காக பார்வதி தேவி பின் தொடர்ந்து வந்துள்ளார். அனைத்து இடங்களையும் தாண்டி இந்த பகுதிக்கு சிவபெருமான் உடும்பு ரூபத்தில் வந்துள்ளார்.

அந்த சமயம் முத்கலர் மற்றும் உத்சாயனர் இருவரும் அங்கு தவம் இருந்துள்ளனர். உடும்பு ரூபத்தில் சிவபெருமான் வந்திருக்கிறார் என தங்களது ஞான திருஷ்டியில் இருவரும் கண்டு கொண்டனர். உடனே அந்த உடம்பை பிடிப்பதற்காக அதன் பின்னே சென்றுள்ளனர். அம்பாள் மற்றும் முனிவர்கள் இருவரிடத்திலும் சிக்காமல் சிவபெருமான் அப்படியும் மறைந்து விட்டார்.

உடும்பு மறைந்ததைக் கண்டு கோபமடைந்த பார்வதி தேவி அந்த முனிவர்கள் மீது சாபம் கொடுத்துள்ளார். இதனால் இருவரும் ஊமை மற்றும் செவிடாக மாறிவிடுகின்றனர். அதே இடத்தில் பார்வதி தேவியும் தவமிருக்கத் தொடங்கியுள்ளார். அதுதான் இப்போது சந்திர சூடேஸ்வரர் திருக்கோயிலாக விளங்கி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்