Numerology Benefits: இந்த தேதியில் பிறந்தவர்களை சனி பகவானுக்கு ரொம்ப பிடிக்கும்! உச்சாணி கொம்பில் ஏற்றிவிடுவார்!-lord shanis number 8 numerology benefits and life changing insights for the fortunate born - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Numerology Benefits: இந்த தேதியில் பிறந்தவர்களை சனி பகவானுக்கு ரொம்ப பிடிக்கும்! உச்சாணி கொம்பில் ஏற்றிவிடுவார்!

Numerology Benefits: இந்த தேதியில் பிறந்தவர்களை சனி பகவானுக்கு ரொம்ப பிடிக்கும்! உச்சாணி கொம்பில் ஏற்றிவிடுவார்!

Kathiravan V HT Tamil
Sep 04, 2024 04:56 PM IST

Horoscope numerology Sani Bagavan Number 8: ஒரு நபர் 8, 17 அல்லது 26 ஆம் தேதிகளில் பிறந்தால், அவரது மூல எண் 8 ஆகும். அப்படிப்பட்டவர்களுக்கு சனியின் அருளால் திடீர் பண ஆதாயமும் வேலையில் பதவி உயர்வும் கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆக உள்ளது.

Saturn itself writes the fate of people born on these dates
Saturn itself writes the fate of people born on these dates

இது ஒரு நபரின் வாழ்க்கையில் நன்மை மற்றும் தீமைகளை ஏற்படுத்தும் தன்மைகளை கொண்டு உள்ளது. உங்களின் பிறந்த தேதியின் கூட்டுத் தொகையே நியுமராலஜி எண்ணாக கணக்கில் கொள்ளப்படுகின்றது. உதாரணமாக, 3, 12, 21 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு நியுமராலஜி எண்ணாக 03 (3 + 0 = 1, 1 + 2 = 3) இருக்கும்.

ஒவ்வொரு ரேடிக்ஸ் எண்ணுக்கும் ஆளும் கிரகம் உள்ளது. நியூமராலஜியில் உள்ள 8ஆம் எண் என்பது சனி பகவானுக்கு உரிய எண் ஆகும். இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு பிறப்பில் இருந்தே சனி பகவானின் தாக்கத்தை பெற்றவர்களாக விளங்குவார்கள். 

ஒரு நபர் 8, 17 அல்லது 26 ஆம் தேதிகளில் பிறந்தால், அவரது மூல எண் 8 ஆகும். அப்படிப்பட்டவர்களுக்கு சனியின் அருளால் திடீர் பண ஆதாயமும் வேலையில் பதவி உயர்வும் கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆக உள்ளது.

8ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கான் பலன்கள் 

எண் 8-ல் பிறந்தவர்கள் வாழ்நாள் முழுவதும் சனிபகவானின் அருளையும் ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். நவக்கிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்றவர் சனி பகவான் ஆவார். ஜோதிடத்தை பொறுத்தவரை ஒருவரது செயல்பாடுகளை சீர்த்துக்கி பார்த்து அதற்கு ஏற்ற பலன்களை தரக்கூடிய நீதிமானாக சனி பகவான் விளங்குகிறார். நாம் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்பவே அவரது பலன்கள் இருக்கும். சனி பகவானின் தாக்கம், நம்மை கடினமாக உழைக்கவும், பொறுமையாக இருக்கவும் கற்றுத்தருகிறது. பல விதமான தொழில்களுக்கு காரக கிரகமான சனி பகவான் நீதி தவறாத பண்பு உடையவர் ஆவார்.

8ஆம் எண்ணில் பிறந்தவர்கள் எல்லாத் துறைகளிலும் வெற்றி பெறுகிறார்கள். இவர்களுக்கு மனைவியின் ஆதரவு கிடைக்கும். முதலீடு நல்ல பலனைத் தரும். உத்தியோகத்தில் புதிய உயரங்கள் எட்டப்படும். சமூக மரியாதை கூடும்.

பொருள் இன்பம் அடையும்

சனி பகவானின் அருளால் 8ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு நிலம், கட்டிடம், வாகனம் உள்ளிட்ட சொத்துக்கள் கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் வெற்றிகளை குவிப்பார்கள். பணியிடத்தில் புதிய அடையாளத்தை உருவாக்குவதில் வெற்றி பெறுவார்கள்.

எந்த சவாலுக்கும் பயப்பட மாட்டார்கள்  

8ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு தன்னம்பிக்கை நிறைந்ததாக இருக்கும். அவர்கள் தங்கள் எண்ணங்களை எளிதில் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். அவற்றைப் புரிந்துகொள்வது சற்று கடினம் என்று கூறப்படுகிறது. அவர்கள் எந்த சவாலுக்கும் பயப்பட மாட்டார்கள், ஆனால் கடின உழைப்பின் மூலம் வெற்றியை அடைகிறார்கள்.

8ஆம் எண்ணில் பிறந்தவர்கள் தங்களது வாழ்கையில் உடனடியாக அசுர வளர்ச்சி அடையமாட்டார்கள். ஆனால் இவர்கள் வளர்ச்சி படிப்படியான வளர்ச்சியாக இருக்கும். உங்களின் கடின உழைப்பின் பலன் நிச்சயம் கிடைக்கும். 

தொடக்க காலத்தில் இவர்கள் சிரமங்களை சந்திக்க நேரிட்டாலும், பிற்காலத்தில் நிச்சயம் வெற்றிகளை குவிக்கத் தொடங்குவார்கள். நடுத்தர வயதில் இவர்களுக்கு சிறந்த செல்வத்தை கொடுப்பதாக அமையும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்