Saturn: ‘மேஷம் முதல் மீனம் வரை!’ சனி பகவான் தரும் தொழில், லாபம், பாதகம் எந்த ராசிக்கு எப்போது கிடைக்கும்?
தான் என்ற எண்ணம் கொண்டவர்களை விட சமுதாயத்திற்காக என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு சனி பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். உங்களுடைய ஒவ்வொரு செயலும் சிந்தனையும் சொல்லும் எண்ணங்களும் இந்த சமுதாயத்திற்கு ஏதேனும் ஒரு வழியில் நன்மைகள் தரக்கூடியதாக இருந்தால் உங்களுக்கு லாபம் இருக்கும்.
சனி பகவானின் தன்மைகள்
பலவிதமான தொழில்களுக்கு காரக கிரகம் ஆன சனி பகவானை தர்மவான், நீதி தவறாதவர் என்று அழைக்கின்றோம். மந்தன் என்று அழைக்கப்படும் சனி பகவான் ஆனவர் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடம் பெயர இரண்டரை ஆண்டுகாலத்தை எடுத்துக் கொள்வார். ஒவ்வொரு ராசியிலும் நிதானமாக பயணித்து பலன்களை கொடுக்க கூடிய கிரகம் ஆக சனி பகவான் உள்ளார்.
காலபுருஷனுடைய 10ஆவது வீடான மகரம் சனிபகவானின் ஆட்சி வீடாகவும், காலபுருஷனுடைய 11ஆவது வீடான கும்பம், மூலத் திரிகோண வீடாகவும் விளங்குகின்றது. துலாம் ராசியில் சனி பகவான் உச்சம் பெறும் சனி பகவான் மேஷம் ராசியில் நீசம் பெறுகிறார்.
தான் என்ற எண்ணம் கொண்டவர்களை விட சமுதாயத்திற்காக என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு சனி பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். உங்களுடைய ஒவ்வொரு செயலும் சிந்தனையும் சொல்லும் எண்ணங்களும் இந்த சமுதாயத்திற்கு ஏதேனும் ஒரு வழியில் நன்மைகள் தரக்கூடியதாக இருந்தால் உங்களுக்கு லாபம் இருக்கும்.
சனி பகவான் யாருக்கு வெற்றியை தருவார்
மக்கள் சேவகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், கழிவு மற்றும் இரும்புப் பொருட்களில் தொழில் செய்யக்கூடியவர்கள், தன் உயிரை துச்சம் என நினைத்து நாட்டை காப்பாற்றும் ராணுவ வீரர்கள், உயிர்களை காக்கும் மருத்துவர்கள், அப்பழுக்கு அற்ற அரசியல் தலைவர்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகிய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு உழைப்பின் மூலம் வெற்றியை சனி பகவான் கொடுக்கின்றார்.
விருப்பு வெறுப்பு இல்லாமல் நீங்கள் பணியாற்றுவதை சூட்சுமமாக குறிப்பிடும் கிரகம்தான் சனி பகவான் ஆவார். எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும் என்பதுதான் சனி பகவானின் நிலை ஆகும்.
யாருக்கு கொடுப்பார்? யாரை கெடுப்பார்?
துலாம் ராசியின் சின்னம் ஆக கண்கள் கட்டப்பட்ட தராசு உள்ளது. சமுதாயத்திற்கு உங்கள் செயல்பாடுகளால் ஆதாயம் கிடைத்தால் சனி பகவான் உங்களுக்கு லாபம் தர தயங்கமாட்டார். ஆனால் உழைப்பை சுரண்டுபவர்கள், தன்நலம் மிக்கவர்கள், ஆதாயம் தேடுபவர்களுக்கு சரியான பாடத்தை சனி பகவான் கொடுப்பார். தீதும் நன்றும், பிறர்தர வாரா என்பதே சனி பகவானின் சூழ்ச்சுமம் ஆகும்.
சனி தரும் தொழில்கள்
பாலங்கள், கட்டமைப்பு, கார் தொழிற்சாலை, பெட்ரோல் கெமிக்கல் வணிகம், இரும்புத் தொழிற்சாலைகள், பூமிக்கு அடியில் கிடைக்கும் கனிமவளங்கள் உள்ளிட்டவை சனி பகவானின் தாக்கம் நிறைந்தது. இந்த இடங்களில் செவ்வாயின் காரகத்துவமும் உள்ளது.
தொழில் மூலம் கிடைக்கும் ஆதாயங்கள் சமுதாயத்தில் ஏதேனும் ஒரு வழியில் பயன்பட்டால் நீங்கள் அசைக்க முடியாத உயரத்தை அடைவீர்கள். இதற்கான பலன்கள் உங்களின் வாரிசுகளுக்கு மிகப்பெரிய வளர்ச்சியை தரும். வாரிசுகள் சுகமான வாழ்கையை வாழ்வார்கள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.