துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று (நவ.7) உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசியினருக்கு இன்று (நவம்பர் 07) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு கிரகம் ஆட்சி செய்கிறது. கிரக விண்மீன்களின் இயக்கத்தால் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் நவம்பர் 07 ஆம் தேதி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறிய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். துலாம் முதல் மீனம் வரையிலான ஆறு ராசிக்காரர்களுக்கான இன்றைய தினசரி பலன்கள் எப்படி இருக்கு என்பது பற்றி பார்ப்போம்.
துலாம்
செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். மனை சார்ந்த பணிகளில் லாபகரமான சூழல் ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வியாபார ரீதியான பயணங்கள் உண்டாகும். படிப்பில் கவனம் வேண்டும். நண்பர்களுடன் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். உற்சாகம் நிறைந்த நாள்.
விருச்சிகம்
மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் வேண்டும். தொழில்நுட்ப கருவிகள் மூலம் ஆதாயம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். இசை சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும். இழுபறியான ஒப்பந்தங்கள் சாதகமாக முடியும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.
தனுசு
விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். உங்கள் பற்றிய கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடிவு பெறும். சமூகப் பணிகளில் மாறுபட்ட சூழல் ஏற்படும். பேச்சுக்களுக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும். எதிர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும்.
மகரம்
சிந்தனைகளில் மாற்றங்கள் உண்டாகும். வெளி வட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். உடலின் தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில பணிகளில் மாற்றமான சூழ்நிலை ஏற்படும். நினைவாற்றலில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்பட்டு நீங்கும். தற்பெருமை தொடர்பான சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். சாந்தம் வேண்டிய நாள்.
கும்பம்
சுற்றி இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். மனதில் இனம்புரியாத சிந்தனைகள் மூலம் குழப்பம் தோன்றும். தம்பதிகளுக்குள் அனுசரித்துச் செல்லவும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். தவறிய சில பொருட்கள் பற்றிய தகவல் கிடைக்கும். உயர்கல்வி ரீதியான பயணங்கள் உண்டாகும். வியாபார அபிவிருத்தி உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.
மீனம்
எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் எண்ணியவை நிறைவேறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். இலக்கை நோக்கிய சிந்தனைகள் மேம்படும். மனதில் அமைதியும், புத்துணர்ச்சியும் உண்டாகும். வெளி வட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்