நவம்பர் மாத ராசிபலன்.. விருச்சிக ராசியினரே அதுவரை ரிஸ்க் வேண்டாம்.. நல்ல விஷயம் நடக்கும்.. குழப்பம் வந்து நீங்கும்
நவம்பர் மாத ராசி பலன். சுக்கிரன் விருச்சிகம் ராசியில் இருந்து இரண்டாம் இடத்திற்கு மாறுகிறது. செவ்வாய் நீச்சமடைய உள்ளதால் எந்த ஒரு விஷயத்திலும் பெரிய அளவில் துணிச்சல் என்பது இருக்காது. எந்த ஒரு விஷயத்தையும் செய்வதில் குழப்பமான மனநிலை இருக்கும். சூரியன் நீச்சமடைந்து பத்தாம் இடத்தில் மறைந்திருக்கும்.
நவம்பர் மாதம் எந்த ராசிக்கு கிரகங்கள் அள்ளித்தரப் போகின்றன என்கிற எதிர்பார்ப்பு, இப்போதே எகிறத் தொடங்கிவிட்டது. அந்த வகையில் பெரும்பான்மை ராசி என்று அறியப்படும் விருச்சிக ராசிக்கு, நவம்பர் மாதம் எப்படி இருக்கப் போகிறது? ஏகோபித்த எதிர்பார்ப்புடன் ஒவ்வொரு நாளையும், வாரத்தையும், மாதத்தையும், ஆண்டையும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு, நவம்பர் மாதம் எந்த மாதிரியான பலனை தரப்போகிறது? கவலை வேண்டாம் நவம்பர் மாதம் உங்களுக்கு சாதகமான மாதம் தான். நவம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
விருச்சிகம் ராசிக்கு தொழில் நவம்பரில் எப்படி?
விருச்சிக ராசியினுடைய அதிபதி செவ்வாய்.நவம்பர் மாதத்தில் செவ்வாய் நீச்சமடைய கூடிய நிலை உள்ளது. ஆனால் குரு பார்வை விருச்சிகத்தில் தான் உள்ளது. சுக்கிரன் விருச்சிகம் ராசியில் இருந்து இரண்டாம் இடத்திற்கு மாறுகிறது. செவ்வாய் நீச்சமடைய உள்ளதால் எந்த ஒரு விஷயத்திலும் பெரிய அளவில் துணிச்சல் என்பது இருக்காது. எந்த ஒரு விஷயத்தையும் செய்வதில் குழப்பமான மனநிலை இருக்கும். சூரியன் நீச்சம் அடைந்து பத்தாம் இடத்தில் மறைந்திருக்கும்.
குடும்ப உறவுகள்
நவம்பர் 16ஆம் தேதி விருச்சகத்திற்கே சூரியன் மாற்றமடையும். சூரியன் மாற்றம் அடையும் சூழலில் தொழில் வாழ்க்கையில் தன்னம்பிக்கை ஏற்படும். குடும்பத்திற்காக சுப செலவுகளை செய்து குடும்ப உறுப்பினர்களை சந்தோஷப்படுத்தக்கூடிய மாதம். நவம்பர் மாதம் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண முயற்சியில் இருப்பவர்களுக்கு நல்ல வரன் அமைய வாய்ப்பு அதிகம் உள்ளது. ஏற்கனவே ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்களுக்கு அன்யோன்யமான புரிதல் மற்றும் ஒருமித்த கருத்து ஏற்பட சரியான சூழல் இருக்கும். சுப காரியங்களை செய்வதில் ஈடுபாடும் ஆழமான நம்பிக்கையையும் ஏற்படுத்தும்.
முதல் 15 நாட்கள் ரிஸ்க் வேண்டாம்
செவ்வாய் நீச்சமாக இருப்பதால் உடல் ரீதியாகவோ , அல்லது மன ரீதியாகவோ குழப்பம் வந்து நீங்க வாய்ப்புகள் உள்ளது. முதல் 15 நாட்கள் எந்த விதமான முடிவுகளும் எடுக்காமல் இருப்பது நல்லது. நான்காம் இடத்தில் சனி வக்கிர நிவர்த்தி அடைகிறார். இதனால் உங்கள் பயணம் உங்கள் ஆரோக்கியம் ஆகிவற்றை சரிவர கவனித்துக் கொள்வது நல்லது. நாளில் சனி வந்துவிட்டால் மீண்டும் அர்த்தாஷ்டம சனி ஏற்படுகிறது. நீங்கள் கொஞ்சம் சுமாராக இருக்க வாய்ப்புள்ளது
மாணவர்களுக்கான நவம்பர் பலன்கள்
மாணவர்களை பொருத்தமட்டில் ஆதித்ய யோகம் அழகாக கை கொடுக்கும். உங்கள் எண்ணங்கள் ஆற்றல்கள் இலக்குகள் அழகாக இருக்கும். ராகு ஐந்தாம் இடத்தில் இருப்பதால் ஒரு சிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு நரம்பு அல்லது தோல் சம்பந்தப்பட்ட சிறிய உபாதைகள் ஏற்படலாம். பதினொன்றாம் இடத்தில் உள்ள கேது குரு உடைய பார்வை இருப்பதால் அது உங்களுக்கு வாய்ப்பாக அமையும். இதனால் கிடைக்கக்கூடிய அனுபவம், அறிவு, ஞானம், தெளிவு உங்களுக்கு பாசிட்டிவாக பலன்களைத் தரும்.விருச்சக ராசியில் பிறந்தவர்களுக்கு 2024 நவம்பர் மாதம் ஓரளவிற்கு சுப கிரகங்களின் பார்வை உங்கள் மீது விழுவதால் நல்ல எண்ணமும், நல்ல முயற்சியும், நல்ல அதிர்ஷ்ட வாய்ப்பும் உங்களுக்கு வந்து சேரும். ஏதோ ஒரு நல்ல விஷயம் நடக்கும். குறிப்பாக பொருளாதார ரீதியாக உங்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வாய்ப்புகள் உள்ளது. குடும்ப உறுப்பினர்களை சந்தோஷப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
ஆன்மீகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!