வீட்டில் கெட்ட காலம் வரும் அறிகுறி.. சாணக்கியர் கூறும் அறிவுரை.. தப்பிச்சுக்கோங்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  வீட்டில் கெட்ட காலம் வரும் அறிகுறி.. சாணக்கியர் கூறும் அறிவுரை.. தப்பிச்சுக்கோங்க!

வீட்டில் கெட்ட காலம் வரும் அறிகுறி.. சாணக்கியர் கூறும் அறிவுரை.. தப்பிச்சுக்கோங்க!

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 17, 2024 10:29 AM IST

Chanakya: வீட்டில் நமக்கு சில கெட்ட விஷயங்கள் நடந்து கொண்டே இருக்கும். அதற்கு நாம் செய்யும் காரியங்கள் தான் காரணம் என சாணக்கிய நீதி கூறுகிறது. அது என்னென்ன என்பது குறித்து இங்கு காணலாம்.

வீட்டில் கெட்ட காலம் வரும் அறிகுறி.. சாணக்கியர் கூறும் அறிவுரை.. தப்பிச்சுக்கோங்க!
வீட்டில் கெட்ட காலம் வரும் அறிகுறி.. சாணக்கியர் கூறும் அறிவுரை.. தப்பிச்சுக்கோங்க!

அதுமட்டுமல்லாமல் நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும் நமது வாழ்க்கையை தீர்மானிக்கின்றன. சாணக்கியர் நமது வாழ்வோடு தொடர்புடைய பல செய்திகளை நமக்காக கூறியுள்ளார். நாம் வாழ்வில் பின்பற்ற வேண்டிய பல நெறிமுறைகளை இவர் அதிகம் கூறியுள்ளார். வீட்டில் நமக்கு சில கெட்ட விஷயங்கள் நடந்து கொண்டே இருக்கும். அதற்கு நாம் செய்யும் காரியங்கள் தான் காரணம் என சாணக்கிய நீதி கூறுகிறது. அது என்னென்ன என்பது குறித்து இங்கு காணலாம்.

பெரியவர்களை அவமதித்தல்

சாணக்கியரின் நீதிபடி வீட்டில் இருக்கக்கூடிய பெரியவர்களை மதிக்காமல் இருந்தால் லட்சுமிதேவி உங்கள் வீட்டில் வசிக்க மாட்டார். அதேபோல உங்களது வீட்டில் மகிழ்ச்சி வராது. அதன் காரணமாகத்தான் தலைமுறை தலைமுறையாக வளரும் குழந்தைகளிடம் பெரிவரை மதிக்க வேண்டும் என சொல்லிக் கொடுத்து வளர்க்கப்படுகிறது. இது போன்ற செல்களில் ஈடுபட்டால் வீட்டில் செல்வம் தங்காது.

பூஜை செய்யாத வீடுகள்

சாணக்கிய நீதிபதி நமது வீட்டில் செல்வம் மற்றும் செழிப்பு இருக்க வேண்டும் என்று கூறினால் தவறாமல் இறைவனுக்கு பூஜை செய்வது மிகவும் அவசியமாகும். தினமும் பூஜை செய்வது உங்களுக்கு மங்கள யோகத்தை உருவாக்கிக் கொடுக்கும். லட்சுமி தேவி உங்கள் வீட்டை தேடி வருவார். தூசு நிறைந்த பூஜை அறை உங்களுக்கு கெட்ட சகுனமாக அமையும்.

தினமும் சண்டை

எப்போதும் உங்களது வீட்டில் சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்பட்டு கொண்டே இருந்தால் அந்த இடத்தில் லட்சுமி தேவி தங்க மாட்டார் என்று சாணக்கிய நீதி கூறுகிறது. எப்போதும் சண்டை சத்தம் உங்கள் வீட்டில் கேட்டுக் கொண்டிருந்தால் நிதிநிலைமையை மோசமான சூழ்நிலைக்குச் செல்லும். கெட்ட நேரம் உங்கள் வீட்டிற்கு வந்து சேரும் என சாணக்கியர் கூறுகிறார்.

துளசி செடி வாடுதல்

பொதுவாக துளசி செடி இறைவனின் அருள் ஆசியை கொடுக்கக்கூடிய தாவரமாக பார்க்கப்படுகிறது. வீடுகளில் வைத்து வழிபடுவதை பலரும் இன்றும் செய்து வருகின்றனர். ஆனால் நமது வீட்டில் வளர்க்கக்கூடிய துளசி செடி நமக்கு வரக்கூடிய கெட்ட நேரத்தில் முன்கூட்டியே உணர்த்தக்கூடிய இயல்பு கொண்டது. 

உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய துளசி செடி வாடினால் உங்களுக்கு நிதி நிலைமையில் மிகப்பெரிய சிக்கல்கள் வரக்கூடும் என சாணக்கியர் கூறுகிறார். அதன் காரணமாக துளசி செடி உங்கள் வீட்டில் வாடினால் உங்களுக்கு கெட்ட நேரம் வந்து கொண்டிருக்கின்றது என அர்த்தம். எனவே துளசி செடி வாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என சாணக்கிய நீதி கூறுகிறது.

கண்ணாடி உடைதல்

உங்கள் வீட்டில் கெட்ட நேரம் தொடங்குவதை கண்ணாடி உடைந்து உணர்த்தும் என சாணக்கிய நீதி கூறுகிறது. வீட்டில் இருக்கக்கூடிய கண்ணாடி உடைவது கெட்ட நேரத்தில் உணர்த்தும் சம்பவமாக கருதப்படுகிறது. உங்கள் வீட்டில் இருக்கும் கண்ணாடி உடைந்தால் வீட்டில் இருக்கக்கூடிய ஏதோ ஒரு நபருக்கு சிக்கல் வரப் போகின்றது என உணர்த்துவதாக சாணக்கியர் கூறுகிறார். அதனால் கண்ணாடி பொருட்களை மிகவும் பத்திரமாக கையாள வேண்டும் என கூறுகிறார்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner