HT Yatra: காட்சி கொடுத்த முருக பெருமான்.. கரையேறிய திருநாவுக்கரசர்
புது வண்டிப்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வரலாறு குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.
தமிழ் கடவுளாக விளங்கக்கூடிய முருகப்பெருமான் உலகம் முழுவதும் கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள் அளித்து வருகிறார். அறுபடை வீடு கொண்டு தமிழ்நாட்ட பக்தர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் முருக பெருமான் பல சிறப்பு மிகுந்த கோயில்களில் அமர்ந்து காட்சி கொடுத்து வருகிறார்.
அப்படி சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் புது வண்டி பாளையம் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்த திருக்கோயில் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த கோயில் 300 ஆண்டுகளுக்கு பழமையான கோயில் எனக் கூறப்படுகிறது.
இந்த கோயிலில் வேல் கூட்டம் தனியாக அமைந்துள்ளது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை, கிருத்திகை, பூச திருநாட்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த கோயிலில் இருக்கக்கூடிய முருகப்பெருமானை வழிபட்டால் அனைத்துவித பலன்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது அதே சமயம் தீராத நோய் தீரும் எனவும் பக்தர்கள் நம்பி வருகின்றனர்.
கோயிலில் இருக்கக்கூடிய முருகப்பெருமான் வள்ளி மற்றும் தெய்வானை சமேதராக காட்சி கொடுத்து வருகிறார்.
தல வரலாறு
சமயக்குரவர்களில் நால்வர்களில் ஒருவராக இருக்கக்கூடிய திருநாவுக்கரசர் சமனர்களால் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார். மகேந்திரவர்மன் என்ற அரசன் திருநாவுக்கரசரை கல்லோடு கட்டி வங்கு கடலில் வீசி எறிந்துள்ளார்.
உடனே தன்னை கட்டி இறக்கிய கல்லை தெப்பம் ஆக்கி நமச்சிவாயா என்ற பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபம் செய்து தென்திசை நோக்கி திருப்பாதிரிப்புலியூருக்கு மிதந்து வந்தே கரை ஏறி உள்ளார். திருநாவுக்கரசருக்கு ரிஷப வாகனத்தில் சிவன் மற்றும் பார்வதி இருவரும் காட்சி கொடுக்கின்றனர் அதோடு மட்டுமல்லாமல் மயில் வாகனத்தில் முருக பெருமானும் காட்சி கொடுத்தார்.
அதன் காரணமாக இங்கு முருகப் பெருமானுக்கு தனி கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கரையேறிய திருநாவுக்கரசரை நினைவுபடுத்தும் விதத்தில் ஆண்டுதோறும் சித்திரை அனுஷத்தில் திருவிழா கொண்டாடப்படுகிறது. கரையேறிய பொழுது திருநாவுக்கரசருக்கு சிவன், பார்வதி மற்றும் முருக பெருமான் மூன்று பேரும் காட்சி கொடுத்த நிகழ்ச்சி இன்றுவரை விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தலத்தின் பெருமை
இந்த திருக்கோயிலில் விநாயகர், பழனி ஆண்டவர், ஆறுமுகசாமி, கஜலட்சுமி, உடும்பன், சரஸ்வதி, லட்சுமி, சிவபெருமான், பார்வதி தாயார், சூரியன், சந்திரன், பைரவர், வீரபாகு உள்ளிட்டோர் அனைவரும் தனித்தனி சன்னதிகளில் அமர்ந்து காட்சி கொடுத்து வருகின்றனர்.
இந்த திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா 12 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த திருவிழா நேரத்தில் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி தாயார் முருகன் கோயிலில் எழுந்தருளி முருகப்பெருமானின் திருமணத்தை நடத்தி வைக்கும் வைபவம் நடைபெறுகிறது.
தம்பதி சமேதராக முருக பெருமான் நகர் பலம் அன்றைய தினத்தில் வருவார். ஐப்பசி மாதத்தில் ஆறு நாட்கள் சூரசம்கார விழா வெகு விமர்சையாக இங்கு கொண்டாடப்படுகிறது.
அமைவிடம்
இந்த திருக்கோயில் கடலூர் மாவட்டத்தில் அமைந்திருக்கின்ற காரணத்தினால் தங்குமிடம் உணவு விடுதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அங்கேயே உள்ளன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9