தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani Peyarchi 2024 Palan: சனி தலைகீழாக பறக்கிறார்.. பணவரவு நிச்சயம்.. அதிர்ஷ்ட மழை பெய்யும்.. யோகராசிகள்

Sani Peyarchi 2024 Palan: சனி தலைகீழாக பறக்கிறார்.. பணவரவு நிச்சயம்.. அதிர்ஷ்ட மழை பெய்யும்.. யோகராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 21, 2024 10:09 AM IST

Sani Peyarchi 2024 Palan: சனிபகவான் ஏப்ரல் ஏழாம் தேதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். இது குரு பகவானின் நட்சத்திரமாகும். சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்க போகின்றனர்.

சனிபகவான்
சனிபகவான்

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். சனி ஒரு ராசியில் மோசமான நிலையில் அமர்ந்தால் பல்வேறு விதமான அச்சங்கள் ஏற்படக்கூடும். நல்ல நிலையில் அமர்ந்தால் அவர்களை உச்சத்தில் நிறுத்தி அழகு பார்ப்பார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனி பகவான் 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.

தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்பராசிகள் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இந்த 2024 சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. சனிபகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் சனிபகவான் ஏப்ரல் ஏழாம் தேதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். இது குரு பகவானின் நட்சத்திரமாகும். சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு லாபமாக அமைந்துள்ளது. நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும் ஆடம்பர வசதிகள் அதிகரிக்க கூடும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். நீண்ட நாட்களாக ஏற்பட்டு வந்த உடல் ஆரோக்கிய சிக்கல்கள் நிவர்த்தி ஆகும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

ரிஷப ராசி

 

சனிபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அதிக பலன்களை கொடுக்கப் போகின்றது. எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும்.

மிதுன ராசி

 

சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கும் மங்களகரமான யோகத்தை கொடுத்துள்ளது. ஏப்ரல் மாதம் முதல் உங்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்க போகின்றது. அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சனி பகவானின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. நிதி நிலைமையில் முன்னேற்றங்கள் இருக்கும்.

 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.