தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru 2024: குரு ராஜாவாக்க போகும் ராசிக்காரர்கள் நீங்கள் தான்!

Guru 2024: குரு ராஜாவாக்க போகும் ராசிக்காரர்கள் நீங்கள் தான்!

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 15, 2023 11:33 AM IST

குரு பகவானால் 2024 ஆம் ஆண்டு ராஜயோகத்தை பெறும் ராசிகளை காண்போம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார் வரக்கூடிய டிசம்பர் 31ம் தேதி அன்று வக்கிர நிவர்த்தி அடைகிறார். நேரான பயணத்தை தொடங்கும் குரு பகவான் 2024 ஆம் ஆண்டு மே மாதம் ரிஷப ராசிக்குள் நுழைகிறார்.

அந்த வகையில் வரும் 2025 ஆம் ஆண்டு மே மாதம் வரை இதே ரிஷப ராசியில் பயணம் செய்கிறார். குரு பகவானின் இடமாற்றத்தால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் சில ராசிகள் நல்ல பலன்களை பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

குரு பகவான் உங்கள் ராசியில் இரண்டாம் வீட்டில் பயணம் செய்ய உள்ளார். அதனால் உங்களுக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். கடன் சிக்கல்கள் அனைத்தும் தீரும் .புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

ரிஷப ராசி

 

குருபகவான் உங்கள் ராசிகள் அமரப்போகின்ற காரணத்தினால் உங்களுக்கு சுபயோகம் கிடைக்கப் போகின்றது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் நடக்கும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. சவால்கள் கடின உழைப்பால் சிறப்பாக மாறும்.

சிம்ம ராசி

 

குரு பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. பண சிக்கல்கள் அனைத்தும் நீங்கும். குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த தொல்லைகள் நீங்கும். குரு பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமையப் போகின்றது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்