தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Peyarchi Luck: உதயமாகின்றார் புதன்.. இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்

Peyarchi Luck: உதயமாகின்றார் புதன்.. இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 07, 2024 12:27 PM IST

புதன் பகவானால் யோகத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

புதன் பெயர்ச்சி
புதன் பெயர்ச்சி

புதன் பகவான் ஒருவருடைய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான அம்சங்களும் அமையும் என கூறப்படுகிறது. தற்போது கும்ப ராசியில் பயணம் செய்து வந்த புதன் பகவான் இன்று மீன ராசியில் நுழைந்தார்.

புதன் பகவான் அஸ்தமன நிலையில் மீன ராசியில் நுழைந்துள்ளார். வரும் மார்ச் 15ஆம் தேதி வரை இதே மீன ராசியில் உதயமாக உள்ளார். புதன் பகவானின் உதயத்தால் சில ராசிகளுக்கு முழுமையான அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

புதன் பகவான் உங்கள் ராசிகள் 11வது வீட்டில் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கடின உழைப்புக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் புதன் உதயம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கூட்டு முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.

கும்ப ராசி

 

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் புதன் உதயம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைத்துள்ளது. பேச்சுத் திறமையால் காரியங்கள் வெற்றி அடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தின் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel