Jackpot Rasis: 3 ராசிகள்.. தேடி வருகுது.. சூரியன் ஓடி வருகிறார்.. அதிர்ஷ்டம் கொட்ட வருகுது..
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Jackpot Rasis: 3 ராசிகள்.. தேடி வருகுது.. சூரியன் ஓடி வருகிறார்.. அதிர்ஷ்டம் கொட்ட வருகுது..

Jackpot Rasis: 3 ராசிகள்.. தேடி வருகுது.. சூரியன் ஓடி வருகிறார்.. அதிர்ஷ்டம் கொட்ட வருகுது..

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 07, 2024 09:47 AM IST

Lord Surya: சூரிய பகவானின் கன்னி ராசி பயனும் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Jackpot Rasis: 3 ராசிகள்.. தேடி வருகுது.. சூரியன் ஓடி வருகிறார்.. அதிர்ஷ்டம் கொட்ட வருகுது..
Jackpot Rasis: 3 ராசிகள்.. தேடி வருகுது.. சூரியன் ஓடி வருகிறார்.. அதிர்ஷ்டம் கொட்ட வருகுது..

ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு சூரிய பகவான் செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. அந்த வகையில் சூரிய பகவான் தற்போது சிம்ம ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற செப்டம்பர் 16ஆம் தேதி அன்று கன்னி ராசியில் நுழைகின்றார்.

இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும். சூரிய பகவானின் கன்னி ராசி பயனும் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சூரியன் பயணம் செய்யப் போகின்றார். அதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

தனுசு ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்யப் போகின்றார். எதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க கூடும். நிறைய பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். வியாபாரத்தில் உங்களுக்கு பல மடங்கு லாபம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும் பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

மிதுன ராசி

உங்கள் அரசியல் நான்காவது வீட்டில் சூரியன் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு இன்ப துன்பங்கள் குறைந்து இன்பம் மட்டுமே உங்களுக்கு அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அறிவாற்றல் உங்களுக்கு அதிகரிக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். தந்தை தாயின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சூரிய பகவானின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner