Lucky Zodiac: கேது பணத்தோடு புரட்ட போகிறார்.. இந்த ராசிகள் இனி அசையாது.. பணக்கார வாழ்க்கை தொடக்கம்-let us see about the lucky zodiac signs in which lord ketu is going to enjoy pana yoga - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lucky Zodiac: கேது பணத்தோடு புரட்ட போகிறார்.. இந்த ராசிகள் இனி அசையாது.. பணக்கார வாழ்க்கை தொடக்கம்

Lucky Zodiac: கேது பணத்தோடு புரட்ட போகிறார்.. இந்த ராசிகள் இனி அசையாது.. பணக்கார வாழ்க்கை தொடக்கம்

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 07, 2024 05:21 PM IST

Lucky Zodiac: கேது பகவானின் கன்னி ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். இந்த ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lucky Zodiac: கேது பணத்தோடு புரட்ட போகிறார்.. இந்த ராசிகள் இனி அசையாது.. பணக்கார வாழ்க்கை தொடக்கம்
Lucky Zodiac: கேது பணத்தோடு புரட்ட போகிறார்.. இந்த ராசிகள் இனி அசையாது.. பணக்கார வாழ்க்கை தொடக்கம்

அந்த வகையில் சேது பகவான் கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் கன்னி ராசியில் தனது பயணத்தை தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். 

கேது பகவானின் கன்னி ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். இந்த ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

கேது பகவானின் கன்னி ராசி பயணம் உங்களுக்கு லாபத்தை அதிகப்படுத்தி கொடுக்கும். உங்கள் ராசி ஆறாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட கால ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 

அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு வெற்றியாக அமையும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழிலில் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. இரட்டிப்பான நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் வருமானம் உங்களுக்கு அதிகரிக்கும்.

கடக ராசி

கேது பகவான் உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் பயணம் செய்தவர்கள் இதனால் உங்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். வெற்றி வாய்ப்புகள் உங்களை தேடி வரும். குறிப்பிட்ட தக்க ஆதாயங்கள் உங்களுக்கு கிடைக்கும். தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். 

வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.

விருச்சிக ராசி

கேது பகவான் உங்கள் ராசியில் 11-வது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு அனைத்து குறைகளிலும் வெற்றி கிடைக்கும் ஞானம் மற்றும் அறிவு உங்களுக்கு அதிகரிக்கும். சரியான முடிவுகளை எடுக்கக்கூடிய சூழ்நிலைகள் அமையும் உங்கள் திறன் அதிகரிக்கும். 

புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். தேவையற்ற செலவுகளில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வணிகத்தில் உங்களுக்கு பெரிய முன்னேற்றம் இருக்கும். வருமானத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner