தமிழ் செய்திகள்  /  Astrology  /  Lord Guru And Lord Venus Are Going To Join Together On 24th April

Sukra Luck: மேஷத்தில் புகுந்த சுக்கிரன்.. குருவோடு கூட்டணி.. பண மழையில் நனைய போகும் ராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 14, 2024 03:51 PM IST

Sukra Luck: நவக்கிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இந்நிலையில் ஒரு கிரகத்தின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

குரு பகவான், சுக்கிர பகவான்
குரு பகவான், சுக்கிர பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் இடம் மாறுகிறார்.

நவக்கிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இந்நிலையில் ஒரு கிரகத்தின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்நிலையில் குரு பகவான் மற்றும் சுக்கிர பகவான் இவர்கள் இருவரும் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று ஒன்று சேரப் போகின்றனர். சுக்கிர பகவான் மேஷ ராசியில் நுழைய போகின்றார். இதனால் குரு பகவானும் சுக்கிரனும் இணைகின்றனர். இவர்களின் சேர்க்கையால் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

குரு மற்றும் சுக்கிரன் இருவரும் சேர்ந்து உங்களுக்கு சுப பலன்களை கொடுக்கப் போகின்றனர். வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகும். வெற்றி வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். தொழிலில் நல்ல வாய்ப்புகள் உண்டாகும். பணவரவில் இருந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றங்கள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடக ராசி

 

சுக்கிரன் மற்றும் குரு இவர்கள் இருவரும் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். இவர்கள் சேர்ந்து அதிர்ஷ்டத்தை உங்களுக்கு கொடுக்க போகின்றனர். உங்களுடைய வாழ்க்கையில் வசதி மற்றும் ஆடம்பரங்கள் அதிகரிக்கப் போகின்றது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வருமானத்தில் எதிர்பாராத நேரத்தில் முன்னேற்றம் இருக்கும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.

ரிஷப ராசி

 

குருவும் சுக்கிரனும் சேர்ந்து உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றனர். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும் நிதிநிலைமைகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வேலைகள் முடிவடையும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

துலாம் ராசி

 

குருவும் சுக்கிரனும் சேர்ந்து உங்களுக்கு நேர்மறையான மாற்றங்களை கொடுக்கப் போகின்றனர். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நல்ல வாழ்க்கை துணை கிடைக்க வாய்ப்பு உள்ளது. திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும். உங்களுடைய மனநிலை சீராக மாறும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel