தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: நாகேஸ்வரர் மீது காதல்.. சேக்கிழார் உருவாக்கிய லிங்கம்.. கனவில் தோன்றி தானாக அமர்ந்த நாகேஸ்வரர்

HT Yatra: நாகேஸ்வரர் மீது காதல்.. சேக்கிழார் உருவாக்கிய லிங்கம்.. கனவில் தோன்றி தானாக அமர்ந்த நாகேஸ்வரர்

Suriyakumar Jayabalan HT Tamil
May 05, 2024 06:00 AM IST

HT Yatra: எத்தனையோ வரலாறுகளை தன்னிடத்தில் வைத்துக்கொண்டு பல கோயில்கள் சிறப்பு வாய்ந்து இங்கே வீற்றிருக்கின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வடநாகேஸ்வரம் அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில்.

அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில்

சோழர், பாண்டியர்கள் எதிரிகளாக திகழ்ந்து வந்தாலும் இந்த மூன்று வேந்தர்களுக்கும் குலதெய்வமாக சிவபெருமான் விளங்கி வந்துள்ளார். தென்னாட்டை ஆண்டு வந்த சோழ சாம்ராஜ்யத்தின் மகாராஜர் ராஜராஜ சோழர் மிகப்பெரிய சிவபக்தராக இருந்து கொண்டுள்ளார் அதற்கு சாட்சியாக இன்று வரை அவர் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோயில் கம்பீரமாக நின்று வருகிறது.

எத்தனையோ வரலாறுகளை தன்னிடத்தில் வைத்துக்கொண்டு பல கோயில்கள் சிறப்பு வாய்ந்து இங்கே வீற்றிருக்கின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வடநாகேஸ்வரம் அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில்.

தல சிறப்பு

 

இந்த கோயிலில் இருக்கக்கூடிய சிவலிங்கம் சேக்கிழாரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது எனக் கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த லிங்கத்தை தீர்த்தத்தில் வைத்துவிட்டு புதிய லிங்கம் செய்து மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்துள்ளனர்.

பக்தர் ஒருவரின் கனவில் தோன்றி சிவபெருமான் மூலஸ்தானத்தில் ஏற்கனவே இருந்த லிங்கத்தை வழிபடும்படி கூறியுள்ளார். அதற்குப் பிறகு தீர்த்தத்தில் வைக்கப்பட்டிருந்த லிங்கத்தை எடுத்து மூலஸ்தானத்தில் வைத்து பிரதிஷ்டை செய்துள்ளனர். புதிதாக வைக்கப்பட்ட லிங்கம் தற்போது சன்னதிக்கு பின்புறம் வைக்கப்பட்டுள்ளது. பின்னி வைக்கப்பட்டுள்ள சிவபெருமான் அருணாச்சலேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இந்த கோயில் சேக்கிழாரால் கட்டப்பட்டது என புராணங்களில் கூறப்படுகிறது.

தலத்தின் பெருமை

 

நாக தோஷம் உள்ளவர்கள் இந்த திருத்தலத்தில் வீற்றிருக்கக்கூடிய ராகு பகவானை வழிபட்டால் நாக தோஷம் விலகும் என கூறப்படுகிறது. இந்த கோயிலில் இருக்கக்கூடிய நாகேஸ்வரருக்கு பாலாபிஷேகம் செய்யும்போது நாகதோஷம் உள்ளவர்கள் கலந்து கொண்டால் அவர்களுக்கு தோஷ நிவர்த்தி உண்டாகும் என நம்பப்படுகிறது.

இந்த கோயிலில் சேக்கிழார் தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இவர் சிவபெருமானை தரிசனம் செய்தபடி மேற்கு நோக்கி காட்சி கொடுத்து வருகிறார். வைகாசி மாதம் பூச நட்சத்திர திருநாளில் 10 நாட்கள் குருபூஜை விழா இந்த கோயிலில் நடத்தப்படுகிறது.

தல வரலாறு

 

அனபாயன் என்ற சோழ மன்னன் ஆட்சியில் இந்த ஊர் இருந்து வந்துள்ளது. அந்த ஊரில் இருந்த சேக்கிழார் சிறுவயதிலேயே புலமையோடு வளர்ந்து வந்துள்ளார். இவருடைய அறிவு திறமையை கண்டு மன்னர் தனது அமைச்சராக மாற்றிக் கொண்டார். சிவபெருமானின் மீது தீராத பக்தி கொண்ட இவர் 63 நாயன்மார்களின் வரலாறை பெரிய புராணமாக தொகுத்து வெளியிட்டார்.

சிவ பக்தராக இருந்த சேக்கிழார் ஒரு முறை கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாகேஸ்வரர் திருக்கோவிலுக்கு சென்று சிவபெருமானை வழிபட்டுள்ளார். அப்போது அங்கு வீற்றிருந்த சிவலிங்கத்தை கண்டு அதீத மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

நாகேஸ்வரர் மீது அதிக விருப்பம் கொண்ட இவரை அடிக்கடி வந்து சந்திக்க முடியாத சூழ்நிலை இவருக்கு ஏற்பட்டுள்ளது. திருநாகேஸ்வரத்தில் வீற்றிருக்கக்கூடிய நாகேஸ்வரர் போல தனது ஊரில் நாகேஸ்வர இருக்க வேண்டும் என எண்ணி கோயில் கட்டி உள்ளார். திருநாகேஸ்வரத்தில் இருக்கக்கூடிய நாகேஸ்வரர் போலவே சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பி வழிபட்டு வந்துள்ளார். அதனால் சிவபெருமானுக்கு நாகேஸ்வரர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த திருத்தலம் வட நாகேஸ்வரம் என அழைக்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel