தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: மலைகளாக மாறிய வேதங்கள்.. நடுவே அமர்ந்த லிங்கம்.. பிரம்மன் வழிபட்ட திரிசூலநாதர்

HT Yatra: மலைகளாக மாறிய வேதங்கள்.. நடுவே அமர்ந்த லிங்கம்.. பிரம்மன் வழிபட்ட திரிசூலநாதர்

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 22, 2024 06:15 AM IST

Thirisoolanathar: எத்தனையோ சிவபெருமான் கோயில்கள் எப்போது, யாரால் கட்டப்பட்டது என இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திரிசூலம் அருள்மிகு திரிசூலநாதர் திருக்கோயில்.

மலைகளாக மாறிய வேதங்கள்.. நடுவே அமர்ந்த லிங்கம்.. பிரம்மன் வழிபட்ட திரிசூலநாதர்
மலைகளாக மாறிய வேதங்கள்.. நடுவே அமர்ந்த லிங்கம்.. பிரம்மன் வழிபட்ட திரிசூலநாதர்

இன்றுவரை உலகம் முழுவதும் சிவபெருமானுக்கு எப்படி கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது என்பது மிகவும் ரகசியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் திரும்பும் திசை எல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

வழிபாட்டு முறையில் வித்தியாசம் இருந்தாலும் அனைத்து மக்களும் சிவபெருமானை வழிபடுவதற்கு இன்று வரை காரணம் தெரியவில்லை. மன்னர்கள் தொடங்கி சாதாரண மக்கள் வரை அனைவரும் சிவபெருமானின் பக்தர்களாக இருந்து வந்துள்ளனர். எத்தனையோ மன்னர்கள் தங்களது கலைநயத்தோடு மிகப்பெரிய கோயில்களை அமைத்து வழிபாடுகள் மேற்கொண்டுள்ளனர்.

ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் தஞ்சை பெரிய கோயில் வரலாற்றின் சான்றாக நின்று வருகிறது. இதுபோல எத்தனையோ கோயில்கள் எப்போது, யாரால் கட்டப்பட்டது என இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திரிசூலம் அருள்மிகு திரிசூலநாதர் திருக்கோயில்.

தல சிறப்பு

இந்த கோயிலில் வீற்றிருக்க கூடிய சிவபெருமான் திரிசூல நாதர் என அழைக்கப்படுகிறார். உடனுறை தாயார் திரிபுரசுந்தரி என அழைக்கப்படுகிறார். இந்தக் கோயிலில் தனி சன்னதியில் மார்க்கண்டேஸ்வரர் சோடச லிங்க வடிவில் காட்சி கொடுத்து வருகிறார்.

இந்த கோயிலில் கஜபுருஷ்ட விமானத்துடன் அமைந்துள்ள சன்னதியில் சிவபெருமானுக்கு அருகே சொர்ணாம்பிகை காட்சி கொடுத்து வருகிறார். அதற்குப் பிறகு தனி சன்னதியில் திரிபுர சுந்தரி காட்சி கொடுத்து வருகிறார். இந்த திருக்கோயிலில் இரண்டு அம்பிகையர் உள்ளனர்.

இந்த கோயிலில் தனி சிறப்பு என்னவென்றால் இங்கு வீற்றிருக்கக்கூடிய விநாயகர் நாகதோஷத்தை போக்கும் கடவுளாக திகழ்ந்து வருகிறார். வீராசாமி தட்சிணாமூர்த்தி இடது காலை குத்திட்டு சிவன் சன்னதி கோஷ்டத்தில் அமர்ந்திருக்கிறார். இதே சிவன் கோஷத்தில் இருக்கக்கூடிய நாக கணபதி உடலில் இருக்கக்கூடிய ஆறு ஆதாரங்களின் அடிப்படையான குண்டலினி கொண்டு நாக வடிவத்தில் காட்சி கொடுத்த வருகிறார்.

இந்த விநாயகரின் சிலை அங்கு இருக்கக்கூடிய சுவரை குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இவருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் நாகதோஷம் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இந்த கோயிலை சுற்றி நான்கு மலைகள் காணப்படுகின்றன. திருவண்ணாமலையில் தீபம் ஏற்றும் கார்த்திகை திருவிழாவின் போது இங்கு நான்கு மலைகளிலும் தீபம் ஏற்றப்படுகிறது. நரசிம்மரின் கோபத்தை தணிப்பதற்காக அவதாரம் எடுத்த சரபேஸ்வரர், ஒரு தூணில் சுய ரூபத்துடன் காட்சி கொடுத்து வருகிறார்.

குறிப்பாக இந்த சரபேஸ்வரர் இறக்கைகள் இல்லாமல் காட்சி கொடுத்து வருகிறார். தனது இரண்டு கைகளிலும் நரசிம்மரை பிடித்தது போல காட்சி கொடுத்துள்ளார். இப்படி ஒரு காட்சியை மற்ற கோவில்களில் அவ்வளவு எளிதில் காண முடியாது. வாழ்க்கையில் இன்னல்கள் விலக வேண்டும் என்பவர்கள் இங்கு நெய் விளக்கேற்றி வழிபாடு செய்கின்றனர்.

தல வரலாறு

படைத்தல் தொழிலை செய்து வருபவர் பிரம்மதேவர். ஒருமுறை தனது பணி சிறப்பாக நடக்க வேண்டும் என்பதற்காக சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து நான்கு வேதங்களையும் அதனை சுற்றி வைத்து பூஜை செய்து உள்ளார். பூஜைகள் மகிழ்ந்த சிவபெருமான் அவரது வேண்டுதல்களை அப்படியே நிறைவேற்றினார்.

அந்த லிங்கத்தைச் சுற்றி இருந்த நான்கு வேதங்களும் நான்கு மலைகளாக மாறி உள்ளது. மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியை எப்போதும் சுரம் என அழைப்பார்கள். அதன் காரணமாக எங்கள் வீட்டிற்குக் கூடிய சிவபெருமான் திருச்சுரமுடைய நாயனார் என அழைக்கப்பட்டுள்ளார். காலத்தால் மறுவப்பட்ட பெயர் திரிசூலநாதர் என அழைக்கப்பட்டுள்ளது. தற்போது சிவபெருமான் திரிசூலநாதராக இங்கு காட்சி கொடுத்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9