HT Yatra: வணிகர்கள் கட்டிய கோயில்.. கனவில் வந்த சிவபெருமான்.. கோயில் இல்லாமல் இருந்த கைலாசநாதர்..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: வணிகர்கள் கட்டிய கோயில்.. கனவில் வந்த சிவபெருமான்.. கோயில் இல்லாமல் இருந்த கைலாசநாதர்..!

HT Yatra: வணிகர்கள் கட்டிய கோயில்.. கனவில் வந்த சிவபெருமான்.. கோயில் இல்லாமல் இருந்த கைலாசநாதர்..!

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 04, 2024 06:30 AM IST

HT Yatra: காலத்தால் அழிக்க முடியாத எத்தனையோ சிறப்பு மிகுந்த கோயில்கள் இருந்து வருகின்றன. அந்த வரிசையில் இருக்கக்கூடிய சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரம் மாவட்டம் கோவளம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்.

வணிகர்கள் கட்டிய கோயில்.. கனவில் வந்த சிவபெருமான்.. கோயில் இல்லாமல் இருந்த கைலாசநாதர்..!
வணிகர்கள் கட்டிய கோயில்.. கனவில் வந்த சிவபெருமான்.. கோயில் இல்லாமல் இருந்த கைலாசநாதர்..!

கடவுளுக்கெல்லாம் கடவுளாக சிவபெருமான் விளங்கி வருவதாக சிவ பக்தர்கள் கூறுகின்றனர். அப்படியே தமிழ்நாடு பக்கம் வந்தால் காலடி எடுத்து வைக்கும் அனைத்து இடங்களிலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டுள்ளன. பாண்டியர் மற்றும் சோழர்கள் காலத்தில் இருந்து இன்று வரை சிவபெருமான் அனைவருக்குமான குலதெய்வமாக சிவபெருமான் திகழ்ந்து வருகின்றார்.

காலத்தால் அழிக்க முடியாத மொழியாக திகழ்ந்துவரும் தமிழ் மொழியின் ஆதி கடவுளாக சிவபெருமான் விளங்கி வருகின்றார். மண்ணுக்காக போரிட்ட காலத்திலும் தங்களது கலை நயத்தையும் மற்றும் பக்தியையும் வெளிப்படுத்துவதற்காகவே மிகப்பெரிய பிரம்மாண்ட கோயில்களை மன்னர்கள் கற்றுச் சென்றுள்ளனர் இன்று வரை சில கோயில்கள் யாரால் கட்டப்பட்டது என்று கூட கண்டுபிடிக்க முடியவில்லை அந்த அளவிற்கு சிவபெருமான் மீது அதீத பக்தி கொண்ட பக்தர்கள் அந்த காலத்தில் வாழ்ந்துள்ளனர்.

காலத்தால் அழிக்க முடியாத எத்தனையோ சிறப்பு மிகுந்த கோயில்கள் இருந்து வருகின்றன. அந்த வரிசையில் இருக்கக்கூடிய சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரம் மாவட்டம் கோவளம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்.

தல சிறப்பு

இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் கைலாசநாதர் என திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகிறார். திருமணத் தடை உள்ள பெண்கள் இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய அம்பாளும் சன்னதிக்கு சென்று தங்களது கையால் தாலி அணிவித்து வழிபட்டால் திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. குறிப்பாக சிவபெருமான் சன்னதிக்கு எதிரே இருக்கக்கூடிய நந்தி தேவருக்கு தாலி அணிவித்து பெண்கள் வழிபாடுகள் மேற்கொள்கின்றனர்.

வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ள சிவபெருமான் கோயிலாகும். பிதுர் தோஷத்தை நிவர்த்தி செய்வதற்காக அமாவாசை தினத்தன்று கடல் நீரால் இங்கு சுவாமிக்கு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

தல வரலாறு

ஒரு காலத்தில் இந்த பகுதியில் கடல் வணிகர்கள் வசித்து வந்துள்ளனர். அவர்களின் பயணத்தின் போது எந்த சிரமங்களும் இருக்கக் கூடாது என்பதற்காகவும், தங்களது தொழில் மற்றும் வியாபாரம் விருத்தி அடைய வேண்டும் என்பதற்காகவும் சிவபெருமானுக்கு இங்கு கோயில் எழுப்பி உள்ளனர்.

அதற்குப் பிறகு மிகப்பெரிய சிவபக்தனாக விளங்கிய பல்லவ மன்னர் ஒருவர் தன்னுடைய ஆட்சி காலத்தில் இங்கு சிவபெருமானுக்கு மிகப்பெரிய கோயிலை எழுப்ப வேண்டும் என்ற பணிகளை தொடங்கியுள்ளார். அதன் பின்னர் பல்லவ மன்னனின் கனவில் வந்த சிவபெருமான் அழிந்து போன தனது கோயிலின் லிங்கம் இருந்த இடத்தை சுட்டிக்காட்டி அங்கு சென்று அதை எடுத்து வா எனக் கூறியுள்ளார்.

அதன் பின்னர் சிவபெருமான் காட்டிய வழியின் படி மன்னன் அந்த லிங்கத்தை கண்டெடுத்து தான் எழுப்பப்பட்ட கோயிலில் வைத்து பிரதிஷ்டை செய்தார். அவருக்கு கைலாசநாதர் என்ற திருநாமத்தையும் கொடுத்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்