தமிழ் செய்திகள்  /  Astrology  /  If You Offer These Things To Anjaneya Or Hanuman Your Wish Will Be Fulfilled

பண மழையை கொட்டும் ஆஞ்சநேயர்.. பிடித்தமான பொருட்கள் இவைதான்.. வேண்டுதல்களை நிறைவேற்றுவார்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 24, 2024 09:53 AM IST

Hanuman: ஆஞ்சநேயரை வழிபாடு செய்யும்பொழுது அவரை திருப்தி படுத்தக்கூடிய ஐந்து விஷயங்கள் உள்ளன. அவ்வாறு இந்த ஐந்து பொருட்களைக் கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டால் அவர்களின் வேண்டுதலை ஆஞ்சநேயர் நிவர்த்தி செய்வார்

ஆஞ்சநேயர்
ஆஞ்சநேயர்

ட்ரெண்டிங் செய்திகள்

வாயுபுத்திரனாக விளங்கக்கூடிய ஆஞ்சநேயரை வழிபட்டால் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய நோய்கள், துக்கங்கள், பயம் அனைத்தும் விடுபடும் என நம்பப்படுகிறது. அன்னதானப் பிரியனாக விளங்க கூடியவர் ஆஞ்சநேயபெருமான்.

வாயுபுத்திரனாக விளங்கக்கூடிய ஆஞ்சநேயர் ஆன்மீகத்தின் தந்தையாகவும், குருவாகவும் கருதப்படுகிறார். இவர் சிவபெருமானின் அவதாரமாக கருதப்படுகிறார். ராமபிரான் மீது அதிக பக்தி கொண்ட காரணத்தினால் இவர் அவருடைய தொண்டராக விளங்கி வருகின்றார். பெருமாள் கோயில்களில் இவருக்கென தனி சன்னதி எப்போதும் உண்டு.

அஞ்சனையின் மகன் என்பதால் இவருக்கு அனுமன் என பெயர் வைக்கப்பட்டது. இருப்பினும் சமஸ்கிருதத்தின் படி ஹனு என்றால் தாடை என்று பொருள். மண் என்றால் மிகவும் பெரியது என்ற பொருள். பெரிய தாடையை உடையவர் என்கின்ற காரணத்தினால் இவருக்கு ஹனுமன் என பெயர் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கேசரி -.அஞ்சனை தம்பதிக்கு மகனாக பிறந்தவர் ஆஞ்சநேயர். வாயுவின் புத்திரனாக இவர் விளங்கி வருகின்றார். ராமாயணத்தின் படி இவரது பிறந்த இடம் கிஷ்கிந்தை என கூறப்படுகிறது. சிவப்பு நிறத்தில் வானில் இருக்கக்கூடிய சூரியனை பழுத்த பழம் என நினைத்து அதனை சாப்பிட வானிற்கு பறந்தவர் ஆஞ்சநேயர். இதனைக் கண்ட இந்திரன் அவரை வஜ்ராயுதத்தால் முகத்தில் தாக்கியுள்ளார். அந்த ஆயுதம் அவருடைய தாடை பகுதியில் தாக்கியது உடைந்த தாடையோடு பூமியில் இறந்து விழுந்தார்.

தனது மகன் இறந்துவிட்டான் என்ற காரணத்தினால் வாயு பகவான் உலகத்தில் காற்றை நிறுத்திவிட்டார். உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து உயிர்களும் துன்பப்பட்டது. உடனே சிவபெருமான் ஈடுபட்டு ஆஞ்சநேயருக்கு உயிரை கொடுத்து இந்த சிக்கலை தீர்த்து வைத்தார்.

அதன் காரணமாகவே அனுமனை வணங்க கூடியவர்கள், அவருக்கு படையல் வைக்கும் பொழுது அனைத்து விதமான இனிப்பு பண்டங்கள் உணவு வகைகள் உள்ளிட்டவைகள் வைக்கப்படுகிறது. அந்த வகையில் ஆஞ்சநேயரை வழிபாடு செய்யும்பொழுது அவரை திருப்தி படுத்தக்கூடிய ஐந்து விஷயங்கள் உள்ளன. அவ்வாறு இந்த ஐந்து பொருட்களைக் கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டால் அவர்களின் வேண்டுதலை ஆஞ்சநேயர் நிவர்த்தி செய்வார் எனக் கூறப்படுகிறது.

லட்டு

 

 

செவ்வாய்க்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு பூந்தியால் செய்த லட்டுக்களை கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டால் ஆஞ்சநேயர் மகிழ்ச்சி அடைந்து உங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவார் என நம்பப்படுகிறது.

உளுந்து லட்டுகள்

 

உளுத்தம் பருப்பில் செய்த லட்டுக்களை ஆஞ்சநேயருக்கு அதிகமாக வைத்து படைத்து வழிபட்டால் உங்கள் வேண்டுதல்களை அப்படியே நிறைவேற்றுவார் என கூறப்படுகிறது.

குங்குமம்

 

குங்கும வழிபாடு அனைத்து கடவுள்களுக்கும் விருப்பமான வழிபாடாகும் அதேபோலத்தான் ஆஞ்சநேயருக்கும் குங்கும வழிபாடு மிகவும் விஷேசமாக கருதப்படுகிறது. எப்போதும் ஆஞ்சநேயரை வழிபட்டால் குங்குமம் கட்டாயமாக இடம்பெற வேண்டும் என சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.

வெற்றிலை

 

வெற்றிலை வழிபாட்டால் ஆஞ்சநேயர் மிகவும் மகிழ்ச்சி அடைவார் எனக் கூறப்படுகிறது வெற்றிலைகளை ஆஞ்சநேயருக்கு சமர்ப்பிப்பதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய அனைத்து சிக்கல்களும் விலகும் என கூறப்படுகிறது. ஏனென்றால் ஆஞ்சநேயருக்கு வெற்றிலைகள் மிகவும் பிடிக்குமாம். அதன் காரணமாகவே ஆஞ்சநேயர் வழிபாட்டில் வெற்றிலை முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel